செந்தமிழில் நாசுவைக்க பொங்கு தமிழ் பொங்கிவர
சாதி மத பேதமின்றி ஊரும் உறவும் ஒன்றுபட்டால்
மேம்படுமே மனித நேயம்;
சிந்தித்து செயற்பட்டால் யாவுமே சிறப்பாகும்.
ஊருண்டு வளமுண்டு பேருண்டு, உறவுகள் பல உண்டு;
ஊர்கள் பல உறவுகளும் பல, இருந்தும் சிதறிக்கிடக்கிறோம் உலகெங்கும்;
ஊர்கள் மாறலாம் உறவுகளும் மாறலாம், மாறுமோ நம்பிணைப்பு;
வேற்றுமை பல உண்டு ஓற்றுமை சில உண்டு;
வேற்றுமையை புரிவதும், ஒற்றுமையை உணர்வதும் நம் ஆற்றலின் திறமையே;
வேற்றுமையிலும் ஒற்றுமை உண்டு, ஓற்றுமையிலும் வேற்றுமை உண்டு;
இல்லாதவர் பலர் உண்டு, இருப்பவர் சிலர் உண்டு;
வாழத்துடிப்பவர் பலர் உண்டு, வாழவைப்பவர் சிலர் உண்டு;
படிக்கத்துடிப்பவர் பலர் உண்டு, படிக்கவைப்பவர் சிலர் உண்டு;
வேருண்டு நீருண்டு, வேருக்கு நீர் பாய்ச்ச உறவினர் பலருண்டு;
அன்புள்ளங்கள் உண்டு, பண்புள்ளங்களும் உண்டு;
யாவற்றையும் ஒருங்கிணைப்பதே ஊரும் உறவும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
ஆக்கம்: லுக்ஸ் ஆனந்தராஐா