சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 4

கடந்த மூன்று தினங்களாக ‘துரைமுடக்கு’ எனப்பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது அந்த இடம்.

போப்துரை கொலை செய்யப்பட்ட அந்த இடம், தொழிற்சாலையி லிருந்து மூன்றாவது முடக்கு மறுமுனையில் பங்களாவிலிருந்து ஐந்தாவது முடக்கு தோட்டத்தில் அமைந்திருக்கும் பிரதான பாதையில் அந்த முடக்கை கொலை செய்வதற்கு தெரிந்தெடுத்தவர்கள் தோட்டப்பகுதியில் நன்றாக ஊறியவர்களாக இருக்க வேண்டும்.

அருகில் ஓடும் ஆற்றின் சலசலப்பு எந்த ஒலியும் வெளியே கேட்காதவாறு செய்துவிடும். மக்கள் நடமாடும் பகல் நேரத்திலேயே அந்த இடம் அமுங்கின இடமாக இருக்கும் போது இரவில் நடந்ததை எவர் அறிவார்?

‘பத்தரை மணிக்கு துரையின் கார் மேலே வருகிறது’ என்று ஸ்டோர் காவற்காரன் டெலிபோன் பண்ணி பங்களாவிலுள்ள துரையின் அப்புவிடம் சொல்லி இருக்கிறான்.

கார் கரேஜின் கதவைத்திறந்து வைத்துக் கொண்டு கால்மணி நேரமாக பார்த்திருந்த பங்களா காவற்காரன் அப்புவிடம் வழமையாக ஐந்து நிமிடத்தில் வரும் துரை கார் கால்மணி நேரமாகியும் வராதது குறித்து கதைத்துப் பார்த்தான்.

துரை இல்லாத நேரத்தில் பங்களாவின் முழுப் பொறுப்பும் அப்பு என அழைக்கப்படும் சமையற்காரனிடம் தானிருக்கும். அவனை மீறி எதுவும் செய்ய முடியாது, பங்களாவில் வேலை செய்யும் தோட்டக்காரன், பங்களா காவற்காரன், பங்களா டோபி என்று அவனுக்குக் கீழ் ஒரு கங்காணி ஆட்களிருக்கும்.

அப்புவின் மனதிலும் ஓர் ஐயம் எழுந்தது. காவற்காரனை அழைத்துக் கொண்டு கீழே போய் பார்த்து வர நினைத்தான். கையில் டார்ச் லைட்டோடு கார் ரோட் வழியாக ஸ்டோரை நோக்கி நடந்தனர்.

பங்களா மலையின் மீது அமைந்திருந்தது. அங்கிருந்து மெதுவாக நடந்துவந்து ஒவ்வொரு முடக்காக கடந்து வந்தனர். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாவது வளைவில் துரையின் கார் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக பாதையில் முருங்கை மரக்குற்றிகள் மூன்றை வைத்து வழி தடை செய்யப்பட்டிருந்தது.

துரையின் கார் பங்களாவுக்குச் செல்வதற்குத் தடை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. காவற்காரனுக்கும் பதட்டம் உண்டானது.

பத்தடிக்கு உள்ளாக சற்றுத்தள்ளி காரோரமாக துரை தரையில் வீழ்ந்து கிடந்தார், அவரது உடலைச் சுற்றி இரத்தம் கசிந்து கிடந்தது. அருகில், இரும்புக் கம்பிகளும் மரத்தடிகளும் கிடந்தன.

துரை யாருடனோ கட்டிப்பிடித்து உருண்டு புரண்டிருக்கிறார் என்பதை கசங்கியிருக்கும் அவரது உடுப்பும் ரோடில் ஏற்பட்டிருக்கும் புதிதாக புரண்ட மண்ணும் வெளிப்படுத்தியது, தன்னுடைய எஜமானுக்கு நேர்ந்திருக்கும் நிலைமையை எண்ணி அப்புவுக்கு அழுகை வந்தது. அப்புவை அங்கேயே நிற்கும்படி பணித்து விட்டு, பங்களா காவற்காரன் தொழிற்சாலைக்கு ஓடிச் சென்றான். பெரிய I. மேக்கருக்கும் தகவல் அனுப்பப்பட்டது.

அருகிலுள்ள பங்களாவிலிருந்த பெரிய 1. மேக்கர் உடனடியாக வந்தார். மளமள வென்று காரியங்கள் நடக்க தொடங்கின.

மேமலைத் தோட்டத்துரை ஹமில்டன் செய்தி கிடைத்த உடனேயே ஸ்தலத்துக்கு விரைந்தார். தன் நண்பனுக்குச் செய்ய வேண்டிய எல்லா காரியங்களையும் முன்னின்று செய்தார். டெலிபோனில் தொடர்பு கொண்டு உடலை பங்களாவுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகளைச் செய்தார். தோட்டப் பங்களாவில் முன்னறையில் வெள்ளைத் துணியால் மூடப்பட்டு அவரது சடலம் வைக்கப்பட்டது.

நேற்று வரை தோட்டத்திலே ஆட்சி செய்து கொண்டிருந்தவர், இன்று அதே தோட்டத்து மண்ணில் கொலையுண்டு கிடக்கிறார். இதுவரைக்கும் இப்படி ஒரு சம்பவம் இலங்கையில் நடைபெற்றதாக இல்லை. ஆச்சர்யத்துடனும், அதிர்ச்சியுடனும் அந்த உடலைப் பார்க்கக் கூட்டம்

நிரம்பி வழிந்தது. என்ன இருந்தாலும் துரையை இப்படி கொல செய்ய யாருக்கு மனம் வரும்.

முன் நின்று நிமிர்ந்து பேசுவதற்கே வேலைத்தளத்தில் யாருக்கும் தைரியம் வந்ததில்லை. அப்படி பேசுபவர்கள் அன்றே சிறைக்கு அனுப்பப் பட்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் இந்த சம்பவத்தை யார் செய்திருப்பார்கள்.

சிறையிலடைக்கப்பட்டு அங்கிருந்து தப்பி வந்த யாராவது செய் திருப்பார்களா?

தோட்டத்தில் கணக்கெடுப்பில் கலந்து கொள்ளாத ஏழு பேரில் எவரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்களா?

துரை கொலை செய்யப்பட்ட இடத்தில் சில பொருட்களை போலி சார் கண்டெடுத்தனர். சிவப்பு நிற கைக்குட்டையும் அதில் ஒரு முனையில் கட்டப்பட்டிருந்த சாவி ஒன்றும் அவர்களின் கவனத்தை ஈர்த்தன.

கண்டெடுத்த பொருட்கள் துரையினுடையவை அல்ல என்று பங்களா அப்புவும் வேலைக்காரர்களும் கூறினர். அவை தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களுடையனவா என்பதை அறியும் முயற்சியை முன்னெடுத்தனர்.

முதலில் காலை பிரட்டில் கணக்கெடுப்பு நடக்கையில் கலந்து கொள்ளாதவர்களின் லயக்காம்பராக்கள் முற்றுகையிடப்பட்டன. சில காம்பராக்கள் திறந்து விடப்பட்டு வீட்டில் மற்ற அங்கத்தவர்கள் இருந்தனர். மூன்று லயக்காம்பராக்கள் மூடப்பட்டுகிடந்தன. மூன்று காம்பராக்களிலும் யாருமில்லை. மூன்று காம்பரா கதவுகளில் அந்த சாவியைக் கொண்டு திறக்க முனைந்தனர்.

ஒரு காம்பரா திறந்து கொண்டது.

அந்த காம்பரா வேலாயுதத்துக்கு நிர்வாகத்தால் கொடுக்கப் பட்டதென்பதை பெரிய கங்காணி உறுதி செய்தார். வேலாயுதத்தை கைது செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எதையும் அதற்குள் உறுதி செய்ய முடியாதிருந்த போலீசார் காலைபிரட்டிற்கு வராதவர்கள் அத்தனைப்

பேரையும் முன் எச்சரிக்கையாக கைது செய்ய நினைத்திருந்தனர். துரை கொலையுண்ட இடத்தில் வேறு பொருட்களும் அகப்பட்டன. செப்புத்தகட்டிலான தாயத்து ஒன்று, அருகில் தெறித்து அறுந்து கிடந்த கறுப்புநிற நூலொன்று, பௌத்தமத குருமார்களால் உருவேற்றி அணிவிக்கப்பட்ட HAJ ஒன்றாக அது இருக்க வேண்டும்.

தோட்டத்து இளைஞர்கள் சமீபகாலமாக தாயத்து அணிவதில் அதிக அக்கறைகாட்டுகிறார்கள். பேய், பிசாசுகளிடமிருந்தும் தீய சக்தியிடமிருந்தும் அது தம்மைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை. போப்துரையுடன் சண்டையிடும்போது கட்டிப் புரண்ட ரகளையில் அது அறுந்திருக்க வேண்டும்.

முக்கிய தடையப் பொருளாக தாயத்தை போலீசார் எடுத்துச் சென்றனர்.

நேரம் ஆக ஆக நெருக்குவாரம் கூடியது. வைத்திய பரிசோதனையை பங்களாவில் முடித்துக் கொண்டு உடல் புசல்லாவை கிறிஸ்துவ ஆலயத்துக்கு அடக்கம் பண்ணுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

துரையின் உறவினர் என்று கூறிக்கொள்ளயாருமில்லை. அவரது மனைவி, துரைச்சாணி என்று அறியப்பட்ட ஒரு வெள்ளை மாது பங்களாவுக்கு வந்து அவரது பெட்டிகளை எடுத்துச் சென்றவுடன் அவரை பக்கத்து கிறிஸ்தவ ஆலயத்தில் புதைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

அவர் இருபது வருடங்களாக அந்த பங்களாவிலிருந்து குறுநில மன்னனைப் போல அத்தேயிலைத் தோட்டத்தைப் பராமரித்து வந்தார். காலை ஐந்து மணிக்கு துயிலெழுந்து பங்களாவைச் சுற்றி வர நடக்க ஆரம்பிக்கும் அவரது கால்கள் இரவு பன்னிரண்டு மணிக்குத் தான் ஓய்வுபெறும். நடந்து செல்லவும் குதிரையில் மலைகளைச் சுற்றிவரவும், மாலை நேரத்தில் காரில் பவனிவரவும் பயன்பட்ட கால்கள் இன்று நிர்ப்பந்தமாக ஓய்வெடுக்க பண்ணப்பட்டன. அவருக்கு நண்பர்கள் குறைவு, மேமலை தோட்டம் ஒன்று தான், அவருக்குப் பிரியமான நண்பர். மனைவியுடன் தங்குமிடம், அவரது குணநலன்கள் அந்த ஒருவரிடம் பழகுவதற்கு மாத்திரமே வழி வகுத்தது.

ப் பணியாற்றும் வெள்ளைக் காரர்கள் மாலைவேளைகளில் கிளப்களில் கூடி குடித்துக் கும்மாளமிடும் பழக்கம் அவரிடம் இருக்கவில்லை என்றில்லை. அந்தப் பழக்கத்தை அவருக்குள்ளாகவே செய்ய விரும்பினார். தனிமையில் செய்ய விரும்பினார்.

சுற்றுவட்டத்தில் பெருக்கெடுத்தோடும் மழைநீரினால் தாம் குடியிருக்கும் இடத்துக்கு சேதம் விளையாது தம்மைச் சுற்றிலும் புற்றுக்களை ஏற்படுத்திக்கொள்ளும் எறும்பினைப் போல அவர் வாழ்ந்தார்.

அவர் ஆசையுடன் வளர்த்த புல்டோக்’ கையினைச் சார்ந்த நாய் ஒன்று அவர் போகுமிடமெல்லாம் கூடவே போகும். ஒரு சிறந்த போர் வீரனைப்போல அவரைப்பின் தொடரும், அவருக்கெதிரில் கைநீட்டிப் பேசுவதற்கு யாரும் துணிவதில்லை. அவர்களைக் கடித்துக் குதறிவிடும். அது கூட அவருக்கு உதவவில்லை. மேமலை பங்களாவுக்குத் தீனிக்குப் போகும் போது அதை அழைத்துச் செல்வதில்லை. தனது தோட்டத்துக்குத் தான் தான் பெரியகங்காணி. தன் உயிருடனிருக்கும் வரைக்கும் தன்னை மீறி எதுவும் நடக்கக் கூடாது என்று அவர் கூறி வந்தார். அவரது ஆசைப்படியே நடந்தது.

அவரது மறைவுடன் அங்கு மாற்றங்கள் வரத்தொடங்கின.

தொடரும்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *