வெந்தயம்
வெந்தயம் என்பது ஒரு மூலிகை பொருளாகும். இது உணவுகளிலும், மருத்துவ பொருள்களிலும் அதிகம் பயன்படுகிறது. இது ஆங்கிலத்தில் ‘Fenugreek’ அல்லது மெத்தி என அழைக்கபடுகிறது. வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடியது. வெந்தய செடியின் பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டது.
வெந்தயத்தின் பூர்விகம் மத்திய தரைக்கடல் பகுதி, மத்திய ஐரோப்பா, தெற்கு ஐரோப்பா, மற்றும் மேற்கத்திய ஆசியாவின் பகுதிகள் ஆகும். இது விதைகள் மற்றும் இலைகளை கொண்டிருக்கும். வெந்தயம் ஒரு சுவையற்ற பொருளாகும். வெந்தயம் ஆயுர்வேதத்தில், அதன் தனித்துவமான பயன்கள் மற்றும் பண்புகள் காரணமாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
வெந்தயம் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. வெந்தயம் மட்டுமல்லாமல் அதன் கீரையும் சமையலில் பயன்படுத்தபடுகிறது. வெந்தய விதைகள் மசாலா மற்றும் மருந்துகளில் ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
வெந்தயத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.
வெந்தயத்தின் மருத்துவ பயன்கள்
தாய்பால் சுரக்க உதவும்
வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து பாயாசம் போல செய்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். மேலும், சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் சுரக்கும். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்ட வந்தால் விரிந்த கர்ப்பபை விரைவாக சுருங்கும்.
மாதவிடாய் வலி தீரும்
மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி மற்றும் அசௌகரியத்திற்கு வெந்தயம் ஒரு மிகச்சிறந்த தீர்வாக அமைகின்றது. வெந்தயத்தை தொடர்ந்து உண்டு வந்தால் தவறும் மாதவிடாய் மற்றும் திட்டுகள் போன்று சூட்டினால் ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் நீங்கும். மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படும் சௌகரியத்தை முற்றிலுமாக குறைக்கின்றது. எனவே, அதை உட்கொள்வதால் மனநிலை சுழற்சி, மன அழுத்தம், பிடிப்புகள், மற்றும் அசாதாரண பசி வேதனை போன்ற மாதவிடாய் நின்ற அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
இருதய பிரச்சனைகளை தீர்க்கிறது
வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் இருதயத்தை பலமாக்குகிறது. இதனால் இருதயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தடுக்க உதவுகின்றது.
பசியின்மையை தீர்க்கும்
வெந்தயம் தொடர்ந்து சாப்பிடுவதால் செரிமான திறன் மேம்படுகிறது. இதனால் பசியின்மை பிரச்சனை தீர்கிறது. வயிறு பொறுமல் நீக்கி குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
தலைமுடி வளர்ச்சிக்கு உதவும்
வெந்தயத்திலுள்ள எண்ணெய் பசை தலைமுடிக்கு வளர்ச்சியையும், கருமை நிறத்தையும் தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் மற்றும் எண்ணெய் தயாரிப்பில் பயன்படுகிறது.
சர்க்கரை அளவை குறைக்கும்
வெந்தயத்தில் அதிக அளவில் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கிறது. எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது
வெந்தயத்தை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் தேவையற்ற ஊளை சதை என சொல்லப்படும் கொழுப்புகள் முற்றிலும் குறைகிறது. இதனால் ஹாட் அட்டாக், ஸ்ட்ரோக், பிடிப்புகள் மற்றும் வாயு பிரச்சணைகள் முற்றிலுமாக தடுக்கப்படுகிறது.
மலச்சிக்கல் பிரச்சனை தீர்கின்றது
காலை வேளையில் வெந்தயம் தொடர்ந்து சாப்பிட்ட வந்தால் நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகள் தீர்கின்றது. உணவை செரிமானம் செய்வதுடன் வயிற்றை நன்கு சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
தொண்டை புண்ணுக்கு நிவாரணம் கிடைக்கும்
தொண்டையில் ஏற்படும் அல்சர், புண், வலி மற்றும் கொப்பளங்கள் ஆகியவற்றை வெந்தயம் முற்றிலும் நீக்குகின்றது. இருமல் மற்றம் தொண்டை கரகரப்பிலிருந்து நிவாரணம் தருகின்றது.
கிட்னி பிரச்சனைக்கு தீர்வு
சிறுநீரகத்தில் கற்கள் மற்றும் தொடர்ந்து எரிச்சல் இருந்தால் வெந்தயத்தை முதல் நாள் இரவு வெது வெதுப்பான நீரில் ஊர வைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் சிறு நீரக எரிச்சல் மற்றும் கிட்னி பிரச்சனைகள் முற்றிலும் தீரும்.
உடல் சூட்டை குறைக்கும்
வெந்தயத்தை ஊர வைத்த தண்ணீரை குடித்து வந்தால் நெஞ்சு எரிச்சல் மற்றும் ஒவ்வாமை தீரும். தொண்டையில் புண்ணால் ஏற்பட்ட இடங்களில் வெந்தய தண்ணீர் படும் போது நல்ல இதமாக இருப்பதுடன் உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிச்சி அளிக்கின்றது.
உடல் சூட்டை குறைக்கும் வெந்தயக் குழம்பு
தினமும் 1 ஸ்பூன் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைந்து கண் எரிச்சல், முடி உதிர்வு, சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி, இவை அனைத்தும் மறைந்துவிடும்.
சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த வெந்தயம் பயன்படுகிறது
தேவையான பொருட்கள்
- கடுகு – 1 ஸ்பூன்
- வெந்தயம் – 1 ஸ்பூன்
- ஜீரகம் – 1 ஸ்பூன்
- பூண்டு ( தோல் உரித்தது ) – 50 கிராம்
- சின்ன வெங்காயம் – 100 கிராம்
- காய்ந்த மிளகாய் – 2
- கறிவேப்பிலை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
- வெந்தய பொடி ( வறுத்து பொடி செய்தது ) – 2 ஸ்பூன்
- புளிக் கரைசல் – தேவையான அளவு
செய்முறை
- முதலில் தேவையான அளவு புளியை கரைத்து நன்கு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு,வெந்தயம்,ஜீரகம், சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் அதில் உரித்து வைத்துள்ள பூண்டை சேர்க்கவும்.
- பூண்டு வதங்கியவுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- பின் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- பூண்டு , வெங்காயம் நன்கு வதங்கியாவுடன் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும்.
- புளிக்கரைசல் நன்கு கொதித்து குழம்பு சுண்டி வரும்போது வறுத்து பொடி செய்து வைத்துள்ள வெந்தயப் பொடியை செரிக்கவும்.
- வெந்தயப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விடவம்.
- சுவையான வெந்தயக் குழம்பு ரெடி.