1933 இல் யாழ்ப்பாணத்தில் ஒரு அப்போது நீதிமன்றச் செயலாளராகப் பணியாற்றிய கே.எம்.செல்லப்பா, இலவசத் தமிழ் நூலகத்தைத் திறக்க வேண்டும் என்கின்ற சிந்தனையை இளைஞர் முன்னேற்றக் கழகத்தில் தெரிவித்தார். இளைஞர்களைக் கொண்டு வீடு வீடாக நூல்கள் சேகரிக்கப்பட்டன.
11.12.1933 செல்லப்பா அவர்கள் “யாழ்ப்பாணத்தில் ஒரு மைய இலவச தமிழ் நூலகம்( A central Free Tamil Library in Jaffna)என்ற தலைப்பில் நூலகத்தின் தேவை குறித்து அறிக்கை விட்டார்.
04.06.1934 அன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நீதியரசர் சி.குமாரசுவாமி தலைமையில் குழு ஒன்று கூடி அறிஞர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
01.08.1934 ஆஸ்பத்திரி சாலையில் உள்ள மின் நிலையத்திற்கு எதிரே உள்ள கடைகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்து நூலகத்தை ஆரம்பித்தனர். பலர் எழுந்து நின்று கொண்டும் குவிந்திருந்தும் படிக்க ஆரம்பித்தனர். இடப்பற்றாக்குறை காரணமாக பெட்டிகளின் மேல் இருந்தும் பத்திரிகைகள் வாசிக்கப்பட்டன.
01.01.1935 அன்று யாழ்ப்பாண நகர சபையிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. 844 தரமான புத்தகங்களுடன் (இதில் 694 பொதுமக்கள் வழங்கிய புத்தகங்கள்) மாநகராட்சி மண்டபம் மராமத்து பகுதி அமைந்துள்ள பகுதியில் இயங்கி வந்தது.
1936 மழவராயர் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
16.05.1952 “யாழ்ப்பாண மத்திய நூலகப் பேரவை” என்ற பெயரில் ஆளுனர் குழு ஒன்று உருவாக்கப்பட்டது
23-03-1954 இல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது
29.06. 1954 நகரபிதா வணக்கத்துக்குரிய லோங்பிதா , பிரித்தானிய உயர்ஸ்தானிகர் செசில் செயேஸ் , அமெரிக்க தூதுவர் பிலிப் குறோல் , இந்திய உயர்தர நிகராலயத்தில் முதல் காரியதரிசி சித்தாந்சாரி ஆகிய ஐவரும் சேர்ந்து வீரசிங்க முனியப்பர் கோயில் முன்னுள்ள முத்தவெளியில் அடிக்கல் நாட்டினார்கள் , ஆசிய அபிவிருத்தி நிதியம் இந்திய உயர்ஸ்தானிகராயம் உள்ளிட்ட மேலும் பலர் நிதியுதவிகளை வழங்கினர் , சிறிது சிறிதாக பலரது உதவிகளும் நூலகத்துக்காக திரட்டப்பட்டன . நிதி சேகரிப்புக்காக களியாட்ட விழாக்களும் நடத்தப்பட்டன .
17-10-1958 அன்று மழவராயர் கட்டிடத்தில் இயங்கி வந்த நூலகம் பொது நூலகம் என்று பெயர் மாற்றப்பட்டது.
11.10.1959 நூலகத்தின் இடநெருக்கடி தொடர்ந்ததால் மேல்தளம் கட்டி முடிவதற்குள் கீழ்மண்டபத்தில் அருட்தந்தை ஆல்பிரட் துரையப்பா குடிபுகும் வைபவத்தை நடத்தினார். கோப்பாய் வன்னியசிங்கம் மற்றும் பண்டித இராசையனார் ஆகியோரின் நினைவாக பண்டைய நூல்களின் தொகுப்புகளும் கிடைத்தன.. முதலியார் குல சபாநாதனிடம் இருந்து பல அரிய நூல்கள் விலைக்கு கிடைத்தன. இவ்வாறு பல அரிய ஆவணங்கள், ஓலைசுவடிகள், கையெழுத்து மூலபிரதிகள் சேகரிக்கப்பட்டன.
03.11,1967 மேல் தளம் கட்டி முடிக்கப்பட்டது, பின்னர் குழந்தைகள், பகுதி மற்றும் அடுக்கு அறை என்பனவும் திறக்கப்பட்டது.
01.06.1981 சிங்கள குண்டர்களால் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டது.
97000 க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் அரிய கையெழுத்துப் பிரதிகள் எரிக்கப்பட்டன. (பின்னணியில் அரசாங்க அமைச்சர்களான காமினி திஸாநாயக்க மற்றும் சிறில் மேத்யூ). இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிங்கராயர் டேவிட் அடிகளார் திகைப்பால் மாரடைப்பு காரணமாய் உயிரிழந்தார்.
07.02.1982 புதிதாக அடிக்கல்லை திருத்த போவதாக அடிக்கல் நாட்டல்
14.07.1983 இரவல் கொடுக்கும் பகுதி மீண்டும் செயல்படத் தொடங்கியது.
10.01.1984 மாநகரசபை எல்லைக்குட்பட்டவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நூலக அங்கத்துவம் அனைத்து யாழ்ப்பாண மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
05.06.1984 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.
28.03.2003 புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ் நூலகக் கட்டிடத்திற்கான புத்தகங்கள் கொண்டு வந்து திறக்கப்பட்டது.