உலகத்தின் மிகப்பெரிய கோவிலைக் கட்டியது தமிழனா?

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.

திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும்.

முதலில் இந்த கோயில் இந்து கடவுளான விஷ்ணுவுகாக கட்டப்பட்டது. ஆனால் 14-15ம் நூற்றாண்டில் அது புத்த கோயிலாக மாற்றப்பட்டுவிட்டது.

இன்றைய கட்டிடவியல் வல்லுநர்களும் அறிவியல் அறிஞர்களும் வியக்கும் பிரம்மாண்டமான படைப்பு கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம். 500 ஏக்கரில் பரந்திருக்கும் இந்தக் கோயிலை ஒரு கலைப் பொக்கிஷம் என்று கூறலாம்.

இந்தக் கோயிலின் ஒரு பக்கச் சுற்றுச் சுவரின் நீளம் மூன்றரை கிலோமீட்டர். இந்தக் கோயிலுக்குள் நம் தமிழகத்து ஸ்ரீரங்கம் கோயிலைப் போன்று 20 கோயில்களை அடைக்கலாம்.

இக்கோயிலை முழுமையாகப் படம்பிடிக்க வேண்டுமென்றால், பூமியிலிருந்து சுமார் 1000 அடி மேலே சென்று வானத்திலிருந்து படம் எடுத்தால் மட்டுமே முடியும்.

இக்கோயிலை மேலிருந்து பார்க்கும்போது மூன்று அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது.
முதல் அடுக்கில் உள்ள சுவரில் ராமாயணம், மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாம் அடுக்கின் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

மூன்றாம் அடுக்கில் விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது. மேலும், இக்கோயிலுக்கு மிகப் பெரிய நான்கு நுழைவுவாயில்களும் உள்ளன.

கெமர், திராவிடக் கலைகளைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதால் கம்போடிய அரசின் தேசியக் கொடியில் தேசியச் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

இரண்டாம் சூரியவர்மன் அங்கோர் வாட்டை முதலில் ஒரு விஷ்ணு கோயிலாகத் தான் கட்டினார். சூரியவர்மன் இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த ஏழாம் ஜெயவர்மன் இதை பவுத்தக் கோயிலாக மாற்றினார்.


1992-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை உலக மரபுச் சின்னமாக அறிவித்ததுடன், அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது. உலகிலேயே மிகப் பெரிய கலைவடிவமாகக் கருதப்படும் இக்கோயிலை பார்க்க, ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கில் மக்கள் வருகிறார்கள்.

கொடியில் கோயில்:
இந்த நாட்டு கொடியில் அங்கோர்வாட் கோயிலை பறைசாற்றும் வகையில் இருக்கிறது என்றால் எந்தளவிற்கு இந்த கோயிலும் இந்த நாடும் இணைந்துள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

cambodia Flag

என்ன தான் புதிய விஞ்ஞானம், புதிய தொழில்நுட்பம் வந்திருந்தாலும், இன்றளவும் வியந்து பார்க்க வைக்கும் சிற்பங்கள், கட்டிடத் திறமையை காட்டும் விதமாக இந்த கோயில் அமைந்துள்ளதால் தான் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கக் கூடிய இடமாக அமைந்துள்ளது.

அங்கோர்வாட் பற்றிய தகவல்களை விக்கிபிடிய இணையதளத்தில் பார்பதற்கு இங்கே சொடுக்கவும்

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *