வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒருமுறை மட்டுமே பார்க்கும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் பகிர்வு செயலியான வாட்ஸ்ஆப், நம்பத்தகுந்த செய்திகளை மட்டும் பரப்புவதற்கு ஏதுவாக தொடர்ந்து பல்வேறு மேம்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் நாம் அனுப்பும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்கும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பயனாளர்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிரும் பொழுது Send பட்டனுக்கு முன்னதாக 1 என வட்டமிடப்பட்ட பட்டன் திரையில் தோன்றும். அதனை தேர்வு செய்து அனுப்பும் தரவுகளை ஒருமுறை மட்டும் பார்க்க முடியும். பின்னர் தானாகவே அது Delete ஆகிவிடும். இதன் மூலமாக தவறான வீடியோ அல்லது புகைப்படங்கள் அனுப்பப்பட்டால் கூட அதனை ஒருமுறைக்கு மேல் காணமுடியாது. ஆனால் அந்த புகைப்படத்தை screen-shot எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் எதிர்காலத்தில் இதனை வாட்ஸ் அப் நிர்வாகம் சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.