சேதி சொல்லும் செய்தித்தாள் (சிறகு 2 )

முதற்பகுதியை வாசிக்க இங்கே செல்லவும் (சிறகு1 )

படக்கதைகளாலான இதழியல்(Comic journalism)


செய்தித்தாள்களின் வாசகத்தளத்தை மேலும்அதிகரிக்கும் விதமாக, 1896-இல் ஹார்ஸ்ட்டின் ‘ நியு யார்க் ஜேர்னல்’ (New York Journal by Hearst) ஆங்கிலம் தெரியாதவாசகர்களை ஈர்க்கும் விதமாக, ‘அவுட்கோ’ – (Outcault)-வின்மஞ்சள் சிறுவன்’ (Yellow Kid) என்னும் படத்தை வெளியிட்டது.அது, எதிர்பார்த்ததை விடவும் அதிக அளவில் வாசகர்களை ஈர்த்தது. படக்கதைகள், வாசகர்களிடம், ஒருவித மயக்கத்தையே(hysteria) ஏற்படுத்திவிட்டது. எந்த அளவிற்கு அது பிரபலமானது என்றால், மிகவிரைவில், அந்த ‘மஞ்சள் சிறுவன்’ படம், (இன்றையஸ்பைடர்மேன் போல) பொத்தான்கள், சிகரெட் டப்பாக்கள்,பெண்களின் கைவிசிறிகள் போன்றவற்றில் எல்லாம் இடம்பிடித்துவிட்டது. அப்படிப்பட்ட செய்தித்தாள்கள்,மஞ்சள்நிறம் காரணமாக, ‘மஞ்சள் இதழியல்’ (Yellow Journalism)என்று அழைக்கப்படலாயின. (பாலியல் என்னும் பொருளில்அல்ல)


கவன ஈர்ப்பு இதழ்கள்: (Stunt journalism)


‘நியு யார்க் ஜேர்னல்’ செய்தித்தாள்களில் மஞ்சள் சிறுவன் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்ந்த புலிட்சர், தனது செய்தித்தாளில்,‘கவன ஈர்ப்பு தந்திரங்களை’(stunt) பயன்படுத்தலானார். எலிசபெத்கொஹ்ரேன் (Elizebeth Cochrane) என்னும் பெண், நெல்லி ப்லை(Nellie Bly) என்னும் புனைபெயரில் எழுதிவந்தார். அதற்கு முன்பு மற்றவர்கள் எழுதாததை எழுதினார். அவரது எழுத்துகளை‘புலிட்சர்’ செய்தித்தாள் பயன்படுத்திக் கொண்டது.நெல்லி ப்லை (Nellie Bly) நியூயார்க்கில் இருந்த ‘மனநிலைகுறைந்தவர்களுக்கான மருத்துவமனை’ பற்றி எழுதினார். அவரே அங்கு அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவரது அனுபவங்களை,‘பைத்தியக்காரக் குடிலில் பத்து தினங்கள்’ (Ten Days in a Madhouse)என்னும் தலைப்பில் எழுதியது மிகவும் பிரபலமாகியது. அதன்தாக்கமாக,செய்தித்தாளின் உள்பக்கங்களில் ‘பெண்கள்பகுதியில்’ இடம் பெற்ற பெண்களுக்கான செய்திகள் செய்தித்தாளின் முதல் பக்கத்திற்கு நகர்ந்தன.ஹார்ஸ்ட் மற்றும் புலிட்சர் தங்களது செய்தித்தாள்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பயன்படுத்திய வழிமுறைகளுக்குஅப்பாற்பட்டு, இருவருமே இதழியல் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றினர் என்பதை மறுக்க முடியாது என்று வரலாற்றுஆசிரியர்கள் சொல்கின்றனர். 1917-இல் இதழிலியலில்சிறந்தவர்களுக்கான முதல் புலிட்சர் பரிசு (Pulitzer Prize)வழங்கப்பட்டது

கருத்துரிமை:


1948-இல், ஐக்கிய நாடுகளின் பொதுமன்றம், “ஓவ்வொரு தனிநபருக்கும் கருத்துரிமை உண்டு. கருத்துரிமை என்பது,எந்தவிதமான கருத்தையும், தகவலையும், எந்த ஒரு ஊடகத்தின்வழியாகவும் பெறுவதற்கான உரிமையும் ஆகும்.” என்றுமுடிவெடுத்து அறிவித்தது.


பதிப்புரிமை (Freedom of Press)பற்றிய லெனின் கருத்து:


1917-இல், ர ஷ்யப் பு ர ட்சி முடிந்த சூழலிலு ம் ,செய்தித்தாள்களுக்கானக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன.அவற்றை நீக்கவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்துநடந்த கூட்டத்தில் விளாடிமிர் லெனின் (Vladimir Lenin)“செய்தித்தாள் வெளியீடு என்பது, மிகுந்த இலாபம்தரும் தொழில் பணக்காரர்கள், பலமில்லியன் பணத்தை முதலீடு செய்து,கொள்ளையடித்துக் கொழுக்கின்றனர். நடுத்தர, மேல் நடுத்தரவர்க்கத்தினர் பேசும், (bourgeois press ) ‘பதிப்புரிமை’ என்பது,பெரும்பணம் படைத்தவர்களின் உரிமையே ஆகும், தினமும், பல மில்லியன் செய்தித்தாள்களை அச்சிட்டு, ஏழை எளியவர்களை,பணம் படைத்தவர்கள் ஏமாற்றுவதற்கான உரிமையாகவே அது இருக்கும். புரட்சி முற்றாக முடிந்துவிடவில்லை . எதிரிகள் இன்னமும் நம்மிடையே உள்ளனர்.இந்தச்சூழலில் செய்தித்தாள்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை நீககமுடியாது” என்றுபேசுகிறார். அதன் பிறகு நடந்தவாக்கெடுப்பில், லெனின் தீர்மானம் வெற்றியடைந்தது. மற்றொரு கம்யூனிச நாடான சீனாவில், உலகில்வேறு எந்த நாட்டையும் விட,மக்களின் கருத்துரிமை மற்றும் பேச்சுரிமை வெகுவாக முடக்கப்பட்டுள்ளது.இரும்புத்திரை நாடுகள்:ஐரோப்பிய நாடுகளான போலந்து,கி ழ க் கு ஐெர்மனி,செக்கோஸ்லோவேகியா,ஹங்கேரி,யூகோஸ்லேவியா,ரொமேனியா,பல்கேரியா, சோவியத் ஒன்றியம்ஆகியவை ‘இரும்புத்திரை நாடுகள்’என்று அழைக்கப்பட்டன. காரணம்,அந்த நாடுகளில் என்ன நடக்கிறது என்பது உலகின் பிற பகுதியினருக்குத் தெரியாத அளவிற்கு ஊடக உரிமைகள் முடக்கப்பட்டிருந்தன.வட கொரியா, கியூபா ஆகிய கீழைநாடுகளும் கூட அது போன்றத தொருநிலையில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

இலக்க யுகம்: (Digital Era)


பொதுவாக அறிவியல், தொழில்நுட்பம் ,கலாச்சாரம் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்கள் மிக மெதுவாகவே நிகழும் என்பதைத்தான் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அதிலிருந்து மாறுபட்டு,கடந்த 50 ஆண்டுகளில் எலக்ட்ரான் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட அதிவிரைவு மாற்றங்கள் ஒட்டுமொத்த மக்களின் அன்றாடவாழ்க்கையைப் புரட்டிப்போட்டிருக்கிறது .குறிப்பாகத் தகவல் பரிமாற்றம் அசுர வளர்ச்சியடைந்திருக்கிறது.செய்திகள் பறவைகளாலும், நடந்துசெல்லும் ஆட்களாலும், குதிரைகளில் சவாரிசெய்பவர்களாலும் கொண்டு சேர்க்கப்பட்டஆரம்பக்காலம் , தந்தி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வேகம் எடுக்கிறது. கம்பியில்லாத்தந்தி (wireless)கண்டுபிடிக்கப்பட்ட பிறகு முடுக்கம் பெறுகிறது.தொடுதிரை-கைபேசிகள் (smart phones) வந்துவிட்டபிறகு, ஒரு செய்தி ஒரு நொடியில் உலகம் எங்கும் சென்று விடுகிறது. தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் (communication satellites)அதற்கு முதன்மையான காரணமாகும்.


இணைய இதழியல்: (Internet Journalism)


இலக்க யுகத்தில், செய்தித்தாள்களும், தாளில்அச்சிடும் நீண்டகால நடைமுறையிலிருந்து மாறி,லக்ட்ரானிக் செய்தித்தாள் என்னும் புதிய வடிவம்(e-paper) எடுத்திருக்கிறது. 2019-2021 கொரோனா ஊரடங்குக் காலகட்டத்தில், பல செய்தித்தாள்கள் காணாமல் போன சூழலிலும், சில செய்தித்தாள்கள் முடங்கிவிடாமல் உயிர்ப்புடன் இருந்ததற்கு அது வழி வகுத்தது. அச்சு செய்தித்தாள் போல் அல்லாமல்,எலக்ட்ரானிக் செய்தித்தாளில், செய்தித்தாள் வெளியான பிறகும் தவறான செய்தியை சரி செய்ய முடியும், நீக்கமுடியும், புதிய செய்தியை சேர்க்கமுடியும், வாசகர் கருத்துகளைப் பதிவிடவும்முடியும். இன்றைய சூழலில், யார் வேண்டுமானாலும்,ஒரு இணைய இதழைக் கொண்டுவந்துவிட முடியும்.

இந்தியாவின் முதல் செய்தித்தாள்


ஹிக்கிஸ் பெங்கால் கெசட் (Hickey’s Bengal Gazette)நாளிதழ் 1780 ஜனவரி 29 அன்று கல்கத்தாவில் முதன்முதலாக வெளியானது. அயர்லாந்தைச்சேர்ந்த ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி (James AugustusHickey) என்பவரால் துவங்கப்பட்டது. அன்றைய ஆங்கிலேய கவர்னர் வாரன் ஹேஸ்டிங்சின் (WarenHastings) நிர்வாகத்தின்மீது மிகக்கடுமையான விமர்சனங்களை வைத்தது. முதல் செய்தித்தாள் என்பதோடு ஊடக உரிமைக்காகக் குரல்கொடுத்த முதல் இதழ் என்றும் அதனைச் சொல்லலாம்.

தமிழில் முதல் செய்தித்தாள்:


1831-இல், ‘கிறிஸ்தவ சமயம்’ என்பது முதல் தமிழ்நாளிதழாக வெளிவந்திருக்கிறது. 1853-இல் ‘தினவர்த்தமானி’ முதல் தமிழ் வார இதழாக வெளிவந்தத1870-க்குப் பிறகு தமிழ்நாட்டில், தமிழிலும் ,ஆங்கிலத்திலும் பல செய்தித்தாள்கள் வரத்துவங்கின.1882-இல் வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா இணைந்து நடத்திய ‘பிரபஞ்சமித்திரன்’, ‘ஞானபானு’,1882-இல் வார இதழாகத் தொடங்கி, 1889-இல் நாளிதழாக மாறிய ‘சுதேசமித்திரன்’, 1906-இல் வேதமூர்த்தி முதலியாரின் ‘சர்வஜனமித்திரன்’,சென்னை இராயப்பேட்டையிலிருந்து 19 ஜூன் 1907முதல் புதன்கிழமை தோறும் நான்கு பக்கங்களுடன்அன்றைய காலணா விலையில் வெளிவந்தஅயோத்திதாசரின் ‘ஒரு பைசாத்தமிழன்’, 1907-இல் பாரதியாரின் ‘இந்தியா’, 1917-இல் திரு.வி.க-வின்திராவிடன், தேசபக்தன், நவசக்தி, 1917-இல் வ.வெ.சு. ஐயரின் பாலபாரதி, 1920-இல் வரதராஜுலுவின்‘தமிழ்நாடு’, குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய சிலமுன்னோடி தமிழ் இதழ்களாகும்.

இலங்கையில், 1841-இல் அமெரிக்க-இலங்கைமிஷன் மூலம் முதல் தமிழ் செய்தித்தாள், ‘உதயதாரகை’ வெளியிடப்பட்டது. ‘ஈழநாடு’ என்னும் நாளிதழ், யாழ்ப்பாணத்திலிருந்து 1959-ஆம் ஆண்டுவெளிவந்தது. ஆரம்பத்தில், வாரம் இருமுறை என்று வெளிவந்த ‘ஈழ நாடு’ 1961 முதல் நாளிதழாக மாறியிருக்கிறது. 1981-இல் யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டபோது, அதே வன்முறைக்கும்பலால், ‘ஈழநாடு’ அலுவலகமும் எரிக்கப்பட்டது. 1987-இல் இந்திய அமைதி(?)ப்படையால் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதப்படுத்தப்பட்டது. சிறுசிறு இடைவெளிகளில் விட்டுவிட்டு வெளிவந்த ‘ஈழநாடு’, 1990-இல்நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.15-ஆம் நூற்றாண்டில் ஊற்றெடுத்த செய்தித்தாள்,இலக்கியம், வணிகம், அரசியல், வேளாண்மை,மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி,பாதுகாப்பு, சிறுவர், மகளிர், முதியவர், திரைப்படம்என்று பல்துறைசார்ந்தும், நாளிதழ், வார இதழ், மாதஇதழ், ஆண்டுமலர் என்று பல்வேறு கால இடைவெளிசார்ந்தும், கையிதழ், அச்சு இதழ், மின்னிதழ் என்று பல்வேறு வடிவங்களிலும் ஆறுகளாகப்பாய்ந்து, 21-ஆம் நூற்றாண்டில் பெருங்கடலாகப் பரந்து விரிந்திருக்கிறது.ஊற்றெடுக்கும் அத்தனை ஆறுகளும், கடல்சென்று சேர்வதில்லை. செய்தித்தாள்களுக்கும் அது பொருந்தும். பல இதழ்கள், பொருளாதாரம் உள்ளிட்ட சில காரணங்களால், தொடங்கிய வேகத்திலேயே நின்றும் போயிருக்கின்றன.

சில செய்தித்தாள்கள் நேர்மையாக செய்திகளை வெளியிட்டதற்காக, அரசுகளால் முடக்கப்பட்டதும் உண்டு.செய்தித்தாள் தொடங்கிய 1 5 – ஆ ம்நூற்றாண்டிலேயே, ஊடக உரிமைக்காக, அரசுடன் மோதிய செய்தித்தாள்களும் இருந்திருக்கின்றன.‘நடுநிலைமை’ பேணலும், மக்களுக்கு நேர்மையாக இருத்தலும், ஊடகத்தின் முதன்மையான பண்பாக இருத்தல் வேண்டும். ஆனால், இன்று பெரும்பாலான ஊடகங்கள், அரசுடன் சமரசம் செய்துகொள்வதைப்பார்க்கமுடிகிறது. பெரிதும் கார்பொரேட்டுகளால் நடத்தப்படும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரியும் இதழாளர்கள் ,முதலாளிகளுடனும், அரசுடனும் சமரசம் செய்வதையும் பார்க்க முடிகிறது.ஜனநாயகத்தின் நான்காவது தூண்,இதழியல்துறை என்று சொல்லப்படுகிறது.தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ .ஜெயலலிதா மரணம் அடைந்து ,எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதியஅரசு அமைந்த உடன், தமிழக ஊடகவியலாளர்கள் அனைவரும் டில்லிக்கு அழைக்கப்பட்டு, பாரதப்பிரதமர் மோதியுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. அந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது இதுவரையிலும் வெளிவரவில்லை .

இரகசியங்களை வெளிக்கொணர வேண்டிய ஊடகங்களே , ஒளிவுமறை வோ டு செயல்பட்டால், நாட்டில் ஜனநாயகம் பேணப்படுவதற்கான வாய்ப் பு இல்லைதானே?இப்படிப்பட்ட சூழலில், இலக்கியம் மீதான ஆர்வம் காரணமாக, 2012-ஜனவரிமுதல் சட்டப்படியான ‘காக்கைச்சிறகினிலே மாதஇதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.என்றாலும், முதல் இதழ், அக்டோபர் 2011-இல் வெளிவந்துவிட்டது. அந்தவகையில்,காக்கைச்சிறகினிலே இதழ், அக்டோபர்2021-இல் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.“ஒடுக்கப்பட்டோரிலும் ,ஒடுக்கப்பட்டோர் பக்கம் நிற்பது காக்கை”என்று ‘காக்கை’ தொடக்க நாள் நிகழ்வில் மறைந்த மக்கட்கவிஞர் இன்குலாப் குறிப்பிட்டதாக, ஆசிரியர் முத்தையா அடிக்கடி கூறுவதுண்டு. அதுவே ‘காக்கை’இதழின் எழுதப்படாத குறிக்கோள் (motto)”என்றும் சொல்லலாம். ‘காக்கை’ இதழைவாசித்து வருபவர்களுக்கு அந்த உண்மைபுரியும் என்றும் நம்பலாம்.

பெரிய அளவில் பொருளாதாரப்பின்புலம் இல்லாத சூழலிலும் , 1 0 ஆண்டுகளாக இடைநிறுத்தம் இல்லாமல் தொடர்ந்து ‘காக்கை’ இதழ் வந்துகொண்டிருப்பது பாராட்டுக்குரியதாகும்.பத்தாண்டுகள் நிறைவு செய்திருக்கும்‘காக்கைக்கும்’, அதன் ஆசிரியர் முத்தையா,பொறுப்பாசிரியர் சந்திரசேகரன், ஆசிரியர்குழுமம், அச்சுக்கூட உரிமையாளர் மற்றும்பணியாளர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள்,வாசகர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும்உளம்நிறைந்த வாழ்த்துகள்.
கட்டுரையாளர்: இயற்பியல் பேராசிரியர்

முடிவடைந்தது.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *