இதய நாளங்களில் படியும் கொழுப்பு திரட்சி இறுதியில் இதய நாள இறுக்க நோயாக முற்றி, இதயத்தின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. இதற்கு, ‘கொரோனியல் ஆர்ட்டீரியல் டிசீஸ்’ என்று பெயர். இந்த நோயால் இதயம் செயலிழப்பதை, 1,500 ஆண்டுகளுக்கு முன்னரே திருமூலர் என்னும் சித்தர், ‘இடப் பக்கமே இறை தெரிந்தது’ என்றார். ‘கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே என்று சித்த மருத்துவத்தில் இதை சடுதி மரணம்’ என்று சொல்லப்படுவதுண்டு.
இந்த நோய் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டஜான் நெகுலஸ்கோ என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர், உலகிலேயே இந்த நோய் இல்லாத இடம் ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்து, ரோமாபுரியில் உள்ள சிற்றுாரில் இந்நோயால் இறந்தவர் யாருமில்லை என்று அறிந்து, அங்கு சென்று சில காலம் தங்கி, அம்மக்களின் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறைகளைப் பற்றிய குறிப்புகளை திரட்டி ஆராய்ந்தார். முடிவில், அவர்களின் அன்றாட உணவில் மிளகு அதிகம் சேர்க்கப்படுவதை அறிந்தார்.
அமெரிக்கா திரும்பிய பின், தன் ஆராய்ச்சியில், மிளகு மற்றும் ரத்த நாள அடைப்பு பற்றி பல காலம் ஆராய்ந்த பின், மிளகு சாப்பிடுவதால், ரத்த நாளங்களில் படியும் கொழுப்பு திரட்சி கரைந்து விடுகிறது; இதயம் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது என்பதை உறுதி செய்து, உலகிற்கு அறிவித்தார், . கொழுப்புத் திரட்சி என்னும் நச்சை இதய நாளத்தில் படியாமல் தடுக்கும் காப்சைசின் என்னும் வேதிப் பொருள் மிளகில் நிறைந்து இருப்பதே இதற்கு காரணம்.
உணவில் உள்ள விஷத்தன்மையை முறித்து விடும் ஆற்றல் மிளகிற்கு உண்டு என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள், பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற பழமொழியை சொல்லி வைத்தனர். இப்போதும் நம் கிராமங்களில் பூச்சிகள் மற்றும் தாவர நச்சுக்களை நீக்கும் மிளகு கஷாயம் குடிக்கும் வழக்கம் உள்ளது.
அதே போல ரத்தத்தில் சேரும் நச்சுக்களை நீக்கவே, அன்றாடம் உணவில் மிளகு ரசம் சேர்க்கும் பழக்கம் உள்ளது.
சுக்கு 100 கிராம், மிளகு 100 கிராம், வெந்தயம் 100 கிராம் எடுத்து வெறும் வாணலியில் லேசாக வறுத்து பொடி செய்து, தினமும் காலை, இரவு இரு வேளை, உணவுக்குப் பின் ஒரு டீ ஸ்பூன் மோரில் கலந்து குடித்தால், இரண்டு, மூன்று மாதங்களில் கணிசமான அளவு கொழுப்பு குறைந்து விடும்