அறிந்த குரல்களும் புதிய நியதிகளும்
புதுவகையான வாத்திய அமைப்பை தமது பாடல்களில் அமைத்தார்கள் என்று சொல்லும் போது அதற்கு ஏற்ப பாடும் குரல்களையும் கண்டெடுக்க வேண்டிய அவசியமும் உண்டாகிறது. ஏற்கனவே அறிமுகமான .கேட்டுப்பழகிய குரல்களை பயன்படுத்துவதுடன் புதியவர்களையும் அறிமுகம் செய்வது அல்லது ஏற்கனவே பாடிக்கொண்டிருப்பவர்களில் சிலரை முதன்மைப்படுத்துவதும் இயல்பான ஒரு அம்சமாக இருக்கிறது.
ஆனால் மெல்லிசைமன்னர்களைப் பொறுத்தவரையில் தமது படைப்பாற்றலை மேம்படுத்த ஏற்கனவே அறிமுகமான குரல்களை பயன்படுத்தி தமது இசையை புனர்நிர்மானம் செய்தார்கள் என்பது காலத்தின் காட்டாயமாகவும் இருந்தது எனலாம்.வாத்திய இசை நிகழ்த்திய புதுமையுடன் புதுமையாகப் பாடும் பாங்கையும் அவர்களே உருவாக்க வேண்டியதாகவும் இருந்தது.அன்றைய காலம் விளைவித்திருந்த பாடும்முறை மீதான மதிப்பீடுகளுக்கு முற்றுமுழுதான மாறுபாட்டைக் கொண்டுவந்தார்கள்.பழகிய பாணி இசைப்பாங்கின் அலையில் ஒரு தசாப்தம் [ 1951- 1961 ] மெல்லிசைமன்னர்களும் ஓடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட நேர்ந்தது.அந்த பத்து வருட அலையோட்டத்தில் நீந்தி தமக்கானஉயிர்த்துடிப்பு மிக்க புது அலையை உருவாக்கினார்கள்.
அவர்களுக்கு முன்னரும் அவர்களது சமகாலத்திலுமிருந்த பெருந்தொகையான பாடகர்,பாடகிகளின் பட்டியலையும் ஒரு கணம் இங்கே நினைவூட்டிச் செல்வது தவிர்க்க முடியாததாகும்.
1950 களில் வெளிவந்த படங்களில் ஒலித்த பாடல்களில் எத்தனையோ விதம்,விதமான குரல்கள் ஒலித்தன! குறிப்பாகப் பெண்குரல்களை எண்ணிப் பார்க்கும் போது வியப்பும் ஆச்சரியமும் மேலிடுகிறது.தமது குரல்களை நசுக்காமல் ,நெறிக்காமல் , வாய் திறந்து , ஒளிவுமறைவின்றி சுருதிசுத்தத்துடன் பாடும் திறன்படைத்த குரல்களைக் கேட்கிறோம்.
என்.எஸ்.கிருஷ்ணன் , ஜே.பி சந்திரபாபு , டி.ஆர்.மகாலிங்கம் , கே.ஆர்.ராமசாமி போன்ற பாடும் ஆற்றல் பெற்ற நடிகர்களுடன்,பாடகர்களாக திருச்சி லோகநாதன், வி,என் சுந்தரம் ,எஸ்.சி கிருஷ்ணன்.சி.எஸ்.ஜெயராமன் , ஏ.எல்.ராகவன் , கண்டசாலா , ஏ.எம்.ராஜா , பி.பி.ஸ்ரீனிவாஸ் ,குசைந்தீன், டி.ஏ.மோதி ,டி.எம்.சௌந்தரராஜன் ,சீர்காழி கோவிந்தராஜன் போன்றோரும் , பெண் பாடகிகளில் பாடும் நட்சத்திரங்களாக விளங்கிய பி.பானுமதி ,எஸ்.வரலட்சுமி ,டி.ஆர்.ராஜகுமாரி ,கே.பி.சுந்தராம்பாள் போன்றோருடன் யு.ஆர் .ஜீவரத்தினம் ,ஏ.பி. கோமளா,பி.ஏ.பெரியநாயகி, ஏ.ரத்னமாலா ,ஜமுனாராணி ,டி.வி.ரத்தினம் ,கே.ராணி, சரோஜினி எம்.எல்.வசந்தகுமாரி ,ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் சகோதரிகள், டி.வி.ரத்தினம்,என்.எல் .கானஸரஸ்வதி ,எம்.எஸ்.ராஜேஸ்வரி , ஜிக்கி, பி.லீலா போன்ற பாடகிகள் என பலவிதமான பாவனைகள் காட்டும் , வார்ணஜாலங்கள் காட்டும் ,வளமிக்க இசையரங்காக [ Rich Musical ] அக்கால திரை இசையுலகு இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
குரலில் மென்மையும் , வசீகரமும் , தாய்மையும் நிறைந்த குரல்கள் , ஓங்காரம் எழுப்பும் குரல்கள் ,தென்றலாய் மிதந்து குளிரவைக்கும் குரல்கள் , மென்மையின் தடத்தில் மெதுவாய் நழுவிச் செல்லும் குரல்கள் , கீழ் சுருதியில் பாடி இதயத்தை நெகிழ வைக்கும் குரல்கள் , உயர்ந்த சுருதியில் நின்று நர்த்தனமாடும் குரல்கள் என இந்தக் குரல்களை நாம் வகைப்படுத்த முடியும்.
உத்வேகத்துடன் தமது இசைவாழ்வை ஆரம்பித்த மெல்லிசைமன்னர்கள் தாம் இசையமைத்த ஆரம்பகாலத் திரைப்படங்களில் மேல் குறிப்பிட்ட பெரும்பாலான குரல்களை பயன்படுத்திருக்கின்றார்கள்.
A குரலில் மென்மையும் , வசீகரமும் , தாய்மையும் நிறைந்த குரல்களாக
ஆர்.பாலசரஸ்வதி தேவி , எம்.எல்.வசந்தகுமாரி ,ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் சகோதரிகள்,டி.எஸ்.பகவதி, ஏ.பி. கோமளாபோன்ற பாடகிகளின் பாடல்களுக்கு உதாரணமாக அமைந்த பாடல்கள் சிலவற்றை இங்கே தருகிறேன்.
01 நீலவண்ண கண்ணா வாடா – மங்கையர் திலகம் [ 1954] – ஆர்.பாலசரஸ்வதிதேவி – இசை : எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
02 ஆளப்பிறந்த கண்மணியே – உத்தமபுத்திரன் [ 1958] – ஆர்.பாலசரஸ்வதிதேவி + ஏ.பி.கோமளா – இசை : ஜி.ராமநாதன்
03 எல்லோரும் உன்னை நல்லவன் என்றே – பாக்கியவதி [ 1957] – ஆர்.பாலசரஸ்வதிதேவி – இசை : எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
04 சிங்கார புன்னகை – மகாதேவி [ 1957] – ஆர்.பாலசரஸ்வதிதேவி எம்.எஸ்.ராஜேஸ்வரி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 தென்றல் வந்து வீசாதோ – சிவகங்கை சீமை [ 1959] – எஸ்.வரலட்சுமி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே – இருபத்திரை [ 1957] – ராதா ஜெயலட்சுமி – இசை : எஸ்.வி.வெங்கடராமன்
07 நீயே கதி ஈஸ்வரி – அன்னையின் ஆணை [ 1958] – பி.லீலா – இசை : எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு
08 பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் கண்ணா – பெண் [ 1954] – டி.கே பகவதி – இசை : ஆர்.சுதர்சனம்
09 அன்பே பாவமா அதில் ஏதும் பேதமா – தேவதாஸ் [ 1951] – ஆர்.பாலசரஸ்வதிதேவி – இசை : சி.ஆர்.சுப்பராமன்
10 கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் – தாயுள்ளம் [ 1953] – எம்.எல்.வசந்தகுமாரி – இசை : ஏ.ராமராவ்
11 வண்ண மேடையில் எண்ணம் போலவே – ஒரேவழி [ 1959 ] – டி.கே பகவதி – இசை : ஆர்.சுதர்சனம்
B ஓங்கிக்குரல் எடுத்து பாடுவதில் கே.பி.சுந்தராம்பாள்,பி.ஏ.பெரியநாயகி , யு.ஆர் .ஜீவரத்தினம் போன்றோரும் ,டி.ஆர்.மகாலிங்கம் , கே.ஆர்.ராமசாமி,சி.எஸ்.ஜெயராமன் ,திருச்சி லோகநாதன் ,சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன் ,எஸ்.சி கிருஷ்ணன் போன்ற பாடகர்களின் பாடல்களுக்கு உதாரணமாக அமைந்த பாடல்கள் சிலவற்றை இங்கே தருகிறேன்.
01 எங்கள் திராவிட போன் நாடே – மாலையிட்ட மங்கை [ 1958] – டி.ஆர்.மகாலிங்கம் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 ஓங்காரமாய் விளங்கும் நாதம் – வணங்காமுடி [ 1957] – டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
03 கண்ணீர் விட்டோ வளர்த்தோம் – கப்பலோட்டிய தமிழன் [ 1959] – திருச்சி லோகநாதன் – இசை : ஜி.ராமநாதன்
04 ஜெயமே புகழவே – குலேபகாவலி [ 1957] – எஸ்.சி.கிருஷ்ணன் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 உழைப்பதிலா உழைப்பை பெருவத்திலா – நாடோடி மன்னன் [ 1959] – சீர்காழி கோவிந்தராஜன் – இசை : சுப்பைய்யா நாயுடு
06 தென்றலே வாராயோ – வாழ்விலே ஒரு நாள் [ 1957] – யு.ஆர் .ஜீவரத்தினம் + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : டி.ஜி.லிங்கப்பா
07 பெரியது கேட்டபின் விரிவடிவேலோன் – அவ்வையார் [ 1950] – கே.பி.சுந்தராம்பாள் – இசை : எஸ்.ராஜேஸ்வரராவ்
08 வேலனே செந்தமிழ் வித்தகர் – அவ்வையார் [ 1950] – கே.பி.சுந்தராம்பாள் – இசை : எஸ்.ராஜேஸ்வரராவ்
09 எங்கே சொர்க்கம் எங்கே சொர்க்கம் – சொர்க்கவாசல் [ 1955] – கே.ஆர்.ராமசாமி – இசை : சி.ஆர்.சுப்பராமன் + விஸ்வநாதன் ராமமூர்த்தி
10 தென்னாடுடைய சிவனே போற்றி – சம்பூரண ராமாயணம் [ 1957 ] – சி .எஸ் .ஜெயராமன் – இசை : கே.வி.மகாதேவன்
11 வாராய் நீ வாராய் – மந்திரிகுமாரி [ 1950] – திருச்சி லோகநாதன் + ஜிக்கி – இசை : ஜி.ராமநாதன்
12 வா கலாப மயிலே ஓடி நீ – காத்தவராயன் [ 1959 ] – டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜிராமநாதன்
C நாட்டுப்புற இசைப்பாங்கில் பாட ஏ.ரத்னமாலா ,ஜமுனாராணி ,டி.வி.ரத்தினம் ,கே.ராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி ,சரோஜினி, திருச்சி லோகநாதன்,டி.எம்.சௌந்தரராஜன் ,சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.சி கிருஷ்ணன்.ஏ.எல்.ராகவன், பி.பொன்னுசாமி போன்றோரும் ,
01 ஜின்ஜினக்கு ஜின்ஜினக்கு கணக்கு – ரம்பையின்காதல் [ 1956] – எஸ்.சி.கிருஷ்ணன் + ஜிக்கி – இசை :டி.ஆர்.பாப்பா
02 சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம் – மதுரைவீரன் [ 1951] – ஜிக்கி – இசை : ஜி.ராமநாதன்
03 ஐந்து ரூபா ..கொஞ்ச நேரம் அந்தமான் கைதி T.V.ரத்தினம் இசை : ஜி.ராமநாதன்
04 சாலையிலே விளையாடும் சப்பாணி – ரம்பையின்காதல் [ 1956] – எஸ்.வி.பொன்னுசாமி + ஜிக்கி – இசை :டி.ஆர்.பாப்பா
05 மாரி மகமாயி மாரி மகமாயி – நாம் [ 1953] – செல்லமுத்து + ஏ.பி.கோமளா – இசை : சி.எஸ்.ஜெயராமன்
06 வேட்டி கட்டின பொம்பளே நீ – கல்யாணம் செய்துகொ [ 1957] – சீர்காழி +சூலமங்கலம் ராஜலட்சுமி – இசை : டி.லிங்கப்பா
07 ஏறாத மலைதனிலே – தூக்குத் தூக்கி [ 1954] – டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
08 அத்தானும் நான் தானே – சக்கரவர்த்தித் திருமகள் [ 1957] – எஸ்.சி.கிருஷ்ணன் + டி.வி.ரத்தினம் – இசை : ஜி.ராமநாதன்
09 உன் திருமுகத்தை ஒரு முகமா – மகாதேவி [ 1958] – ஜே .பி.சந்திரபாபு + ஏ.ரத்னமாலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
D நாட்டியப்பாடல்களை பாடுவதற்கு பி.லீலா ,என்.எல் .கானஸரஸ்வதி போன்றவர்களுடன் மேலே குறிப்பிட்ட எம்.எல்.வசந்தகுமாரி ,ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் சகோதரிகள், டி.வி.ரத்தினம்,எஸ்.வரலட்சுமி ,பி.பானுமதி போன்ற பாடகிகளும், டி.எம்.சௌந்தரராஜன் ,சீர்காழி கோவிந்தராஜன்,வி,என் சுந்தரம், கண்டசாலா போன்றோரும் வல்லவர்களாக இருந்தனர்.
01 நீலி மகன் நீ அல்லவோ மறை சதா – மலைக்கள்ளன் [ 1951] – பி.ஏ.பெரியநாயகி – இசை : எஸ்.எம்.சுப்பையா நாயுடு
02 ஆடல் காணீரோ திருவிளையாடல் – மதுரைவீரன் [ 1957] – எம்.எல்.வசந்தகுமாரி – இசை : ஜி.ராமநாதன்
03 ஆட வாரீர் இன்றே ஆடவாரீர் – ரம்பையின் காதல் [ 1958] – பி.பானுமதி – இசை : டி.ஆர்.பாப்பா
04 காத்திருப்பான் கமலக்கண்ணன் – உத்தமபுத்திரன் [ 1958] – பி.லீலா – இசை : ஜி.ராமநாதன்
05 ஆடும் அழகே அழகு – ராஜ ராஜன் [ 1958] – சூலமங்கலம் ராஜலட்சுமி – இசை : கே.வி.மகாதேவன்
06 வருகிறாள் உனைத்தேடி – தங்கப்பதுமாய் [ 1958] – எம்.எல்.வசந்தகுமாரி + சொல்லமங்கலம் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
07 கலையாலே எழிலானதே – ராஜா ராணி [ 1958] – எம்.எல்.வசந்தகுமாரி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
08 கதவைச் சாத்தடி – ரத்தக்கண்ணீர் [ 1958] – எம்.எல்.வசந்தகுமாரி – இசை : சி.எஸ்.ஜெயராமன்
09 வா வா வளர்மதியே வா – வணங்காமுடி [ 1958] – எம்.எல்.வசந்தகுமாரி – இசை : ஜி.ராமநாதன்
10 கோடி கோடி இன்பம் பெறவே – ஆட வந்த தெய்வம் [ 1958] – பி.லீலா + பி.சுசீலா – இசை : கே.வி.மகாதேவன்
11 சிறந்த உலகினில் யாவும் – மாப்பிள்ளை [ 1955 ] – லீலா + சூலமங்கலம் – இசை :
12 வேலவரே உன்னைத் தேடி ஒரு – மணமகன் தேவை [1955 ] – P.பானுமதி – இசை : ஜி.ராமநாதன்
இவர்களுடன் நடிப்பதிலும் பாடுவதிலும் வல்லுனர்களாக விளங்கிய டி.ஆர்.ராஜகுமாரி ,எஸ்.வரலட்சுமி ,பி.பானுமதி போன்றோரும் பாடகர்களுக்கு இணையாகப் பாடி அசத்தினார்கள்.
இந்தப்பாடக பாடகிகளுடன் அன்றிருந்த இசையமைப்பாளர்களையும் , கவிஞர்களையும் நினைவூட்டுதலும் பொருத்தமானதாகும் .
இசையமைப்பாளர்கள் பட்டியலில்…..
டி.ஏ.கல்யாணம் ,ஜி.ராமநாதன்,.எஸ்.வீ.வெங்கட்ராமன் ,சி.ஆர் .சுப்பராமன்,எஸ்.எம் சுப்பைய்யாநாயுடு . சி.என்.பாண்டுரங்கன்.எஸ்.ராஜேஸ்வரராவ் .பெண்டலாயா,ஆதி நாராயணராவ் ,எஸ்.ஹனுமந்த ராவ் ,அஸ்வத்தாமா ஆர்.சுதர்சனம்,கண்டசால,எம்.எஸ். ஞானமணி,கே .வீ. மகாதேவன் ,ஏ .எம் .ராஜா , எச் ஆர் ,பத்மநாபசாச்திரி , டி.ஆர். பாப்பா, ஜி.கே .வெங்கடேஷ் ,டி.சலபதி ராவ் திறமைமிக்கவர்கள் இருந்தனர்.
பாடலாசிரியர்களில்,உடுமலைநாராயணகவி ,கம்பதாசன் ,சுந்தரவாத்தியார்,முத்துக்கூத்தன் ,கே.பி.காமாட்சி ,புரடசிதாசன் ,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கு.சா கிருஷ்ணமூர்த்தி ,சுரதா, மாயவனாதன் , எஸ்.டி.சுந்தரம் ,மருதகாசி , கா.மு.செரீப் ,கே.டி.சந்தானம் ,தஞ்சைராமைய்யாதாஸ்,கண்ணதாசன் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற பேராற்றல் வாய்ந்தவர்களையும் காண்கிறோம்.
வகைவகையான பாடல்முறைகளும் [ Versatility ] , அதிலெழும் இசையலைகளும் [Intonations ], அழகும் , உத்வேகமும் மிக்க பலவிதமான குரல்களால் வளம்பெற்ற, பல்வேறு சுருதிகளில் பாடக்கூடிய பாடகர்கள், பாடகிகள் குவிந்திருந்தார்கள்.
1940 களின் ஹிந்தி சினிமாவின் இருந்த ஒரு நிலைமையே தமிழ் திரையில் 1950 களில் இருந்திருக்கிறது.ஹிந்தி திரையில் சைகல், சுரபாய் அம்பலவாலி,சம்சாட் பேகம் , கானான் தேவி , கவிபிரதீப் , உமாதேவி , கீதா தத் ,முக்கேஷ் , நூர்ஜகான் பல பாடகர்கள் நிறைந்திருந்தனர்.எனினும் 1950 களில் புதிய அலையெழுச்சியால் முகமட் ராபி , முகேஷ் , லதா மங்கேஸ்கர் , கிசோர்குமார், மன்னா டே ,ஆஷா போஸ்லே , கீதா தத் போன்ற பாடகர்கள் முன்னணிக்கு வந்தார்கள்.
தமிழிலும் இவ்விதமே தியாகராஜ பாகவதர் , பி.யு.சின்னப்பா காலத்தைத் தொடர்ந்து சில பாடகி ,பாடகர்கள் முன்னணிக்கு வந்தார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமெனின் பி.லீலா , ஜிக்கி , கண்டசாலா , ஏ.எம் ,ராஜா , பாலசரஸ்வதி தேவி , ஜமுனா ராணி , கே.ராணி , ஏ.பி. கோமளா ,எம்.எஸ்.ராஜேஸ்வரி ,திருச்சி லோகநாதன் , சௌந்தரராஜன் போன்றவர்கள் தமிழ்திரையின் புதிய சந்ததி பாடகர்களாக உருவாக்கினார்கள்.
முகம்மது ரபி, முகேஷ் ,லதா மங்கேஷ்கர் போன்ற பாடகர்கள் முன்னணிக்கு வந்த 1950 களில் பாடகியாக அனாயாசமாகப் பாடும் திறன்வாய்ந்த ஜிக்கி அறிமுகமாகிறார்.ஞானசௌந்தரி படத்தில் “அருள் தாரும் தேவ மாதாவே ஆதியே எங்கள் ஜோதி ” என்ற பாடல் மூலமாக சிறுமி ஞானசௌந்தரியின் குரலாக ஒலித்து ஆச்சரியப்படுத்திய ஜிக்கி , அக்காலத்தில் புகழின் உச்சியிலிருந்து இசையமைப்பாளரான ஜி.ராமநாதனால் முன்னணிக்கு கொண்டுவரப்பட்டார்.
மந்திரிகுமாரி படத்தில் திருச்சி லோகநாதனுடன் இணைந்து ” வாராய் நீ வாராய் ” மற்றும் “உலவும் தென்றல் காற்றினிலே ” போன்ற மிகப் புகழபெற்ற இரு பாடல்களை ஜிக்கியை பாட வைத்தார் ஜி.ராமநாதன்.தமிழ்த்திரையின் இசைப் போக்கை மெல்லிசையின் பக்கம் மரபு சார்ந்து இழுத்து வந்த பாடல்களில் இதற்குத் தனியிடம் உள்ளது.இந்த இரண்டு பாடல்களும் மெல்லிசையின் உன்னத்தங்களை இனம் காண வைக்கும் தனிச்சுவை மிக்க பாடல்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
அதே படத்தில் “அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே ” என்ற நாட்டுப்புறப்பாங்கில் அமைந்த பாடலை பாடியவர் ,பின்னாளில் பெரும் புகழபெற்ற டி.எம்.சௌந்தரராஜன்.ஆரம்ப நிலையில் இருந்த சௌந்தர்ராஜனின் குரல் நாட்டுப்புற பாங்கில் பாடுவதற்கே பொருத்தம் என்ற நிலையில் அவ்விதம் பாட வைக்கப்பட்டார்.ஜி.ராமநாதனால் விரும்பப்பட்ட சௌந்தரராஜன் அவரால் இசையமைக்கப்பட்ட தூக்குத் தூக்கி [1952] படத்தில் மீண்டும் நாட்டுப்புற பாங்கில் அமைந்த பாடலான ” ஏறாத மலைதனிலே ஜோரான கௌதாரி இரண்டு ” என்ற பாடல் மூலம் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றார்.
அன்றைய நாளில் பெருமதிப்புடன் விளங்கிய இசையமைப்பாளரான ஜி.ராமநாதனுக்கு மிகவும் பிடித்தவர்களாக ஜிக்கி ,டி.எம்.சௌந்தரராஜன் விளங்கினர். இதே காலத்தில் கிரமமாகப் பாடிவந்த பி.லீலா பிரசித்தமாக பாடிக்கொண்டிருந்தார்.இந்தச் சூழ்நிலையில் 1953 ல் பி.சுசீலா அறிமுகமானார்.
ஆனாலும் இத்தகைய பின்னணியில் 1950 களில் ஜி.ராமநாதன் தான் இசையமைத்த படங்களில் தனக்கு பிடித்த ஆற்றல்மிக்க இருகுரல்களை [ஜிக்கி ,டி.எம்.சௌந்தரராஜன் ] மிக அருமையாகப் பயன்படுத்தினார். தனிப்பாடலாகவும் , ஜோடிக்குரல்களாகவும் ,கம்பீரமாகப் பாட வைத்து இருவரையும் சந்தேகத்திற்கிடமின்றி இரு இசை நட்ஷத்திரங்களை உருவாக்கினார் எனலாம். ஜி.ராமநாதனின் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் , ஜிக்கி இணை பல இனிய பாடல்களைப் பாடியது மட்டுமல்ல , இருவரையும் வேறு பாடகி ,பாடகர்களுடனும் சேர்ந்து பல இனிய பாடல்களையும் தந்தார்.சில முக்கியமான பாடலைகளைத் தருகிறேன்.
01 நாடகமெல்லாம் கண்டேன் – மதுரைவீரன் [ 1957] – ஜிக்கி + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
02 பூவாமரமும் பூத்ததே – நான் பெற்ற செல்வம் [ 1957] – ஜிக்கி + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
03 இன்பம் வந்து சேருமா -நான் பெற்ற செல்வம் [ 1957] – ஜிக்கி + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
04 இதய வானிலே உதயமானது – கற்புக்கரசி [ 1957] – ஜிக்கி + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
05 கன்னியா கன்னியா – கற்புக்கரசி [ 1957] – ஜிக்கி + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
06 கண்களால் காதல் காவியம் – சாரங்கதாரா [ 1957] – ஜிக்கி + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
ஜி.ராமநாதன் இசையில் சீர்காழி கோவிந்தராஜனுடன் ஜிக்கி பாடிய முக்கியமான பாடல்கள்.
01 அழகோடையில் நீந்தும் இள அன்னம் – கோகிலவாணி [ 1957] – ஜிக்கி + சீர்காழி கோவிந்தராஜன் – இசை : ஜி.ராமநாதன்
02 திருவே என் தேவியே வாராய் – கோகிலவாணி [ 1957] – ஜிக்கி + சீர்காழி கோவிந்தராஜன் – இசை : ஜி.ராமநாதன்
03 மின்னுவதெல்லாம் பொன்னென்று – கோமதியின் காதலன்[ 1958] – ஜிக்கி + சீர்காழி கோவிந்தராஜன் – இசை : ஜி.ராமநாதன்
04 அன்பே ஆரமுதே வாராய் – கோமதியின் காதலன் [ 1958] – ஜிக்கி + சீர்காழி கோவிந்தராஜன் – இசை : ஜி.ராமநாதன்
05 வனமேவும் ராஜகுமாரி – ராஜா தேசிங்கு [ 1959] – ஜிக்கி + சீர்காழி கோவிந்தராஜன் – இசை : ஜி.ராமநாதன்.
டி.எம். சௌந்தரராஜன் , சீர்காழி கோவிந்தராஜன் மட்டுமல்ல , திருச்சி லோகநாதன் ,சி.எஸ்.ஜெயராமன் ,கண்டசாலா ,ஏ.எம்.ராஜா ,எஸ்.சி.கிருஷ்ணன் போன்றவர்களுடனும் , பெண் பாடகிகளான பி.லீலா, பி.சுசீலா ,கே.ஜமுனாராணி போன்றோருடனும் இணைத்து கம்பீரமும் , இனிமையும் , விறுவிறுப்பும் மிக்க ஜிக்கியின் குரலை என்னென்ன வகையில் எல்லாம் பயன்படுத்த முடியுமோ அந்தந்த வகையிலெல்லாம் பயன்படுத்தியவர் ஜி .ராமநாதன்.
பிற பாடகர்களுடன் இணைந்து ஜிக்கி பாடிய புகழ் பெற்ற பாடல்கள் சில:
01 இந்த வாழ்வு சொந்தமானால் – நல்லதங்காள் [ 1956] – ஜிக்கி + திருச்சி லோகநாதன்- இசை : ஜி.ராமநாதன்
02 கல்யாணம் ஆகுமுன்னே – டாகடர் சாவித்திரி [ 1957] – ஜிக்கி + கண்டசாலா – இசை : ஜி.ராமநாதன்
03 காவியக்காதல் வாழ்வின் ஓவியம் நாமே – கோமதியின் காதலன்[ 1958] – ஜிக்கி + ஏ எம்.ராஜா – இசை : ஜி.ராமநாதன்
04 வாழ்வினிலே இந்நாள் இனி வருமா – வணங்காமுடி [ 1958] – ஜிக்கி + ஏ எம்.ராஜா – இசை : ஜி.ராமநாதன்
05 உள்ளம் இரண்டும் ஒன்று – புதுமைப்பித்தன் [ 1959] – ஜிக்கி + சி.எஸ்.ஜெயராமன் – இசை : ஜி.ராமநாதன்.
06 அன்பே எந்தன் முன்னாலே – ஆரவல்லி [ 1958] – ஜிக்கி + ஏ எம்.ராஜா – இசை : ஜி.ராமநாதன்.
ஜி.ராமநாதனின் இசை மாளிகையின் முடிசூடாத இளவரசியாக விளங்கியவர் ஜிக்கி என்றால் மிகையில்லை.
ஜி.ராமநாதனின் இசையில் பாடகி ஜிக்கி எவ்விதம் பயயன்படுத்தப்பட்டாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் பயன்படுத்தப்பட்டவர் பின்னணிப்பாடகி பி.லீலா.
இறுகட்டப்படட வீணையின் கம்பியில் எழும் கம்பீரமான இனிய அதிர்வும் ,எழுச்சியும் மிக்க குரலுக்குச் சொந்தக்காரர் பி.லீலா. மனதைக் கவ்வும் வீறும் , உணர்வுகளைக் கிளர்ந்தெழ வைக்கும் பிசிறற்ற குரலும் மெல்லிய இனிய இழைகளையும் காற்றில் மிதக்க வைக்கும் ஆற்றல்மிக்க குரல் கொண்டவர் லீலா!
செவ்வியலிசை பலமுடைய பி.லீலாவின் குரலின் அமைப்பு,அதன் இனிமை எல்லாவிதமான சுவைகளையும் வெளிப்படுத்தி ,வியாபித்து நிற்பதை உயிரை வருடும் பல இனிய பாடல்களில் கேட்கிறோம்.அவரை ஒத்த பின்னணிப்பாடகிகள் யாரும் தியாகராஜ பாகவதருடன் பாடும் வாய்ப்பு பெறவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். அதுமட்டுமல்லதிரையில் மிக அருந்தலாகப் பாடிய , திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவனுடன் இணைந்து காதல் பாடல் பாடிய பெருமையும் பி.லீலாவையே சேரும்.ஜோடிப்பாடல்களைப் பொறுத்தவரையில் பி.லீலாவை , அவரது ஆரம்ப நாளிலேயே தியாகராஜ பாகவதருடன் பாட வைத்த பெருமை ஜி.ராமநாதனை சேரும்.
பி.லீலா பாடிய ஜோடிப்பாடல்கள்:
01 யானைத் தந்தம் போல பிறை நிலா – அமரகவி [1952 ] – பி.லீலா + தியாகராஜ பாகவதர் – இசை : ஜி.ராமநாதன்
02 கொஞ்சப்பேசும் கிளியே – அமரகவி [1952 ] – பி.லீலா + தியாகராஜ பாகவதர் – இசை : ஜி.ராமநாதன்
03 கண்ணோடு கண்ணாய் ரகசியம் பேசி – மதன மோகினி [1959 ] – பி.லீலா + கே.வி.மகாதேவன் – இசை : கே.வி.மகாதேவன்
04 வாங்க மச்சான் வாங்க – மதுரை வீரன் [1959 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
05 எல்லையில்லாத இன்பத்தில் – சக்கரவர்த்தித்த திருமகள் [1959 ] – பி.லீலா + சீர்காழி கோவிந்தராஜன் – இசை : ஜி.ராமநாதன்
06 நெஞ்சில் குடியிருக்கும் – இரும்புத்திரை [1958 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : எஸ்.வி.வெங்கடராமன்
07 இந்த வாழ்வு சொந்தமானால் – நல்ல தங்காள் [1959 ] – பி.லீலா + திருச்சி லோகநாதன் – இசை : ஜி.ராமநாதன்
08 சுந்தராங்கியை பார்த்தத்தினாலே – கடன் வாங்கி கல்யாணம் [1959 ] – பி.லீலா + ஏ.எம்.ராஜா + சீர்காழி – இசை : எஸ்.ராஜேவாரராவ்
09 பூவின்றி மனமேது பூமியின் மீது – உத்தமி பெற்ற ரத்தினம் [1959 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : டி.சலபதிராவ்
10 தென்றல் உறங்கிடக் கூடுமடி – சங்கிலித் தேவன் [1959 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : டி.ஜி.லிங்கப்பா
11 தாழையாம் பூ முடித்து – பாகப்பிரிவினை [1959 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
12 இளவேனில் சந்திரிகையாள் – தந்தை [1959 ] – பி.லீலா + ஏ.எம்.ராஜா – இசை :
13 புது ரோஜா போலெ – ஆத்மசாந்தி [1959 ] – பி.லீலா + டி.ஏ.மோதி – இசை :
14 கல்யாணம் நம் கல்யாணம் – தங்கமலை ரகசியம் [1959 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : டி.ஜி.லிங்கப்பா
15 நான் செய்த பூஜாபலம் – குணசுந்தரி [1959 ] – பி.லீலா + ஏ.எம்.ராஜா – இசை : கண்டசாலா
16 காதலே தெய்வீகக் காதலே – பாதாள பைரவி [1959 ] – பி.லீலா + கண்டசாலா – இசை : கண்டசாலா
17 ஆடும் ஊஞ்சலைப் போலெ – என் தங்கை [1952 ] – பி.லீலா + டி.ஏ.மோதி – இசை : சி.என்.பாண்டுரங்கன்
18 வாங்க மச்சான் வாங்க – மதுரை வீரன் [1959 ] – பி.லீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
19 வீசும் தென்றலில் – ப்ரேமாபாஸம் [1959 ] – பி.லீலா + ஏ.எம்.ராஜா – இசை : எஸ்.ராஜேஸ்வரராவ்
20 நீதானா என்னை அழைத்தது – மாயா பெயர் [1957] – பி.லீலா + கண்டசாலா – இசை : கண்டசாலா
எல்லாவிதமாகவும் பாடும் ஆற்றல் பெற்றவர் எனபதை நிரூபிக்கும் வகையில் பி.லீலா பாடிய பல்வகைப்பாடல்களுக்கு உதாரணமாக அமைந்த சில பாடல்கள் இங்கே ….
01 கண்ணும் கண்ணும் கலந்து – வஞ்சிக்கோட்டை வாலிபன் [1959 ] – பி.லீலா + ஜிக்கி – இசை : சி.ராமசந்திரா
02 படிப்புக்கொரு கும்பிடு – இரும்புத்திரை [1959 ] – பி.லீலா + ஜிக்கி – இசை : எஸ்.வி.வெங்கடராமன்.
03 வெண்ணிலவே தண்ணிலவே வா வா – வஞ்சிக்கோட்டை வாலிபன் [1959 ] – பி.லீலா – இசை : சி.ராமசந்திரா
04 கன்னம் கருத்தகிளி – சிவகங்கை சீமை [1959 ] – பி.லீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 எங்குமே ஆனந்தம் – பாழே ராமன் [1959 ] – பி.லீலா – இசை : கண்டசாலா
06 பார்க்காத புதுமைகள் எல்லாம் – நான் சொல்லும் ரகசியம் [1959 ] – பி.லீலா இசை : ஜி.ராமநாதன்
07 தேன் சுவை மேவும் – டாகடர் சாவித்திரி [1955 ] – பி.லீலா – இசை : ஜி.ராமநாதன்
08 எண்ணமெல்லாம் இன்பக்கத்தை பேசுதே – சக்கரவர்த்தி திருமகள் [1957] – பி.லீலா – இசை : ஜி.ராமநாதன்
09 ராஜா மக்கள் ரோஜா மலர் – வஞ்சிக்கோட்டை வாலிபன் [1959 ] – பி.லீலா + ஜிக்கி – இசை : சி.ராமசந்திரா.
பி.லீலா பாடிய செவ்வியல் இசை சார்ந்த பாடல்கள்.
பொதுவாக அந்தக்காலத்தில் செவ்வியல் இசையில் பெரும்பாலானவர்களுக்கு பரீட்சயம் இருந்தது என்பதும் அக்கால திரைப்படங்களில் அது சார்ந்த இசை இருந்ததாலும் அதிகமான பாடல்கள் அந்தவகையில் அமைந்திருந்தன. அதில் தனித்துவமிக்க அசைவு,குழைவுகளை,சுருதி சுத்தத்துடன் ,அனாயாசமாகவும் பாடும் வல்லமைமிக்கவராக லீலா திகழ்ந்தார்.
குறிப்பாகதமிழ் திரைப்படங்களில் நாட்டிய காட்சிகளுக்கு அமைக்கப்பட்ட பாடல்களை இலங்கை வானொலி ” நாட்டியப்பாடல்கள் ” என்று தலைப்பிட்டு ஒலிபரப்பி மக்கள் மத்தில் புகழபெற வைத்தார்கள்.என் போன்ற இசைரசிகர்கள் எங்கள் தலைமுறைகளுக்கு முன்னர் வெளிவந்த பல அபூர்வமான பாடல்களை இதன் மூலம் அறிந்து கொள்ள வாய்ப்பும் ஏற்பட்டது. கர்னாடக இசையுலகில் அதிக புகழ் பெற்றிருந்த எம்.எல்.வசந்தகுமாரிக்கு இணையாக பாடும் வல்லமை பெற்றவர் பி.லீலா என்பது எனது கருத்தாகும்.பி.லீலா பாடிய “நாட்டியப்பாடல்கள்” என நாம் அறிந்த அழகான பாடல்கள் சிலவற்றை இங்கே தருகிறேன்.
01 எல்லாம்இன்பமயம் – டாகடர் சாவித்திரி [1955 ] – பி.லீலா + எம்.எல்.வசந்தகுமாரி – இசை : சி.ஆர்.சுப்பராமன்
02 ஆஹா இவர் யாரடி – மோகினி [1953 ] – பி.லீலா + கே.வி .ஜானகி – இசை : சி.ஆர்.சுப்பராமன்
03 காத்திருப்பான் கமலக் கண்ணன் – உத்தமபுத்திரன் [1959 ] – பி.லீலா – இசை : ஜி.ராமநாதன்
04 சிறந்த உலகினில் யாவும் – மாப்பிள்ளை [1955 ] – பி.லீலா + சூலமங்கலம் – இசை :
05 அழகான மாறன் யாரடி – நல்லதீர்ப்பு [1955 ] – பி.லீலா – இசை :
06 சிறந்த உலகினில் யாவும் – மாப்பிள்ளை [1955 ] – பி.லீலா + சூலமங்கலம் – இசை :
07 நீயே கத்தி ஈஸ்வரி – அன்னையின் ஆணை [1955 ] – பி.லீலா – இசை : எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு
08 கொஞ்சும் சலங்கை ஒளி கேட்டு – கொஞ்சும் சலங்கை [1960 ] – பி.லீலா – இசை : எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு
09 வெட்கமாய் ருக்குதடி – பார் மகளே பார் [1963 ] – பி.லீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
இதே காலத்தில் கே.ஜமுனாராணி, கே.ராணிஏ.பி.கோமளா , போன்ற பிற பாடகிகளும் முன்னணியில் பாடிக்கொண்டிருந்தனர் அன்று மெல்ல தலை காட்டிய லத்தீன் அமெரிக்க இசை வார்ப்புகளிலமைந்த பாடல்களையும் ,காதல் பாடல்களையும் , உற்சாகம் தரும் பாடல்களையும் இவர்கள் பாடினார்கள்.
கே.ஜமுனாராணி முக்கியமானபல காதல்பாடல்களையும் பாடினார்.
01 குலுங்கிடும் பூவிலெல்லாம் – வளையாபதி [1951] – கே.ஜமுனாராணி + டி.எம்.சௌந்தரராஜன் -இசை:எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
02 குளிர் தாமரை மலர் பொய்கை – வளையாபதி [1951] – கே.ஜமுனாராணி + டி.எம்.சௌந்தரராஜன் -இசை:எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
03 சங்கீதமே தான் சந்தோசமாக – சந்தானம் [1951] – கே.ஜமுனாராணி + ஏ.எம்.ராஜா – இசை:
04 துரையே இளமை பாராய் – கதாநாயகி [1955] – கே.ஜமுனாராணி + ஏ.எம்.ராஜா – இசை:ஜி.ராமநாதன்
05 குயிலிசையும் குழலிசையும் – சங்கிலித்தேவன் [1960] – கே.ஜமுனாராணி + ஏ.எம்.ராஜா – இசை:டி.ஜி.லிங்கப்பா
06 அதிமதுரா அனுராதா – மனோகரா [1951] – கே.ஜமுனாராணி + ஏ.எம்.ராஜா – இசை:
07 அற்புதக்காட்சியில் ஆயிரம் – பெண் குலத்தின் பெருமை [1951] – கே.ஜமுனாராணி + பி.பி.ஸ்ரீனிவாஸ் – இசை:ஜி.ராமநாதன்
கே.ஜமுனாராணி தனியே பாடி புகழ் பெற்ற பாடல்களில் சில:
01 ஆசையும் என் நேசமும் – குலேபகாவலி [1955] – கே.ஜமுனாராணி – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 உண்மை அன்பு என்னும் – மங்கையர் திலகம் [1955] – கே.ஜமுனாராணி – இசை:எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
03 அன்னத் தீவின் அழகுராணி நான் – ரத்தினபுரி இளவரசி [1960] – கே.ஜமுனாராணி + கே.ராணி + குழு – இசை:
04 மானம் நெஞ்சிலே – கைதி கண்ணாயிரம் [1960] – கே.ஜமுனாராணி – இசை:கே.வி.மகாதேவன்
கே.ஜமுனாராணி சக பின்னணிப்பாடகிகளுடன் இணைந்து பாடிய பாடல்கள் :
01 கனி தின்ன செம்மாவை – அமரதீபம் [1951] – கே.ஜமுனாராணி + கே.ராணி + குழு – இசை: டி.சலபதிராவ்
02 செல்லக்கிளியே அல்லிக் கொடியே – கற்புக்கரசி [1951] – கே.ஜமுனாராணி + நிர்மலா + குழு – இசை:
03 தாரகைச் சோலையிலே – குணசுந்தரி [1951] – கே.ஜமுனாராணி + கே.ராணி – இசை:கண்டசாலா
04 இல்லாத அதிசயமாய் இருக்குதடி – கற்புக்கரசி [1957] – கே.ஜமுனாராணி + ஏ.பி.கோமளா + குழு – இசை:ஜி.ராமநாதன்
05 நாம ஆடுவதும் பாடுவதும் – அலிபாபாவும் 40 திருடர்களும் [1951] – கே.ஜமுனாராணி + ஜிக்கி -இசை:எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
06 ஊருக்கெல்லாம் ஒரே நீதி – ஆளுக்கொரு ஆசை [1951] – கே.ஜமுனாராணி + எல்.ஆர்.ஈஸ்வரி – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி
இங்கே குறிப்பிடப்பிடப்பட்டிருக்கும் அத்தனை பாடகர்கள் , பாடகியர்களையும் மெல்லிசைமன்னர்களும் சிறப்பாகவே அக்கால ஓட்டத்திக்கேற்றவாறு பயன்படுத்தியவர்கள் என்பதை தரப்பட்டுள்ள பட்டியலில் சுட்டிக் காட்டியுள்ளேன்.
பின்னோக்கிப் பார்க்கும் போது பலவிதமான குரல்கள் வெவ்வேறு சுவைகளையும் வெளிப்படுத்துவதும் , இவற்றை விரித்து எழுத்துமளவுக்கும் சிறப்பான பாடல்கள் வெளிவந்ததென்பதையும் நாம் மறந்துவிட முடியாது .இதன் காரணமாகவே தமிழ் திரை இசையின் பொற்காலம் என 1950 களில் வெளிவந்த பாடல்களைக் கொண்டாடும் வெகுசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவை சிறப்பான பாடல்கள் ஆயினும் அதன் போதாமையை நாம் அக்கால ஹிந்தி திரையிசையுடன் ஒப்பு நோக்கும் போது உணர்கின்றோம். ஒலிப்பதிவு துல்லியத்திலும் , வாத்திய சேர்க்கைகளின் அணிவகுப்பிலும் பின் தங்கியிருந்ததை நாம் எளிதில் காணலாம்.
1950 களின் இறுதிவரை இசை நட்சத்திரங்களாக இருந்த பி.லீலா, ஜிக்கி போன்றோரின் திறமைகளை கணிசமான அளவில் பயன்படுத்தி வந்த மெல்லிசைமன்னர்கள் 1960 களின் ஆரம்பத்தில் தமக்கென புது சங்கீதப் பொழிவுகளை , புதுநாத வினோதங்களை ,புது ராக சாயல்களை வழங்கி மெல்லிசை முன்னோட்டங்கள் நிகழ்த்த ஏற்கனவே இருந்த சில பலவீனங்களை , வரைவிலக்கணங்களை மீற செவ்வியல் வளமும் ,வலிவும் மிக்க ஏலவே பாடிக் கொண்டிருந்த சில பாடகர் ,பாடகிகளை முன்னிலைப் படுத்த முனைந்தனர். அவர்களில் முதன்மையானவர்களாக டி.எம்.சௌந்தரராஜன் , பி.சுசீலா ,பி.பி.ஸ்ரீனிவாஸ் ,எல்.ஆர் .ஈஸ்வரி, கே.ஜமுனாராணி போன்றோரை நாம் காண்கிறோம்.
தமக்கெனத் தனியிடம் ஒன்றை அமைத்துக்கொண்ட , அல்லது தாம் மனப்பூர்வமாக விரும்பிய ஒரு இசைப்பாணியையையும் ,அதற்கொப்ப தமக்கு பிடித்தமான பாடகி , பாடகர்களை முன்னிலைப்படுத்தினர். 10 வருடங்கள் முன்னோக்கியிருந்த ஹிந்தி திரையிசைபோக்கின் செல்வாக்கை மறந்தோ ,மறைத்தோ செயற்படாமல் மெட்டமைப்பிலும் , வாத்திய அமைப்பிலும் , ஒலித்துல்லியத்திலும் அவற்றை எட்ட முனைந்தனர்.
ஹிந்தி சினிமாவில் வெளிவந்த பாடல்களின் ஆதிக்கம் என்பது பாடும் முறையிலும் பல அதிர்வுகளை வெளிப்படுத்தியிருப்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஓங்கிக்குரல் எடுத்து பாடும் ஒரு முறை செல்வாக்கிழந்து குறைந்த சுருதியில் பாடினாலும் இனிமை காட்ட முடியும் என்பதை ஹிந்திப்பாடகர்களான முகம்மது ராபி , முகேஷ் போன்ற பாடகர்கள் தங்கள் பாடும் ஆற்றல்களால் பெரு அதிர்வுகளை ஏற்படுத்தினர். அவர்களை ஆதர்சமாகவே கொண்டு பிற்காலத்தில் புகழபெற்ற பாடகர்கள் உருவாகினார்கள்.
1950 களிலும் ஹிந்திப் பாணியில் பாடும் முறையைக் கொண்டிருந்தவர்களாக ஏ.எம்.ராஜா, டி.ஏ.மோதி , கண்டசாலா போன்ற பாடகர்களைக் காண்கிறோம்.மெல்லிசைப்பாங்கான காதல் மெட்டுக்களை பாடுவதென்றால் , அதற்குரியவர்கள் இவர்களே [ ஏ.எம்.ராஜா, டி.ஏ.மோதி , கண்டசாலா ] என்று சொல்லுமளவுக்குப் பாடல்கள் வெளிவந்தன எனபதற்கு உதாரணமாக அமைந்த சில பாடல்களை இங்கே உதாரணமாக கூறலாம்.
01 ஆடும் ஊஞ்சலைப் போலெ – என் தங்கை [1952 ] -டி.ஏ.மோதி + பி.லீலா – இசை : சி.என்.பாண்டுரங்கன்
02 மைவிழி மேல் பாய்ந்தே நீ – நல்ல பிள்ளை [1953 ] – ஏ.எம்.ராஜா பி.லீலா – இசை : வேதா
03 மணி அடித்ததினால் -நல்ல பிள்ளை [1953 ] – ஏ.எம்.ராஜா + பி.லீலா – இசை : வேதா
04 சிங்கார பைங்கிளியே பேசு – மனோகரா [1954 ] – ஏ.எம்.ராஜா + பி.லீலா – இசை :எஸ்.வி.வெங்கடராமன்
05 நிலாவில் உல்லாசமாய் பாடலாம் – மனோகரா [1954 ] -டி.ஏ.மோதி + டி.வி.ரத்தினம் – இசை : இசை :எஸ்.வி.வெங்கடராமன்
06 ஓ..ஓ..தேவதாஸ் – தேவதாஸ் [1952 ] – கண்டசாலா + கே.ராணி – இசை :சி.ஆர்.சுப்பராமன்
07 வான வீதியிலே பறந்திடுவோம் – நால்வர் [1953 ] – திருச்சி லோகநாதன் + பி.லீலாஎம்.எல்.வசந்தகுமாரி – இசை :எஸ்.வி.வெங்கடராம ன்.
குறிப்பாக முகமத் ராபி [ Mohammad Rafi ] பாடும் பாணி இன்றுவரையும் அதிக செல்வாக்கு செலுத்துகிறது என்பதை நாம் காண்கிறோம். 1950 ஆண்டு புகழின் உச்சியிலிருந்து திலீப்குமார்,அசோக்குமார் போன்றோருக்கு அதிகமாகப் பாடும் வாய்ப்பை நௌசாத், சி.ராமச்சந்திரா போன்ற இசையமைப்பாளர்கள் முகமத் ராபிக்கு வழங்கினார்கள்.
முகம்மது ரபி யின் பாடும் பாணியை பின்பற்றி உருவான பாடகர்களான ஜேசுதாஸ் , ஜெயசந்திரன், பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் நம் கவனத்திற்குரிய அடுத்த சந்ததிப் பாடகர்கள் என்பது அவரது பாடும் பாணியின் பாதிப்பாகும்.பாலசுப்ரமணியம் ராபியை பின்றினார் என்று கூறினாலும் அவர் கண்டசாலாவைப் பிரதி பண்ணியவர் என்பதே உண்மை.
1940 களின் நடுப்பகுதியில் ஹிந்தியில் முன்னணியிலிருந்த சம்சாட் பேகம் ,நூர்ஜகான், சுரையா போன்ற பல பாடகிகள் பின்தள்ளப்பட்டு அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த இசையமைப்பாளர்களான அணில் பிஸ்வாஸ், ஹெம்சந்த் பிரகாஷ் ,ஷகீல் , மாஸ்டர் கைடெர் போன்றவர்களால் வாய்ப்பு வழங்கப்பட்டு முன்னணிக்கு கொண்டுவரப்பட்டவர் லதா மங்கேஷ்கர்.
மெல்லிசைமன்னர்கள் தமக்கான ஒரு நிலையான இடத்தை பிடித்துக் கொண்டதும் தங்களுக்குத் தோதான ,அல்லது தாம் விரும்பிய ஒரு சில பாடகர்களை முன்னிலைப்படுத்தினர்.அவர்களில் முதன்மையானவர்களாக டி.எம்.சௌந்தரராஜன் , பி.சுசீலா , பி.பி.ஸ்ரீனிவாஸ் , எல்.ஆர்.ஈஸ்வரி , கே.ஜமுனாராணி போன்றோரை நாம் குறிப்பிடலாம்.
பொதுவாக குறித்த சில தயாரிப்பாளர்கள் , நடிகர்கள் தங்களுக்கான தொழில் நுட்பக்கலைஞர்களை ஒரு குழுவாக வைத்திருப்பதன் மூலம் ஒவ்வொரு கலைஞர்களும் ஒருவரின் இயல்புகளை இலகுவாகப் புரிந்து கொள்ளவும் வழி அமைத்துக் கொடுப்பதென்பதால் குழுக் குழுவாக இயங்குவதை நாம் இன்றும் காண்கிறோம்.அதன் மூலம் குழுமனப்பான்மை அன்றும் நிலவியதை காண்கிறோம்.
அந்தவகையில் மெல்லிசைமன்னர்கள் தங்களுக்கு பிடித்தமான சிலகலைஞர்களை பயன்படுத்தினார்கள். சிலரை பயன்படுத்தாமலே விட்டு சென்றனர். அவர்களால் முன்னுக்கு கொண்டுவரப்பட்ட கே.ஜமுனாராணியையும் ,ஏற்கனவே புகழ் பெற்றிருந்த ஏ.எம்.ராஜாவையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
அக்காலத்தில் ” முதலாளிகள் ” என்ற அந்தஸ்த்திலிருந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் நடிகர்களையே மிரட்டி வைக்கக்கூடியவர்களாக இருந்தனர். அவர்கள் முன் கைகட்டி வாய் பொத்தி நின்ற கலைஞர்கள் ஏராளம்.பின்னர் நடிகர்கள் முன்னணிக்கு வந்தாலும் “முதலாளி” களை கனம் பண்ணியே வந்தனர்.இந்த நிலையிலே மெல்லிசைமன்னர்கள் , தாம் நினைத்ததை சாதிக்கும் ஒரு நிலைக்கு வந்ததும் தமக்குப் பிடித்த பாடகர்களை கவிஞர்களை முன்னணிக்கு கொண்டுவந்ததையும் , பிடிக்காதவர்களை புறம் தள்ளுவதையும் காண்கிறோம்.
“அமுதும் தேனும் எதற்கு ” என்ற புகழ் பெற்ற பாடலை இயற்றிய புகழபெற்ற கவிஞர் சுரதாவிடம் ” நீங்கள் ஏன் அதிகமான பாடல்கள் எழுதவில்லை ” என புலபெயர் தொலைக்காட்சி பேட்டி நிகழ்சசி ஒன்றின் கேள்விக்கு ” நான் அதற்கு பின் ஒரு சில பாடல்கள் தான் எழுதியுள்ளேன். ” விண்ணுக்கு மேலாடை “நான் எழுதிய பாடல் தான். இசையமைப்பாளர்கள் யாராவது கூப்பிட்டால் தானே எழுத முடியும்!? இளம்வயதில் ஆர்மோனியம் வாசித்த விஸ்வநாதனை நான் தான் எம்.எஸ்.ஞானமணியிடம் சேர்த்து விட்டேன் ; அவர் கூப்பிட்டாரா ..? என்று வருத்தப்பட்டார். எத்தனையோ ஆற்றல்மிக்க பாடலாசிரியர்கள் மறக்கடிக்கப்பட்டு விரல்விட்டு எண்ணக் பாடலாசிரியர்களே குழுவாக இயங்கினர்.
1950 களில் புகழ்பெற்ற நடிகர்களாக விளங்கிய எம்.ஜி.ஆர்,சிவாஜி போன்ற நடிகர்களுக்கு இன்னார் பாடினால் நன்றக இருக்கும் என்ற ஒருவிதமான போலிக் தோரணை உருவாக்கப்பட்டது. சிவாஜி நடித்த முதல்படமான பராசக்தி அமோகமான வெற்றி பெற்றது.அந்தப்படத்தில் அவருக்கான பின்னணிப்பாடல்களைப் பாடியவர் அக்காலத்தில் பெரும் புகழபெற்றிருந்த இசைத்சித்தர் என்று போற்றப்பட்ட சி.எஸ்.ஜெயராமன் ஆவர்.படத்தின் வெற்றிக்கு வசனமும் பாடல்களும் பெரும் பங்காற்றின.சிவாஜிக்கு சிதம்பரம் ஜெயராமனின் குரல் தான் பொருத்தம் என்ற எண்ணம் சிவாஜிக்கும் இருந்ததாகவே தெரிகிறது.
இருப்பினும் பராசக்தியைத் தொடர்ந்து சிவாஜி நடித்த அன்பு [ 1953 ] , கண்கள் [ 1953 ] ,மனிதனும் மிருகமும் [ 1953 ] , இல்லற ஜோதி [ 1954 ] ,கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி [ 1954 ] , எதிர் பாராதது [ 1954 ] , காவேரி [ 1954 ] ,மங்கையர் திலகம் [ 1954] படங்களில் சிவாஜிக்கு பெரும்பாலான காதல் பாடல்களை பாடியவர் ஏ.எம்.ராஜா மற்றும் டி.ஏ.மோதி மற்றும் எம்.சத்யன் போன்றோர் பாடினார்கள்.
சிவாஜிக்கு ஏ.எம்.ராஜா பாடிய சில பாடல்கள் :
01 எண்ண எண்ண இன்பமே – அன்பு [1953 ] – ஏ.எம்.ராஜா + ஜிக்கி – இசை : டி.ஆர்.பாப்பா
02 ஆடவர் நாட்டினிலே – அன்பு [1953 ] – ஏ.எம்.ராஜா + எம்.எல்.வசந்தகுமாரி – இசை : டி.ஆர்.பாப்பா
03 ஒன்றும் புரியவில்லை தம்பி – அன்பு [1953 ] – ஏ.எம்.ராஜா – இசை : டி.ஆர்.பாப்பா
04 கன்னியரின் வெள்ளை மனம் போல் – திருப்பிப்பார் [1953 ] – ஏ.எம்.ராஜா + சுவர்ணா – இசை : ஜி.ராமநாதன்
05 சிற்பி செதுக்காத பொற்சிலையே – எதிர்பாராதது [1953 ] – ஏ.எம்.ராஜா + ஜிக்கி – இசை :சி.என்.பாண்டுரங்கன்
06 தேன் உண்ணும் வண்டு – அமரதீபம் [1955 ] – ஏ.எம்.ராஜா + சுசீலா – இசை : டி.சலபதிராவ்
07 நீ வரவில்லையெனில் ஆதரவேது – மங்கையர் திலகம் [1955 ] – எம்.சத்தியன் – இசை : எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி
இதே காலத்தில் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த அந்தமான் கைதி [1952] குமாரி [1953] நாம் [1953] , ஜெனோவா [1953] குலேபகாவலி [1953] போன்ற படங்களின் முக்கியமான பாடல்களை பாடியவர் ஏ.எம்.ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
1954 இல் எம்.ஜி.ஆர்,சிவாஜி இணைந்து நடித்த படமான கூண்டுக்கிளி [1954] படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் ” கொஞ்சும் கிளியான பெண்ணை ” என்ற பாடலை டி.எம் சௌந்தரராஜன் முதன் முறையாக சிவாஜிக்காகவும் , மலைக்கள்ளன் [1953] படத்தில் ” எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடலை எம்.ஜி.ஆருக்குக்காகவும் பாடினார்.ஆயினும் அக்கால்க் காதல் பாடல்களை பாடியவர் ஏ.எம்.ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
01 மயக்கும் மாலை பொழுதே நீ போ – குலேபகாவலி [1953 ] – ஏ.எம்.ராஜா + ஜிக்கி – இசை : கே.வி.மகாதேவன்
02 இருளிலே நிலவொளி போல் – குமாரி [1953 ] – ஏ.எம்.ராஜா + ஜிக்கி – இசை : கே.வி.மகாதேவன்
03 கண்ணுக்குள் மின்னல் காட்டும் தெய்வ – ஜெனோவா [1953 ] – ஏ.எம்.ராஜா + பி.லீலா – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
04 கண் மூடும் வேளையிலும் – மகாதேவி [1957 ] – ஏ.எம்.ராஜா + சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பின்னர் டி.எம்.சௌந்தரராஜன் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்காத இக்காலத்தில் இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் என்ற ஒரு நிலை இல்லாமல் எல்லாப் பாடகர்களும் எல்லா நடிகர்களுக்கும் பாடினார்கள்.தூக்குத் தூக்கி படத்தில் பாடும் வாய்ப்பு பெற்ற திருச்சி லோகநாதன் பாடல்கள் குறித்த ஊதிய பிரச்சனையால் விலகிய நிலையில் ,குறைந்த விலையில் பாட டி.எம்.சௌந்தர்ராஜனை சிபாரிசு செய்தததும் ,ஏற்கனவே ஜி.ராமநாதனின் ஆதரவு பெற்ற டி.எம்.எஸ் அந்த வாய்ப்பை பெற்றார்.
எனினும் ஏலவே சிவாஜிக்கு டி.எம்.எஸ்.பின்னணி பாடியிருந்தும் சிவாஜி, தனக்கு பின்னணி பாட சி.எஸ் ஜெயராமன் தான் வேண்டும் என்ற நிலையில் ,படத்தின் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் சிவாஜியிடம், ” புதுப்பையன் [டி.எம் சௌந்தரராஜன்] பாடுவதைக் கேளுங்கள் ,பிடிக்கவில்லை என்றால் மாற்றி விடுவோம்” என்ற பரிந்துரையில் சில பாடல்கள் ஒலிப்பதிவு செய்து சிவாஜிக்கு காண்பிக்கப்பட்டது.சில பாடல்களை ஈடுபாடில்லாமல் கேட்ட சிவாஜி ” ஏறாத மலைதனிலே ஜோரான கௌதாரி இரண்டு ” என்று டி.எம்..சௌந்தரராஜன் ஓங்கிக்குரல் எடுத்துப் பாடிய நாட்டுப்பாங்கான பாடலைக் கேட்டு வியந்து பாராட்ட நேர்ந்தது.பிசிறின்றி ஓங்கி ஒலித்த அந்தக் குரல் பின்னாளில் சிவாஜியின் நிரந்தரக்குரலாக மாறியதற்கு ஆரம்பப்புள்ளியாய் அமைந்தது தூக்குத்தூக்கி திரைப்படம்.
டி.எம்.சௌந்தர்ராஜனின் குரல் சிவாஜிக்கு பொருத்தம் என்று பெயர் பெற்றாலும் அதைத் தொடர்ந்த திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் ,சிவாஜி போன்றவர்களுக்கு ஆங்காங்கே பாடிவந்தாலும் சீர்காழி கோவிந்தராஜன் ,சிதம்பரம் ஜெயராமன்,ஏ.எம்.ராஜா போன்றோரும் முக்கியமான பாடல்களை பாடினர்.
பின்னணி என்பதே ” நடிகர்கள் பாடுவதில்லை” என்று பரவலாக தெரிந்த பின்னரும் இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் என்ற எழுதப்படாத விதி உருவாகி நிலைநிறுத்தப்பட்டது மெல்லிசைமன்னர்கள் காலத்திலேயே !
மெல்லிசைமன்னர்கள் இசையில் எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி என்ற திரைப்படத்தில் ” அநியாயம் இந்த ஆடசியிலே அநியாயம் ” என்ற பாடலே டி.எம்.எஸ் பாடிய முதல் பாடலாக அமைந்தது. கொடுமைக்கார அரசியின் வரிமுறையின் அநீதிகளை பட்டியல் போட்டு எதிர்த்துத் தட்டிக் கேட்கும் இந்தப்பாடல் எம்.ஜி.ஆறும் அவரைச் சார்ந்த தி.மு.க கடசியின் பிரச்சார முறைக்கும் தோதாக அமைந்தது.இந்தப்படத்தின் மூலம் டி.எம்.எஸ் வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னிலை பெற்றதும் மெல்லிசைமன்னர்களின் கூட்டின் பங்காளியானதும் நாம் அறிந்ததே.தொடர்ந்து மெல்லிசைமன்னர்கள் இசையில் மட்டுமல்ல கே.வி.மகாதேவன் போன்ற பலரது இசையிலும் டி.எம்.எஸ் பல பாடல்களை பாடினார்.
டி.எம்.சௌந்தர்ராஜனின் குரல் வளம் , பாடும் திறன் , குரலின் தனித் தன்மை , தனிச் சிறப்பொலி, தொனி போன்றவற்றை உணர்ந்து புது வகையில் பாட வைத்த பெருமை மெல்லிசைமன்னர்களை சாரும்.ஜி.ராமநாதனின் இசையில் வார்த்தெடுக்கப்பட்டு ,பட்டை தீட்டப்படட ஓங்கி குரலெடுத்து பாடும் குரலை பாடல்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உயிர்ப்பண்பிற்கு ஏற்ப வடிவமைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள்.
புதிதான மெல்லிசைப்பாணியில் பாடல்களை அமைத்தாலும் , மரபு சார்ந்து ஓங்கிக்குரல் எடுத்துப்பாடும் அவரின் குரலின் சுருதிக்கு அனுசரணையாகவும் வேகம்மிக்க விறுவிறுப்பான பாடல்களை அமைத்து புதுமை செய்தார்கள்.
பின்னணி பாடுவது என்பது தொழில் நுடபத்தின் வளர்ச்சியில் கிடைத்த ஒன்று.காலமாற்றத்தின் வளர்ச்சியில் பாடும் மரபிலிருந்து வந்த கலைஞர்களின் பற்றாக்குறையும் , பாட முடியாத புதிய கலைஞர்களின் வருகையும் பின்னணி பாடுவதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தது.அழகான தோற்றம் கொண்ட நடிகர் ,நடிககைகளால் பாட முடியாத தன்மையையும்,அவர்களின் கவர்ச்சியை தவிர்க்க முடியாத காரணங்ககளாலும் காலப்போக்கில் பின்னணி பாடுவது என்பது தவிர்க்க முடியாத முக்கிய அம்சமாகவும் மாறியது.
1945 இல் வெளிவந்த ஸ்ரீவள்ளி படத்தில் நடிகை லட்சுமியின் தாயாரான ருக்மணி , டி.ஆர்.மகாலிங்கத்திற்கு இணையாக பாட முடியாத காரணத்தால் பி.ஏ.பெரியநாயகி பின்னணி பாட நேர்ந்தது.அப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை ” கிட்டப்பாவின் பாட்டுக்களை பயன்படுத்தி கொண்டு மகாலிங்கத்தை நடிக்க செய்துள்ளனர் ” என்று அன்றைய பத்திரிகைகள் எழுதின.[தகவல் : திரை இசை அலைகள் – வாமனன் ]
பின்னணி பாடுவதால் பல புதிய பாடகர் ,பாடகிகள் முன்னணிக்கு வந்தார்கள். 1950 களில் பல்வகைக்குரல்கள் ஒலித்தன.1950 களின் இறுதிவரை இன்னாருக்கு இன்னார் பாட வேண்டும் என்ற நிலையில் இல்லாமல் எல்லா பாடகர்களும் எல்லா நடிகர்களுக்கும் பாடினார்கள்.பின்னாளில் இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் என்ற நிலையில்லாமல் பாடலின் தன்மை , உணர்வுகளுக்கு ஏற்ப பாடகர்கள் பயன்படுத்தப்பட்டனர்.உதாரணமாக சிவாஜி , எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களுக்கு பலவிதமான பாடகர்களும் குரல் கொடுத்தார்கள். உதாரணமாக எம்.ஜி .ஆர் பாடல்கள் சில.
01 ஆணழகா எனது கைகள் செய்த புண்யமே – சர்வாதிகாரி [1951 ] – திருச்சி லோகநாதன் + பி.லீலா – இசை: வி.தட்க்ஷிணாமூர்த்தி
02 தடவி பார்த்து தெரிந்து கொள் – சர்வாதிகாரி [1951 ] – வி.தட்க்ஷிணாமூர்த்தி + பி.ஏ.பெரியநாயகி – இசை: வி.தட்க்ஷிணாமூர்த்தி
04 காணி நிலம் வேண்டும் பராசக்தி – என் தங்கை [1952 ] – சி.எஸ்.ஜெயராமன் + எம்.எல்.வசந்தகுமாரி – இசை: சி.என் பாண்டுரங்கன்
05 எல்லையில்லாத இன்பத்திலே – சக்கரவர்த்தி திருமகள் [1957 ] – சீர்காழி + பி.லீலா – இசை: ஜி.ராமநாதன்
06 காணி நிலம் வேண்டும் பராசக்தி – என் தங்கை [1952 ] – சி.எஸ்.ஜெயராமன் + எம்.எல்.வசந்தகுமாரி – இசை: சி.என் பாண்டுரங்கன்
சிவாஜிகாகவும் பலரும் பாடினார்கள். சில உதாரணங்கள்:
01 நான் ஏன் வரவேண்டும் – பூங்கோதை [1953 ] – டி.பி.ராமசந்திரன் + ஜிக்கி – இசை: ஆதிநாராயணராவ்
02 பூனை கண்ணை மூடிக் கொண்டால் – ராஜாராணி [1955 ] – எஸ்.சி.கிருஷ்ணன் – இசை: டி.ஆர்.பாப்பா
03 விந்தியம் வடக்காக – தென்னாலிராமன் [1953 ] – வி.என்.சுந்தரம் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 ஆடரி படர்ந்த -தென்னாலிராமன் [1953 ] – வி.என்.சுந்தரம் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 சிங்கார பைங்கிளியே பேசு -தென்னாலிராமன் [1953 ] – ஏ.எம்.ராஜா + ராதா ஜெயலட்சுமி – இசை: எஸ்.வி.வெங்கடராமன்
06 காணா இன்பம் கனிந்ததேனோ -சபாஷ் மீனா [1953 ] – டி.ஏ. மோதி + பி.சுசீலா – இசை: டி.ஜி.லிங்கப்பா.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒருவிதமான ” சாய்ந்தால் சாய்ந்த பக்கம் சாயும் செம்மறி ஆடுகள் ” போல சாயும் ஒரு போக்கு அன்றிலிருந்து இன்றுவரை நிலவி வருவதை நாம் காண்கிறோம்.வர்த்தக சூத்திரத்தின் மந்திரமான “வெற்றிக்கனிகள் ” பறிக்கும் ஒருவிதமான கற்பனாவாதம் கட்டமைக்கப்பட்டு அதனடிப்படையில் இயங்குவது.அதன் சாராம்சம் “வெற்றி பெற்றவர்களே புத்திசாலிகள் “என்ற தவறான கண்ணூட்டம் ஆகும்.அன்றிலிருந்து இன்றுவரை ” மார்க்கட் நிர்ணயம் ” என்ற அடிப்படையில் மாறாமல் இருந்து வருகிறது.
பாடுவதிலும் சில பாடகர்கள் சில நடிகர்களின் குரலுக்கு நெருக்கமாக இருப்பதால் அவர்களே பாட வேண்டும் என்று ஒரு போலி நியாயம் கற்பிக்கப்பட்டு தங்களுக்கு பிடித்த சிலரை முன்னணிக்கு கொண்டு வந்தார்கள் எனபதே உண்மை. பொதுவாக சிவாஜி,எம்.ஜி.ஆர், ஜெமினிகணேசன் குரல்கள் வெவ்வேறு விதமானவை.
இவர்களே முன்னணி நடிகர்களாக அன்று இருந்ததால் , குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்களுக்கு டி.எம்.சௌந்தரராஜன் பாடுவது தான் பொருத்தம் எனக் கருதப்பட்டது. டி.எம்.சௌந்தர்ராஜனின் குரல் நேர்த்தியும், எல்லாவிதமான சுருதிகளிலும் பாடும் ஆற்றலும் அவரின் குரலை பலரும் விரும்புவதற்கான காரணங்களாய் அமைந்தன.ஏற்கனவே தியாகராஜ பாகவதரின் ரசிகர்களாக இருந்த பலரும் அவர் குரலின் தன்மையை சௌந்தர்ராஜனின் குரலிலும் அனுபவித்திருக்கக் கூடும்.
அன்றிருந்த தியாகராஜ பாகவதரின் பரமரசிகரான டி.எம்.எஸ் அவரின் பாடல் பாணியை பின்பற்றி பாடி அவரின் நகலாக தன்னை வளர்த்துக் கொண்டவராயினும் , பின்னர் தனது குரலில் மெருகேற்றிக்கொண்டவரராவார். தியாகராஜ பாகவதர் மெல்லிய குரல் போலல்லாமல் டி.எம்.எஸின் குரலின் பின்னாளில் கனமிருந்தது. ஓங்கி குரல் எடுத்து பாடும் ஆற்றலும், ஆண்மைமிக்க குரல் ரீங்காரமும் அவரது குரலில் இருந்தது. இந்த தன்மைதான் அன்றைய இசையமைப்பாளர்கள் இவரை நாட்டுப்புறப்பாடல்களை பாட வைக்க காரணமாய் அமைந்தது எனலாம்.மந்திரி குமாரி [1951] படத்தில் ” அன்னமிட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே ” என்ற பாடலும் , ,சர்வாதிகாரி [1951 ] படத்தில் ” பஞ்சமும் நோயுமில்லா நாடே இந்த உலகிலே நல்ல நாடுன்னு ” என்ற பாடலும் கிராமிய பாணியில் அமைந்திருந்தமையை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
காதல் பாடல்கள் பாடுவதென்றால் கண்டசாலா ,ஏ.எம்.ராஜா, டி.ஏ.மோதி போன்ற பாடகர்கள் என இருந்த அக்காலத்தில் டி.எம்.சௌந்தரராஜன் மற்றவர்களை போல பாடி தன்னைத் தக்கவைத்துக் கொண்டாரோ என்று எண்ண வைக்குமளவனுக்கு சில பாடல்களை பாடியுள்ளார். வளையாபதி படத்தில் ” குலுக்கிடும் பூவில்லெல்லாம் ” என்ற பாடலை கண்டசாலா சாயலிலும், செல்லப்பிள்ளை படத்தில் ” நாடு நடக்கிற நடையிலே ” என்ற பாடல் நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி சாயலிலும் இருப்பதை நாம் கேட்கலாம்.சுருக்கமாக சொன்னாலே தனது குரலை அடக்கி வாசித்தார் என்றே எண்ணத் தோன்றுகிறது.எப்படியாவது தான் பாட வேண்டும் என்றல் ஆவல் அவரிடம் மேலோங்கியிருந்ததன் அடையாளங்கள் இவை. அதுமட்டுமல்ல தூக்குத்தூக்கி படத்திற்கான பாடல்களை இலவசமாகவே பாடித்தருவதாக கூறியதாவதும் செய்திகள் உண்டு.
1950 களின் நடுப்பகுதியில் பின்னர் எம்.ஜி.ஆருக்கும் ,சிவாஜிக்கும் , இவர் தான் பொருத்தம் என்ற போக்கு நிலவியது.ஆனாலும் புறநடையாக வேறு நடிகர்களுக்கும் அவர் பாடிய பாடல்களும் வெளிவந்தன. இவருக்கும் அவர் தான் பொருத்தமான குரல் என்று பேசப்பட்ட காலத்திலேயே ஜெமினி கணேசனுக்கு அவர் பாடிய பாடல்கள் பலரின் கருத்துக்களுக்கு எதிரானவையாகவே உள்ளன.இந்த பொருத்தம் என்ற சங்கதியை சுக்குநீராக உடைக்கும் சில பாடல்களை இங்கே தருகிறேன்.
01 இதயவானிலே உதயமனதே -கற்புக்கரசி [1956 ] – டி.எம்.சௌந்தரர்ராஜன் – இசை: ஜி.ராமநாதன்
02 காதல் கீதம் கேட்குமா – கொஞ்சும் சலங்கை [1960 ] – டி.எம்.சௌந்தரர்ராஜன் – இசை: எஸ்.எம்.சுப்பையாநாயுடு
03 சத்தியமே லட்சியமாய் கொள்ளடா – நீலமலைத் திருடன் [1958] – டி.எம்.சௌந்தரர்ராஜன் – இசை: கே.வி.மகாதேவன்
இன்று இந்தப்பாடல்களைக் கேட்பவர்கள் இவை எம்.ஜி.யாருக்கோ அல்லது சிவாஜிக்கோ பாடல்கள் என்றே நினைப்பார்கள்!
உண்மை என்னவென்றால் பாடலின் தன்மை , உணர்வுகளுக்கு ஏற்ப பாடல்கள் அமைக்கப்படடன என்ற ரீதியிலும் ,தயாரிப்பாளர்கள் ,நடிகர்கள் இசையமைப்பாளர்களின் விருப்பம்
போன்றவற்றிற்கமையவே பாடகர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.இந்த நிலையால் பல பாடகர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது முக்கியமான விடயமாகும்.
நடிகர்களை பொறுத்தவரையில் யார் பாடினாலும் கவலையில்லை என்பதே உண்மை. சிவாஜியைப் பொருத்தவரையில் யார் பாடினாலும் அவர்களின் குரலுக்கு ஏற்ப தனது நடிப்பாற்றலாலேயே அவற்றை வெற்றி பெற வைக்க முடியும் நம்பிக்கை இருந்தது. எம்.ஜி.ஆர் தி.மு.க சார்பானவர் என்பதும் , அதன் கொள்கைகளை பிரகடனப்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். அதன் போக்கில் டி.எம்.ஸும் வேறு சிலரும் அந்த வகையான பாடலகளை பாடினர்.இந்நிலையில் இன்னாருக்கு இன்னார் பாட வேண்டும் என்ற நிலை 1960 களிலேயே உச்சம் பெற்றது.
ஒலியுடன் கூடிய காட்சி ஊடகம் எவ்வளவு வலிமையானது என்பதை இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம். ஒரே விதமான குரல் தொடர்ந்து குறிப்பிடட நடிகருக்கு குரல் கொடுக்கும் போது மிக எளிதாக ரசிகர்கள் மனதில் அது தரும் படிமம் இலகுவில் படிந்து விடுகிறது.1980களில் நடிகர் மோகனுக்கு பின்னணிக்குரல் கொடுத்த பாடகர் சுரேந்தர் குரலை நினைத்துப்பார்க்கலாம்.
சிவாஜிக்கும்,எம்.ஜி.ஆருக்கும் தொடர்ந்து எஸ்.கிருஷ்ணன் பாடியிருந்தாலும் நாம் அவர் தான் இருவருக்கும் பொருத்தம் நினைத்திருப்போம்.எஸ்.சி.கிருஷ்ணன் என்ற பாடகர் பெரும்பாலும் நகைச்சுவை நடிகரான தங்கவேலுவுக்கு பின்னணி பாடுபவராக இருந்தார். இது திரையில் பார்த்து பழகுவதால் எழும் மனப்பிரமை அன்றி வேறென்ன ?
குழுமனப்பான்மை இசையிலும் வலுப்பெற்றது.தொடர்ந்து பல வருடங்களாக ஒரு சில இசையமைப்பாளர்களும் ஒரு சில பாடகர்களும் இயங்கியது தமிழ் சினிமா விதியாயிற்று.
இந்த சூழ்நிலைகளைக் கூர்ந்து அவதானிக்காதவர்கள் கூட பாடகர்களில் டி.எம்.சௌந்தரராஜன் , பி.சுசீலா ,பி.பி.ஸ்ரீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி போன்றோர் மிகவும் முன்னிலைப்படுத்தப்பட்டனர் என்பதை இலகுவாகக் கண்டுகொள்ளலாம். இதற்கு பல உதாரணங்களை நாம் கூறலாம்.
பாவமன்னிப்பு படத்தில் ஜெமினி கணேசன் பாடுவதாக அமைந்த “காலங்களில் அவள் வசந்தம் ” பாடலை ஏ.எம்.ராஜா தான் பாட வேண்டும் என்பது படத்தின் தயாரிப்பாளரின் விருப்பமாக இருந்தது.ஏனெனில் ஜெமினி கணேசனுக்கு ஏ.எம்.ராஜா பாடுவது தான் அன்றைய வழமையாக இருந்தது.ஆயினும் எம்.எஸ்.விஸ்வநாதன் அவரின் வேண்டுகோளையும் மீறி பி.பி.ஸ்ரீனிவாசை தனது விருப்பப்படியே பாட வைத்தார்.இந்தப் பாடல் ஒன்றின் மூலமே பி.பி.ஸ்ரீனிவாஸ் புகழின் உச்சிக்குச் சென்றார்.அந்தக்காலத்தில் ஜெமினிக்கு ஏ.எம்.ராஜா தான் பாட வேண்டும் என்ற நிலையிருந்தது.
ஏ.எம்.ராஜா ஒரு சிறந்த பாடகர் மட்டுமல்ல தலைசிறந்த இசையமைப்பாளராகவும் , இசையமைப்பில் மெல்லிசைமன்னர்களுக்கு சளைத்தவரில்லை எனபதும் ஒரு வகையில் மிகப்பெரிய போட்டியாளராக இருந்ததென்பதும் நமது கவனத்திற்குரியதாகும்.
இனிமையாகப் பாடுவதில் மட்டுமல்ல , கல்யாணப்பரிசு , தேன் நிலவு , விடிவெள்ளி , ஆடிப்பெருக்கு ,அன்புக்கோர் அண்ணி போன்ற பல படங்களுக்கு இசையமைத்து தமிழ் திரையிசையை மெல்லிசைப்பக்கம் திருப்பிய முன்னோடியாக இருந்தவர் ஏ.எம்.ராஜா.
ஏ.எம்.ராஜா இசையமைத்த ஆடிப்பெருக்கு படத்தில் அவருக்கு பதிலாக ஜெமினி கணேசனுக்கு பின்னணி பாடிய , அவருக்குப் “போட்டி” என்று கருதப்பட்ட பி.பி.ஸ்ரீநிவாஸுக்கே ” புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது ” என்ற பாடலைப் பாடும் வாய்ப்பை
வழங்கியவர்.மீண்டும் 1975 இல் அவர் இசையமைத்த வீட்டு மாப்பிள்ளை என்ற படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜனையும் “உலகம் உறங்கும் வேளை “என்ற பாட வைத்தவர் ஏ.எம்.ராஜா !
அவர் திரையுலகை விட்டு நீண்ட காலம் ஒதுங்கியிருந்ததால் பெருநட்டம் அடைந்தவர்கள் இசை ரசிகர்களே என்பதை அவர் இசையமைத்த பாடல்களின் இனிமை உணர்த்தி நிற்கிறது. “தனிமையிலே இனிமை காண முடியுமா , காலையும் நீயே மாலையும் நீயே , நிலவவும் மலரும் பாடுது , போன்ற தனித்துவம் மிக்க இசையற்புதங்களை யாரால் மறக்க முடியும்?! அவர் தொடர்ந்து திரைக்களத்தில் இருந்திருந்தால் இது போன்ற எத்தனையோ இசைக்கனிகளை நாம் சுவைத்திருக்கலாம் என்பதையும் , தமிழ் சினிமா அவர் மூலம் எத்தனையோ இனிய மெட்டுக்களால் வளம் பெற்றிருக்கும்என்பதையும், இப்படியான ஒரு மாபெரும் கலைஞன் ஒதுங்கி விட்டானே என்ற ஏக்கமும் அவரது இசையின் பரம ரசிகனான எனக்கு பலமுறை ஏற்படுவதுண்டு.
” திரை இசை அலைகள் ” என்ற நூலில் ஏ.எம்.ராஜா குறித்து அதன் ஆசிரியர் வாமனன் மிக அழகாக விவரிக்கின்றார்.
” படித்துப் பட்டம் பெற்றவர் ராஜா, கண்டிப்பும் கட்டுப்பாடும் கொண்டவர்.தன பணியைக் குறித்து படு சீரியஸான கண்ணோட்டம் உடையவர்.தன்னுடன் பணியாற்றுபவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பார்.சினிமா உலகின் நெளிவு -சுளிவுகளும், சினிமா நபர்களுடன் பழகும் போது காட்ட வேண்டிய நீக்கு போக்குகளும் , ராஜாவுக்கு கைவராத விஷயங்கள்.தமிழ் சினிமாவில் அவர் கொடிகட்டிப் பறந்த போதுஇதெல்லாம் குறைகளாகத் தெரியவில்லை.காலம் மாறாத தொடங்கிய போது ராஜா அன்னை மாற்றிக் கொள்ளத் தயாரில்லை. ………தான் எதிர்பார்க்கிற சூழ்நிலை ஒரு இடத்தில் இல்லை என்றால் , ஒலிப்பதிவு கூடத்தை விட்டு பேசாமல் வீட்டுக்குச் சென்றுவிடக் கூடியவர் ராஜா . ” இப்படி பலமுறை நடந்திருக்கிறது ” என்கிறார் ஜிக்கி…..தமிழ் திரையுலகில் தன்னை சிலர் ஒதுக்க நினைக்கிறார்கள் என்று சந்தேகப்பட்ட ராஜா தானே ஒதுங்கி விட்டார். [தகவல் : திரை இசை அலைகள் – வாமனன் ]
1980 களில் வெளிவந்த அவரது பேட்டியில் ஒன்றில் “நல்ல இசை வரவேண்டும் என்றால் இன்னாருக்கு இன்னார் பாடுவது என்ற முறை இல்லாமல் போக வேண்டும் ” என்ற கருத்தை அவர் வலியுறுத்தியதும் இங்கே நினைவுக்கூரத்தக்கதாகும்.
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் முத்துலிங்கம் எழுதிய வீர உணர்வுமிக்க ஒரு பாடல் பதிவின் போது, அந்தப்பாட்டை ஜேசுதாஸ் பாட வேண்டும் என்பது எம்.ஜி.ஆர் விருப்பம்.ஆனால் முத்துலிங்கம் “இந்தப்பாட்டை டி.எம்.சௌந்தரராஜன் பாடினால் நல்லாயிருக்கும் ” என்று எம்.ஜி.ஆரிடம் கூறிய போது “இப்படி சொல்லும்படி எம்.எஸ்.வி சொன்னாரா ” என்று எம்.ஜி.ஆர் கேட்டார் என முத்துலிங்கம் ஒரு காணொளியில் கூறுகிறார். எம்.ஜி.ஆரின் விருப்பம் கோவை சௌந்தரராஜன் என்பதையும் பதிவு செய்கிறார் முத்துலிங்கம்.
இது போலவே பதிபக்தி படத்தில் ” வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே ” என்ற பாடலை மூன்று பாடகர்கள் பாடி இறுதியாக டி.எம்.எஸ்.பாடியதே தெரிவு செய்யப்பட்டது என்று எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு பேட்டியில் கூறினார். அதற்கான காரணம் வெவ்வேறு கருத்து நிலவியது என்பதும் விஸ்வநாதன் கருத்தை நியாயப்படுத்த கூறிய கருத்து இது என்பதும் வெள்ளிடைமலை.
தங்களுக்குப் பிடித்த பாடகர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியவர்கள் , “இன்னாருக்கு இன்னார் தான் பொருத்தம் ” என்று கூறி வந்தவர்கள் பின்னாளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்ற யாருக்கும் பொருத்தமில்லாத குரல்களையும் அறிமுகம் செய்தார்கள் எனபது மட்டுமல்ல எடுத்த எடுப்பிலேயே
எம்.ஜி.ஆருக்கும் ,சிவாஜிக்கும் பாடவும் வைத்தார்கள் என்பதில் எந்த விதமான தர்க்க நியாயமுமில்லை.
1950 களில் வெளிவந்த எம்.ஜி.ஆர் , சிவாஜி படங்களை பார்த்தால் அவர்கள் பெரும் பாலும் சமூகக்கதைகளில் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தமையும் , பாடல்களின் இயல்பும் யார் பாடுகிறார்கள் என்ற அக்கறையும் இருக்கவில்லை என்பதையும் அவதானிக்க முடியும். நாயக அந்தஸ்து அங்கே குறுக்கிடாமல் கதையின் அம்சம் முக்கியமாக கருதப்பட்டது.
பெற்றதாய் [1953] படத்தில் ” நிலாவிலே ஒய்யாரம் உலாவுதே அநுராகம் ” , ” ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு ” என்ற இரு காதல் பாடல்கள். இரண்டு பாடல்களையும் இரு வேறு பின்னணிப்பாடகிகளுடன் பாடியவர் ஏ.எம்.ராஜா. .முதலாவது பாடல் துடுக்குத்தனமும், இனிமையும் மிக்க குரலிலும் , இரண்டாவது பாடல் [ ஏதுக்கு அழைத்தாய் ] மென்மையும்,அப்பாவித்தனமும் , இனிமையும் நிறைந்திருக்கும் குரலிலும் அமைந்திருந்தது.
முதல் பாடலைப் பாடியவர் அக்காலத்தில் புகழபெற்ற இசையமைப்பாளரான சி. ஆர். சுப்பராமனின் இசையில் தேவதாஸ் படத்தில் இடம் பெற்ற “எல்லாம் மாயை தானா “, ” உறவுமில்லை பகையுமில்லை” போன்ற பாடல்களை பாடிய கே.ராணி
“ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு ” என்கிற மென்மையும் இனிமையுமிக்க அந்தப்பாடல் தான் பி.சுசீலா பாடிய முதல் பாடல்.பின்னாளில் இதமாக தழுவிய குளிர் தென்றலின் தளிர்நடை அந்தக்குரல்! அமைதியாய் ஓடும் சிற்றோடையின் லயமும் இளம் பெண்ணின் அப்பாவித்தனமுமான இளங்குரலின் தன்மையும் அப்பாடலில் இருந்தது.
ஏ. பி.கோமளா,கே.ராணி பி.லீலா , ஜிக்கி , போன்ற 1950 களின் இனிமையான குரல்களுக்கு மத்தியில் எடுத்த எடுப்பிலேயே அக்காலத்தில் புகழபெற்றிருந்த ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றவர் சுசீலா.ஒரு முக்கியமான அறிமுகப் பாடலாயினும் தொடர்ந்து அதிகமான பாடும் வாய்ப்புகள் சுசீலாவுக்கு கிடைக்கவில்லை.ஆனாலும் வாசத்தை தொடராக அள்ளி வீசாத பூந்தென்றல் அவ்வப்போது வீசவும் செய்தது.
எத்தனையோ விதம் விதமான பெண் குரல்கள் ஒலித்த அந்தக்காலத்தில் 1955 இல் வெளியான கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் ஏ. ராமராவ் இசையமைப்பில் அவர் பாடிய சில பாடல்கள் புகழ் பெற்றன.அதைத்தொடர்ந்து பல பாடல்கள் …..!
01 தன்னாலே வரும் காசு – செல்லப்பிள்ளை [1955] – பி.சுசீலா -இசை :ஆர்.சுதர்சனம்
02 அந்த நாள் தான் இதடா – அனார்கலி [1957] – பி.சுசீலா -இசை :ஆதிநாராயணராவ்
03 எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுது ஏனோ – கணவனே கண் கண்டா தெய்வம் [1955] – பி.சுசீலா -இசை :ஏ.ராமராவ்
04 அன்பில் மலர்ந்த நாள் ரோஜா – கணவனே கண் கண்டா தெய்வம் [1955] – பி.சுசீலா -இசை :ஏ.ராமராவ்
05 உன்னைக் கண் தேடுதே – கணவனே கண் கண்டா தெய்வம் [1955] – பி.சுசீலா -இசை :ஏ.ராமராவ்
06 தங்கச்சி சிலையே வாடா – இரு சகோதரிகள் [1957] – பி.சுசீலா -இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்
07 அமுதைப் பொழியும் நிலவே – தங்கமலை ரகசியம் [1957] – பி.சுசீலா -இசை :டி.ஜி.லிங்கப்பா
08 ஜோரான ரூபமே – இரு சகோதரிகள் [1957] – பி.சுசீலா -இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்
இவை போன்ற பல பாவங்களை காட்டும் பாடல்கள் அவரின் பெயரை அழுத்தமாக பதிவு செய்தன. அதே ஆண்டும் அதைத் தொடர்ந்தும் வந்த ஆண்டுகளில் வெளிவந்த அவர் பாடிய பல பாடல்கள் அவரின் பெயர் சொல்லும் புழபெற்ற பாடல்களாக விளங்கின.
01 பிருந்தாவனமும் நந்த குமாரனும் – மிஸ்ஸியம்மா [1955] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்
02 தேன் உண்ணும் வண்டு – அமரதீபம் [1955] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :டி.சலபதிராவ்
03 விண்ணோடும் முகிலொடும் – புதையல் [1957] – பி.சுசீலா + சி.எஸ்.ஜெயராமன் – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 கண் மூடும் வேளையிலும் – மகாதேவி [1957] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 தென்றல் உறங்கிய போதும் – பெற்ற மகனை விற்ற அன்னை [1957] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் – தலை கொடுத்தான் தம்பி [1958] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
07 வருவேன் நானுனது மாளிகைக்கே – மல்லிகா [1955] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :டி.ஆர்.பாப்பா
08 ஆண்கள் மனமே இப்படித்தான் – நான் வளர்த்த தங்கை [1957] – பி.சுசீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை :பெண்டயலாயா நாகேஸ்வரராவ்
09 ஆசையினால் மனம் – கல்யாணப்பரிசு [1959] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :ஏ.எம்.ராஜா10 ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா – மஞ்சள் மகிமை [1955] – பி.சுசீலா + கண்டசாலா – இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்
11 கோடை மறைந்தால் – மஞ்சள் மகிமை [1955] – பி.சுசீலா + கண்டசாலா – இசை :மாஸ்டர் வேணு
12 மாறாத சோகம் தானோ – மஞ்சள் மகிமை [1955] – பி.சுசீலா + கண்டசாலா – இசை :மாஸ்டர் வேணு
13 முல்லைமலர் மேலே – உத்தமபுத்திரன் [1957] – பி.சுசீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை: ஜி.ராமநாதன்
14 அன்பே அமுதே – உத்தமபுத்திரன் [1957] – பி.சுசீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை: ஜி.ராமநாதன்
15 சிட்டு சிரித்தது போலெ – உத்தமபுத்திரன் [1957] – பி.சுசீலா + டி.எம்.சௌந்தரராஜன் – இசை: ஜி.ராமநாதன்
16 விழி வாசல் அழகான மணி மண்டபம் – பெண் குலத்தின் பொன் விளக்கு [1959]- பி.சுசீலா + சீர்காழி -இசை :மாஸ்டர் வேணு
17 வண்டு ஆடாத சோலையில் – எங்கள் குல தேவி [1959] – பி.சுசீலா + சீர்காழி – இசை :கே.வி.மகாதேவன்
18 உலாவும் தென்றல் நிலாவை பிரிவது – கோடீஸ்வரன் [1959] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :எஸ்.வி.வெங்கடராமன்
19 யாழும் குழலும் உன் மொழி தானோ – கோடீஸ்வரன் [1959] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :எஸ்.வி.வெங்கடராமன்
20 நினைக்கும் போதே ஆகா – இல்லறமே நல்லறம் [1958] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :கே.ஜி.மூர்த்தி
21 வாடிக்கை மறந்ததும் ஏனோ – கல்யாணப்பரிசு [1959] – பி.சுசீலா + ஏ.எம்.ராஜா – இசை :ஏ.எம்.ராஜா
1950 களில் வெளிவந்த எம்.ஜி.ஆர் , சிவாஜி படங்களை பார்த்தால் அவர்கள் பெரும் பாலும் சமூகக்கதைகளில் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தமையும் , பாடல்களின் இயல்பும் யார் பாடுகிறார்கள் என்ற அக்கறையும் இருக்கவில்லை என்பதையும் அவதானிக்க முடியும். நாயக அந்தஸ்து அங்கே குறுக்கிடாமல் கதையின் அம்சம் முக்கியமாக கருதப்பட்டது.
கதாபாத்திரங்களின் உணர்வுகளை அதிகமாக அல்லது மிகையாக உணர்வுகளை வெளிப்படுத்தத் தொடங்கிய 1960 களிலேயே உணர்வுச் சிதறல்களை கதையுணர்ப்பிலேயே வைக்கும் புதிய அலை பிறந்தது.உணர்வுகளின் நுண்மைகள் மிகைப்படுத்தப்பட்டன. அழ வைப்பது அல்லது சோகத்தைப் பிழிய வைப்பது பெரிய கலையாகக் கருதப்பட்டது எனலாம்.
காலம் மாறும் பொது அதற்கேற்ற நெறிகள் தோன்றுகின்றன.தனிமனித மிகையுணர்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் அது சார்ந்த இசையை ,அந்தப்பொந்தில் நின்று உழாமல் ,புதுமை நோக்கில் எளிமையுடனும் இனிமையுடனும் பாய வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள்!
ஹிந்தியில் பாடகர் , பாடகிகளை , நௌசாத் , எஸ்.டி.பரமன் , சி.ராமச்சந்திரா , ஹேமந்த்குமார், ஷங்கர் ஜெய்கிஷன் , சலீல் சௌத்ரி, மதன் மோகன் போன்ற இசையமைப்பாளர்கள்குறிப்பாக லதா மங்கேஷ்கரை , எவ்விதம் சிறப்பாகப் பயன்படுத்தி பாடல்கள் தந்தார்களோ , அது போல மெல்லிசைமன்னர்களும் தென்னிந்திய பாடகர், பாடகிகளை பயன்படுத்தி பல இனிய பாடல்களைத் தந்தார்கள்.
அதிலும் குறிப்பாக சுசீலாவின் குரலை வியக்கத்தக்க அளவில் பயன்படுத்தினார்கள்.
[ தொடரும் ]