அன்பு தம்பியின் கவிதை அஞ்சலி
நல்லதோர் வீணையாய் நம் வீட்டின் ஒளிவிளக்காய்
நம் மன இருள் அகற்றும் அகல் விளக்காய்- நீ இருந்து
நம்பிக்கை என்னும் ஒளிக்கீற்றால் நாம் வாழ்வை ஒளிர்வித்தாய்
நல்ல தருணம் இதுவென்று நம்மை விட்டு நீங்கிவிட்டாய்- என் அக்கா
சமுதாயத்தில் நாம் சான்றோனாய் வாழ எண்ணி
சாலச் சிறந்த கதைகள் பல சொல்லி
சப்தமின்றி நித்தம் எமை மகிழ்வித்தாய்
சமயம் வந்ததென்று எம்மை விட்டு சாய்ந்துவிட்டாய் – என் அக்கா
காலமெல்லாம் எம்மை காத்திருப்பாய் என்று இருந்தோம்
காலத்தின் கண் பட்டு கானல் நீர் ஆகிவிட்டாய்
கலங்க மாட்டோம் உன்னை எண்ணி களித்திருப்போம் – உன் நினைவுகளால்
கலங்கரை விளக்காய் இருந்து என்றென்றும் காத்திருப்பாய் – என் அக்கா
உன் நினைவால் உன் தம்பி