சேதி சொல்லும் செய்தித்தாள்!

இன்றைய தொழில்நுட்பம் எதுவும், ‘விரைவு-உணவு’(fast-food)போல திடீரென ஒரே நாளில் தோன்றி வளர்ந்து, பரவிவந்ததில்லை. அப்படித்தான்,செய்தித்தாளும் கருவாகி, உருப்பெற்று வளர்ந்து வந்த இன்றைய நிலையை அடைவதற்கு சிலநூற்றாண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது.செய்தித்தாள் என்னும் வடிவம்,முதன் முதலாக ரோமப்பேரரசில் தான் உருவாகியதாக வரலாறு சொல்கிறது. இரண்டாயிரத்து எண்பது ஆண்டுகளுக்கு முன்பு (59 BCE) , அன்றாட செயல்கள்’( Acta Diurna or Daily doings) என்னும் தலைப்பில்,முதல் செய்தித்தாள் உருவாகி வெளிவந்திருக்கிறது.அந்த செய்தித்தாளின் நகல் நமக்குக் கிடைக்கவில்லை.என்றாலும், கைகளால் எழுதப்பட்ட செய்தித்தாளில், தொடர்நிகழ்வுகள்(chronicles), மக்கள்கூட்டங்கள்(-assemblies), பிறப்பு, இறப்பு , அன்றாட அரட்டை(-daily gossip) போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.நவீன செய்தித்தாளின் (Modern Newspaper)முன்னோடி இதழ் ஒன்று இத்தாலியின் வெனிஸ்நகரிலிருந்து 1566-இல் வெளிவந்திருக்கிறது. அவை,கைகளால் எழுதப்பட்டிருந்தன. அரசியல், போர்கள் பற்றிய செய்திகள் அவற்றில் இடம்பெற்றிருந்தன.அச்சுக்கூட வசதி வருவதற்கு முன்பாக, கைகளால் எழுதப்பட்டதால், அவை குறைந்த எண்ணிக்கையையே (circulation)கொண்டிருந்தன.

முதல் அச்சுக்கூடம்:(The Birth of Printing Press)


ஜொகான்ஸ் குட்டன்பெர்க் (Johannes Gutenberg),ஜெர்மனியின் மெயின்ஸ் பகுதியைச்(Mainz, Germany) சேர்ந்தவர், நகைத்தொழில் செய்பவர்(Goldsmith).மெயின்சிலிருந்து நாடுகடத்தப்பட்ட குட்டன்பெர்க்,1440-இல் ஃப்ரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்போக்கில்(Strasbourg, France) குடியேறுகிறார். அங்கு வசித்தகாலத்தில், அச்சு (printing) பற்றிய ஆய்வில் ஈடுபடுகிறார். பத்தாண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் மெயின்சுக்குத் திரும்பும் குட்டன்பெர்க், 1450-இல்முதல் தட்டச்சு இயந்திரத்தை முழுமையாக வடிவமைத்து விடுகிறார். உலோகஅச்சைப்பயன்படுத்தி குட்டன்பெர்க் உருவாக்கிய நகரும்வகை அச்சு இயந்திரம் ஒரு நாளைக்கு 4,000 நகல்களை(copies) அச்சடிக்கக் கூடியதாக இருந்தது.எழுத்துக்களை பித்தளையில் ,சமதள ஆடிப்பிம்பம் போல் இடவல மாற்றத்துடன் உருவாக்கி (letters created in reverse in brass) அவற்றின் காரியநகலை (lead replica) எடுத்து பயன் படுத்தியிருக்கிறார் . எ ழு த் து க ள் ,சமதளப்பரப்பில் மேடுபள்ளம் இல்லாமல் ,ஒன்றோடொன்று பொருந்தியிருக்குமாறு அடுக்கப்பட்டிருக்கின்றன.உலோகத்தோடு ஒட்டக்கூடிய மையை அவரே தயாரித்துப் பயன்படுத்தியிருக்கிறார். அதன் பிறகு அச்சுத்தொழில்நுட்பம், பல காலகட்டங்களில், பலமாற்றங்களை அடைந்து, இன்றைய ‘இலக்கஅச்சகம்’ (Digital Printing Press) வரையிலும் முன்னேறி வந்துள்ளது.

குட்டன்பெர்க் அச்சு இயந்திரமும் முதல் செய்தித்தாளும்:


குட்டன்பர்க் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட முதல் வார இதழ், 1609-இல் வெளிவந்திருக்கிறது. அதன்பிறகு, பல அச்சிதழ்கள் வெளிவந்துள்ளன. அரசுக்கு எதிராக விமர்சனங்கள் வைத்த அவை வெளியான நகரங்கள் தெரியவில்லை என்றபோதும், அவை அனைத்தும் மெற்குஜெர்மனியில் தான் வெளிவந்துள்ளன. என்று யூகிக்கமுடிகிறது.இந்த செய்தித்தாள்கள், மிக விரைவில் மத்தியஐரோப்பா முழுவதும் பரவிப் பிரபலமாகிவிட்டன.அடுத்த ஐந்து ஆண்டுகளில், பெசல் (Basel),ஃப்ராங்க்ஃபர்ட் (Frankfurt), வியன்னா(Vienna),ஹ ம ்ப ர் க் (Humburg), பெ ர் லி ன் ( B e r l i n ) ,ஆம்ஸ்டர்டேம்(Amsterdam), ஆகிய நகரங்களில் வாரஇதழ்களாக எட்டிப்பார்த்தன.பதிப்பு (publication) ஃப்ரான்ஸ், இத்தாலி,ஸ்பெயினுக்குப்பரவியபிறகு 1641-இல், ஐரோப்பாவின் ஒவ்வொரு நாட்டிலும் செய்தித்தாள் அச்சாகி,வெளிவரலாயிற்று. 1650-இல் ஒரு ஜெர்மன்பதிப்பாளர், இன்றும் காணக்கிடைக்கும் உலகின்மூத்தநாளிதழை (Einkommende Zeitung) வெளியிட்டார்.அன்றைய செய்தித்தாள்க ள் , இ ரண்டு வடிவமைப்புகளில் (formats) வெளிவந்துள்ளன.ஒன்று, டச்சு வடிவம் (Dutch-style). அந்தசெய்தித்தாளில், செய்திகள் மிகவும் நெருக்கமாக அச்சிடப்பட்டிருக்கும். இரண்டு அல்லது நான்கு பக்கங்களைக் கொண்டிருக்கும். இரண்டாவது,ஜெர்மன் வடிவமைப்பு (German-style). 8 முதல் 24வரையிலானப் பக்கங்களைக்கொண்டது, அளவில்பெரியது. பெரும்பாலான பதிப்பாளர்கள், டச்சுவடிவமைப்பில் துவங்கி, மக்களிடையே பரவலாகப்பிரபலமானபிறகு, ஜெர்மன் வடிவமைப்பிற்கு மாறியிருக்கின்றனர்.

இங்கிலாந்தில் செய்தித்தாளும், அச்சுரிமையும்:Freedom of Press


1621-இல், இங்கிலாந்தில், முதல் செய்தித்தாள் ,Cornite என்னும் தலைப்பில் வெளிவந்தது. இத்தாலி,ஜெர்மனி, ஹங்கேரி, போலந்து, பொஹீமியா,ஃப்ரான்ஸ் மற்றும் சில கீழை நாடுகளின் வாராந்திரசெய்தி என்னும் பொருளில் அந்த செய்தித்தாள் வெளிவந்திருக்கிறது .இங்கிலாந்தில், பெரும்பாலான செய்தித்தாள்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. அதனால்,உள்நாட்டு செய்திகள் (local news) இடம்பெறவில்லை.1641-இல், இங்கிலாந்தில் உள்நாட்டுப்போர் உருவானது. மன்னர் சார்ல்ஸ்-1(Charles-1)இன் அரசு கவிழ்க்கப்பட்டது. அந்தத்தருணத்தில், அன்றாடம் நிகழும் உள்நாட்டு செய்திகளை அறிய மக்கள் அதிகஆர்வம் காட்டினர். அதே ஆண்டில், உள்நாட்டு செய்திகளை (domestic news) உள்ளடக்கிய வார இதழ்,‘The Heads of Several Proceedings in This Present Parliament’ வெளிவந்தது. அந்த இதழ், உள்நாட்டுச்செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில்,அச்சுரிமை (Freedom of Press) பேசுபொருளானது.1644-இல் ஜான் மில்டன் (John Milton) தனது Areopagitica என்னும் கட்டுரையில் செய்தித்தாள்கள்மீது விதிக்கப்பட்டிருந்த ஒழுங்குமுறைகளை மிக கடுமையாக விம ர்சித்திருந்தார் .அது ஏற்படுத்தியத் தாக்கத்தில், இங்கிலாந்தில்செய்தித்தாள்கள் அரசுக்கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கபட்டன . செய்தித்தாள்களின் வலிமையையும்,அவற்றிற்கான உரிமைகள் எத்தனைஅவசியம் என்பதையும் மக்கள் உணரத்துவங்கினர்.இதனைப் பயன்படுத்திக்கொண்டசெய்தித்தாள்கள், வாரம் இருமுறை வரத்துவங்கின.விளம்பரங்களும், சந்தை நிலவரமும் இடம்பெறலாயின . இதனால், வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருந்த செய்தியாளர்கள் ( j o u r n a l i s t s ) ,தீவிரப்பங்கேற்பாளர்களாக மாறினர். தங்களது உற்பத்திப்பொருளை, சிறந்த முறையில் மக்களிடம்கொ ண் டு சேர்க்க , முதலாளிகளும் ,வணிகநிறுவனங்களும் செய்தித்தாள்களைச் சார்ந்திருக்கும் நிலை உருவானது.1702-இல், இங்கிலாந்தின் இலண்டன் நகரிலிருந்து,முதல் ஆங்கில நாளிதழ் ( D a i l y C o u r a n t ) வெளிவரலானது. வெளியிட்டவர், எலிசபெத்மேலட் (Elizabeth Mallet) இப்படி வெளிவந்த நாளிதழ்கள், புதியமுறையிலான தலைப்புகளுடன்,புதிய வடிவில் செய்திகளை வெளியிட்டு, அன்றாடம் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை, மக்களிடம் ஏற்படுத்திவிட்டன.

அமெரிக்காவில் செய்தித்தாள் அறிமுகம்:

காலனி நாடான அமெரிக்காவில் 1690, செப்டம்பர்25-இல் பெஞ்சமின் ஹேரிஸ் (Benjamin Harris) ,வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு செய்திகளைஉள்ளடக்கமாகக்கொண்ட Public Occurrencesஎன்னும் செய்தித்தாளை வெளியிட்டார். அதற்கு முன்பாக அமெரிக்காவில் செய்தித்தாள்கள்அறிமுகம் ஆகியிருக்கவில்லை. 14 ஆண்டுகளுக்குப்பிறகு, The Boston News -Letter செய்தித்தாள் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து மேலும் சிலசெய்தித்தாள்கள் வெளிவரலாயின.1791-இல், விடுதலை பெற்ற அமெரிக்காவில் இயற்றப்பட்ட சட்டம், முறைப்படி ஊடகஉரிமையை உறுதிசெய்தது. என்றாலும், தீவிரபிரிவினை செய்திகள் இடம்பெற்ற காரணத்தால்,சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.அரசுக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான செய்திகளை எழுதினால், அச்சிட்டால், அவர்களுக்குஅபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று 1798-இல் தேசவிரோதச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

பென்னி அச்சகம்: (The Penny Press)


1800-களின் பிற்பகுதி வரையிலும், அமெரிக்காவில்ஒரு நாளிதழின் விலை, 6 சென்ட். அப்படிப்பட்கூடுதல் விலைகொடுத்து சாதாரண மக்கள் செய்தித்தாள்கள் வாங்குவது இயலாத காரியமாக இருந்தது. எனவே, செய்தித்தாள்கள் வாங்குவதும்,வாசிப்பதும் உயர்குடியினருக்கானது என்னும் அளவில்தான் இருந்தது.1833-இல் பெஞ்சமின் டே (Benjamin Day) என்னும்அமெரிக்கர், The Sun செய்தித்தாளை, ஒரு பென்னி(one cent) என்னும் மிகவும் மலிவான விலைக்கு விற்பனை செய்தார். அது, சாமானியர்களிடமும்,செய்தித்தாள்களை கொ ண் டு சேர்த்தது. பெஞ்சமின்டே இரண்டு வகையான அச்சு இயந்திரங்களைப் பயன்படுத்தினார். பழைய வகை, ஒரு மணிநேரத்தில் 125 பிரதிகளை அச்சடித்தன. புதிய வகை,ஒரு மணி நேரத்தில் 18,000 பிரதிகளை அச்சடித்தன.சாமானியர்களும் வாங்கும் வகையில், அன்றாடசெய்திகளோடு, வணிக விளம்பரங்களையும் கொண்டு சேர்ப்பதே, பென்னி நாளிதழின் நோக்கம்’என்பதை செய்தித்தாளின் ஒவ்வொரு பக்கத்தின்மேற்பகுதியில்அச்சிடப்பட்டது. பென்னிஅச்சகத்தில் அச்சிடப்பட்ட முதல்செய்தித்தாளான ‘தி சன்’ (The Sun)1835-இல் நாளொன்றிற்கு 15,000பிரதிகள் விற்றன.1835-இல், James Gordon Bennetஎன்பவரால் ஆரம்பிக்கப்பட்ட NewYork Morning Herald மற்றொரு ‘பென்னி’செய்தித்தாளாகும். பென்னட் தான்முதன்முதலாக, ஒரு செய்தியாளரை,குற்றம் நடந்த இடத்திற்கு நேரடியாக அனுப்பி, செய்தி சேகரிக்கும் முறையைஉருவாக்கியவர். 1860-இல் பென்னட்,அமெரிக்காவின் உள் நாட்டு போரின்போ து ,நேரடியாகப் போர்க்களத்திலிருந்து போர்ச்செய்திகளைக் கொண்டு வர 63போர்ச்செய்தியாளர்களை நியமித்தார்.Herald ஆரம்பத்தி ல் உணர்வுப்பூர்வமான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது உண்மை என்ற போதும், பின்னாளில், அது அனைவராலும் போற்றப்படும் வகையில் செய்திகளைத் துல்லியமாகவும், நடுநிலையோடும் வெளியிட்டது.பதிப்புத்துறையில், ‘தந்தி’யின் தாக்கம்:சாமுவேல் மோர்ஸ் (Samuel Morse), தந்தியை(Telegraph) கண்டுபிடித்த பிறகு ,தொலைதூரங்களிலிருந்து செய்திகள் விரைந்துவரலாயின. அனைத்து செய்தித்தாள் மையங்களும் தந்தி அலுவலகங்களாக மாறின. செய்தித்தாள் வரலாற்றில், இது மிகப்பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியது. 1986-இல், அமெரிக்காவில் ஐந்து செய்தித்தாள் நிறுவனங்கள் இணைந்து ,அசோசியேட் பிரஸ்’ (Associate Press) உருவானது.அ த ன் வெற்றி காரணமாக, அனைத்து பெருநகரங்களிலும் ‘கம்பி’ வழியாக (through wire)செய்திகளைப்பெறும் வசதிக்கு, செய்தி நிறுவனங்கள் தள்ளப்பட்டன

.

மஞ்சள் இதழியல்: (Yellow Journalism)


1880-இல், New York World பதிப்பாளர் ஜோசப்புலிட்சர் (Joseph Pulitzer), புதுவகையான இதழியலை அறிமுகப்படுத்தினார். குற்றம் (crime), வன்முறை(violence), மிகையுணர்வு (emotion), பாலியல் (sex)ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டசெய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. தமிழ்ச்சூழலில், இப்படிப்பட்ட ‘சதக் சதக்’, ‘படக்படக்’ செய்திகள்தான், தமிழ்நாட்டில் தினத்தந்தி நாளிதழை சாதாரண மக்களிடமும் கொண்டுசேர்த்தது என்பது நாம் அறிந்த வரலாறு. ஸ்பெயினுக்கும், அமெரிக்காவிற்கும் நடந்தபோரில், புலிட்சர் செய்தித்தாள் முதல் பக்கத்தில்,உண்மைக்குப் புறம்பான உணர்வுகளைத் தூண்டும்செய்திகளை வெளியிட்டது. அதிக எண்ணிக்கையில் பிரதிகள் விற்பதற்காக இப்படிப்பட்ட செய்திகளுக்குமுக்கியத்துவம் தரப்பட்டது இதனை மனதிற்கொண்டே,இதழியல் துறையின் மிகவும்பெருமைக்குரிய விருது (Journalism’s most prestigious award) ,புலிட்சர் பெயரில் வழங்கப்படுவது நகைமுரண் என்கின்றனர்
வரலாற்று அறிஞர்கள்.செய்தித்தாள் விற்பனைக்காக,இதழாசிரியர்கள் அதிர்ச்சியூட்டும் தலைப் பு ச் செய்திகளைப் பயன் படுத்தினர். நமக்கு சலிப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தும் இன்றைய காட்சி ஊடகங்களின் 24 மணிநேர BigBreaking News-க்கான அடித்தளம் அன்றே போடப்பட்டு விட்டது.வில்லியம் ரேண்டால் ஃ ப்ஹார்ஸ்ட் (William Randolph Hearst),புலிட்சருக்குப் போட்டியாக NewYork Journal என்னும் செய்தித்தாளை நடத்தினார்.இந்த இரண்டு பேருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.மிகை உணர்வு மற்றும் வன்முறைச் செய்திகளை வணிக நோக்குடன் பயன்படுத்தியதால், புலிஸ்டர் மற்றும் ஹார்ஸ்ட் நடத்திய செய்தித்தாள்களை,ரிச்சர்ட் கே.ஹைன்ஸ் (Richard K Hines) என்னும் வரலாற்றாளர், ‘மஞ்சள் பத்திரிகை’ (Yellow press)என்று பெயரிட்டு அழைத்தார்.. பிற்காலத்தில்மஞ்சள் பத்திரிகை’ என்பது, பாலியல் செய்திகளைமட்டுமே குறிப்பதாக, நடைமுறையில் மாறிப்போனது.

தொடரும்……..

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *