83இன் கரி ஆடி படுகொலை நினைவு கூறல்.-2023
ஆடி பிறக்கையில்
தங்கத்தாத்தா பாட்டிசைக்க,
சீவிச்சிங்காச்ரிச்சு,
குங்குமப்பொட்டிட்டு,
பூமாலை சூடி, முற்றத்தில்
கோலமிட்டு,
குத்துவிளக்கேற்றி,
இறைவனைப்போற்றி,
ஆடிப்பாடி குதூகலமாய்
பனங்கட்டிக்கூழ்குடித்து,
கொழுக்கட்டை
சுவைத்துண்டு ஆனந்தமாய்
மகிழ்ந்திருந்த தமிழருக்கு
காலனின் வருகை
தோன்றியது கரி ஆடியாக.
தர்மதேவன் நீதி பார்த்து
வழங்கவேண்டி சிதைந்து,
வதைந்து, வெந்து
கொல்லப்பட்ட இனம்
ஈழத்தில் தமிழ் இனம்.
உரிமையை பறித்து,
உடமையைக்கொழுத்தி,
உயிர்களைக்கொன்றான்
அன்னியன் அக்கரிநாளில்;
ஆடிஆடி வந்த ஆடி
எண்பத்திமூன்றில்
கருநாகத்துடன் வந்து
ஈழத்தமிழர் அழிவுக்கு
தீயூட்டி தொடங்கிவைத்த
கரிநாளன்றோ அந்நாள்;
உதிரம் உறைந்துநிற்க,
வியர்வை ஆறாயோட
நலமற்ற குழந்தையுடன்
துணையாளையும் கூட
அணைத்து நள்ளிரவில்
முட்பத்தையூடு உடல் கிழிய
தவண்டு அன்னியர் வீட்டில்
தஞ்சம் புகுந்த அந்நாளை
மறப்பேனா உயிருள்ளவரை;
தீப்பந்தம் ஒரு கையில்
துப்பாக்கி கத்தியுடன்
காதஹக்கும்பல் எனைத்தேடி
வீடுவரக்கண்டு கதிகலங்கி
மறைந்திருந்தோம் உயிர்காக்க.
வானைக்கவ்வியது கரும்புகை,
ஓடிமறைந்தன
பறவைக்கூட்டம்
மலர் மணம்வீசிய
தென்றலிலே வீசியதோ
பிணவாடை.
அபலக்குரலின்றி அடங்கி
எரிந்து சாம்பலான
தமிழுருவம் பார்த்தேன்
வீதியெங்கும்;
உறவுகளின் இறுதிமூச்சு
வீசியகாற்றில்
உக்ஷ்ணமாய்த்தெரிந்தது
மரணத்தின் வருகை.
இராணுவம் துணையிருக்க,
காவலர் ஒதுங்கிநிற்க,
காடையர் களம் இறங்க,
மந்திரி தந்திரமாய்
சட்டமிட்டு வழிவகுக்க
எரிந்ததோ தமிழினம்
ஆயிரக்கணக்கில்.
கெலனியில் மிதந்ததவை
மீன்களல்ல தமிழருடல்கள்.
கண்ணெட்டும் திசையெங்கும்
கருகிக்கிடந்தன தமிழுடல்கள்.
தம்முயிரைய்க்காத்தவரையும்,
அன்னமிட்ட கைகளையும்
வெட்டி எரித்தான் கொடியவன்.
காட்டில் விலங்கிற்கும்
விதியுண்டு தமிழற்ற
ஈழத்தில் கேடுகெட்ட
மானிடனுக்கோ மனிதநேயமில்லை.
சிறகொடித்து சிறையிலிட்டு
காவலிட்டு கருவறைபோல்
காக்கமறுத்து கண்களைத்தோண்டி
காலனுக்குப்பலிகொடுத்தான் தமிழனை.
ஈழத்தாயை கண்குளிரப்பார்க்க
ஏங்கிய தங்கத்தலைவனும் அங்கே,
மணியான தளபதியும் அங்கே,
சகவீரரும் அங்கே மாண்டனரே
சிங்களச்சிறையினிலே
ஆடியின் கரிநாளில்
.
கரும் ஆடியில் கரியாகி
கருவாகிமாண்டவர்
விதையகி, முளையாகி,
செடியாகிக்கொடியாகி
தளைத்த தமிழ்த்தாயக
மரத்தின் விடுதலை
வேருக்கு உரமிட்டான்
அன்னியன்;
துளிர்ந்தது
வீறுகொண்டவேங்கையின்
வீர்வேட்கை;
தமிழனின் அவல ஓசை
கேட்டு பறந்தது
சுதந்திரக்கொடி;
போர் முரசு கொட்ட
சீறிஎழுந்த மாவீரன்
படைசேர்த்தான்
தமிழ்த்தாயகம் காக்க,
தமிழ் மக்களைக்காக்க;
தமிழீழத்தாகம்
கரைபுரண்டோட ஒன்றிணைந்தான்
தமிழன் தமிழீழத்தாயகம்காண
அந்தக்கரி ஆடியின் செயலால்.
இதுவும் தமிழனின் படலம்.
ஆக்கம்.. லுக்ஸ் ஆனந்தராஜா