2022ஆம் ஆண்டின் தொடக்கமே, பூமியை நோக்கி வரும் பெரிய விண்கல்லாக இருக்கப் போகிறது. இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள தகவல்கள் நாம் வருந்த வேண்டுமா என்ற கேள்விக்கு விடை தருகின்றன.
நாசா வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் Asteroid 2014 YE15 என்ற விண்கள் சுமார் 74 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதுடன், வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 6 அன்று பூமியை வந்தடையும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த விண்கல் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
150 மீட்டர்களை விட பெரிய பொருள்கள், பூமியை சுமார் 7.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து வந்து அணுகுதல் முதலானவற்றைக் கொண்ட பொருள்கள் மட்டுமே ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன. சுமார் 7 மீட்டர் அளவில் இருக்கும் தற்போதைய Asteroid 2014 YE15 விண்கல் ஒரு பேருந்தின் அளவைக் கொண்டிருக்கும் என நாசா தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதன் அளவாலும், குறைந்த தொலைவின் காரணமாகவும், இந்த விண்கல் ஆபத்தானதாக இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது. . . . . …