சலங்கையின் ஒலியில்
சலனம் கொண்டு
சங்கீத ஒலிக்கு ஆடிடும்-நங்கை
சலனத்தை என்நெஞ்சத்தில்
விதைத்ததும் உண்மை !
கவியாவும் இவள் அசைவின்
கால் சலங்கை ஒலியாகும்
விழி போடும் ஜாலங்கள்
விரலோடு இணைந்தாடும்
சதிராடும் இடை அங்கே
சந்தத்தை உருவாக்கும்
விழியாவும் அவள் அசைவில்
நிலையாக நின்று விடும்!
அலைமோதும் ஒலிக்கு அவள்
அசைந்தாடும் வேளையிலே
சிலையாக நான் இருந்து
அவள் சதிர்கண்டு மகிழ்கிறேன்
கொலுசாக மாட்டேனா?
அந்த ஒலியாக மாட்டேனா?
என்ற சிந்தையிலே ஆழ்கின்றேன்!
கவிஞர் சுதேரா