ஆண் ,பெண் மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்!!

உங்களால் நம்பமுடியாத மனித மூளை பற்றிய 12 தகவல்கள்!! Interesting Facts About  Brain in Tamil

நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது.

ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவு தான்.

தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால் உணரமுடியாது.
இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம் மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள்.

மூளையில் இருக்கும் ஒரு நரம்பு செல் ஒரு நொடியில் ஒரு லட்சம் சமிக்ஞைகளை அறிந்து கொள்ளும்.
குறித்த நிறத்தை அறிந்துகொள்ளும் சக்தி பெண்களுக்கு அதிகம்.

அதிகபட்சமாக 2 மணி நேரமே ஒரு இரவில் கனவு காண முடியும்.உணர்வுகளை மூளை தொடு உணர்ச்சி மூலம் அறியப்படுவதை விட ஒலி மூலம் விரைவில் அறிந்து கொள்ளும்.நமக்கு சட்டுன்னு ஞாபகம் வந்தது என்று சொல்கிறோம் அது 0.0004 நொடிகள்.

கொஞ்சம் இருங்கள் … ஒரே ஒரு தகவல்.

அதிகமான இயற்கை மரணங்கள் மனிதன் தூங்கும் நேரமான அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் நிகழ்கிறது.

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் . . .

  1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது . . காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது . . .இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3.புகை பிடித்தல் . . மூளை சுருங்கவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல் . . .நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று . . மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை . . .நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது . . .தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது . . .உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது . . .மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது . . .அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது. ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது.

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!
உதாரணமாக பெண்ணால், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! ( அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது! )

மொழி.- பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும். அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன் – ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாளான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால், ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.

வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும்.

இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்”ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக்கேட்டுக்கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும்.

பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.

ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை.
காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!

பிரச்சனைக்கான தீர்வுகள்.- பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.
ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதன் மூலம் திருப்தியடைந்துகொள்ளும்.
சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.

தேவைகள்.- மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும். ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
மகிழ்ச்சியின்மை. – ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்… அவர்களால், அவர்களின் வேலையில் கவணம் செலுத்த முடியாது. ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது.

உரையாடல். பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.

நடவடிக்கை.-

பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *