வீராசனம் யோகாசனங்களுள் ஒன்று. இது சமதரையில் அமரும் முறையாகும். பத்மாசனம் செய்ய முடியாதவர்களும் பத்மாசனம் செய்ய சிரமப்படுவோரும் வீராசனம் செய்யலாம்.
செய்முறை
ஒருவிரிப்பில் முதலில் கால்களை நீட்டி உட்கார வேண்டும். பின்பு வலது காலை சாதாரணமாக மடித்துக்கொள்ள வேண்டும்.
இடதுகாலை மடித்து வலது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல வைக்க வேண்டும். படத்தில் உள்ளவாறு முழங்கால்களை தரையில் படுமாறு வைத்து நிமிர்ந்து நேராக உட்கார வேண்டும். உட்கார்ந்து மெதுவாக மூச்சை இழுத்து விடுங்கள். சில நொடிகள் வரை நேராக உட்கார்ந்திருக்கள். பின்பு சாதாரண நிலைக்கு திரும்பிவிடலாம்.
பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் இந்த ஆசனத்தை செய்து பழகிக் கொள்ளலாம். வீரசானம் செய்து பழகியபின்பு நீங்கள் பத்மாசனம் செய்வது எளிமையாக இருக்கும்.ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும் கால்களை மாற்றி போட்டு செய்து பழகிக் கொள்ளுங்கள்.
- வீராசனத்தின் பயன்கள்
- நுரையீரல் நோய்கள் அணுகாது.
- அனைத்து நாடிகளும் ஆற்றல் பெரும்.
- முதுகெலும்பு நிமிர்ந்து நிற்கும்.
- இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால் நாம் சுறுசுறுப்பாக இயங்கலாம்.
- இடுப்பு வலி உள்ளவர்கள் இதை செய்யலாம். இடுப்பு நன்கு பலமாக இருக்கும்.
- வீராசனம் செய்வதால் உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.
பத்மாசனம் சொல்லின் மேல் சொடுக்குவதன்(click )மூலம் கானொளி வடிவத்தில் கண்டுகொள்ளலாம்