புலம்பெயர் நாடுகளில் தற்போதைய வெப்பநிலை மிக அதிகமாக காணப்படுகிறது .இவ் உயர்வெப்பநிலை காரணமாக நமது உடலில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் .அது சம்பந்தமான விளக்கங்களை கீழே தந்துள்ளோம்
கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. கோடை வெயிலை சமாளிப்பது கொஞ்சம் சிரமம் தான். அதிலும் இதய நோய்கள் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கோடையை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
ஆரோக்கியத்தில் வலுவாக உள்ள நபர்களால் இந்த கோடை வெயிலை எளிதில் சமாளிக்க முடியும். கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அவர்களது உடல் மேலும் பலவீனமடைகிறது.
இதனால் இதய செயலிழப்பு மற்றும் வெண்டிக்குலர் செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதயத்தின் செயல்பாடுகள் பலவீனமாக உள்ளவர்கள் இந்த வெயில் காலத்தில் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
நீரேற்றத்துடன் இருக்க
அதிக வெப்பத்தின் தாக்கம் மற்றும் நீண்ட நேர உடற்பயிற்சி காரணமாக நமது உடலில் தீவிர நீரிழப்பு ஏற்பட்டு அது ரத்த அழுத்த ஒழுங்குமுறையை பாதிக்கிறது.
இதனால் இதயத்தின் உயிரணு செயல்பாடுகளும் குறைந்து வாஸ்குலார் செயல்பாட்டை பாதிக்கிறது. இதன் காரணமாக பல இதயம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன.
வெயில் காலத்தில் இதய நோய்களைத் தடுக்க உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
பருவ காலங்களில் கிடைக்கும் தண்ணீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் மோர் போன்ற தரவ ஆகாரங்களையும் அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
தண்ணீர் நிறைய குடியுங்கள்.
அதிக உடற்பயிற்சி
குளிர் காலத்தை விடவும் வெயில் காலத்தில் உடற்பயிற்சிகளை மிதமாக்கிக் கொள்வது சிறந்தது.
வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் தீவிர உடற்பயிற்சி செய்வது இதயத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தீவிர உடற்பயிற்சியின் காரணமாக தசைகள் மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரிக்கிறது. இது இதயத்திற்குத் தேவையான ஆக்சிஜன் அளவைக் குறைக்கிறது.
காபி
காஃபைன் அதிகமாக உள்ள டீ, காபியை வெயில் காலத்தில் குறைத்துக் கொள்வது நல்லது. இது இதயத் துடிப்பின் வேகத்தைக் குறைக்கவோ அதிகரிக்கவோ செய்யும். சீரற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும்.
அதோடு காபியில் இருக்கிற டையூரிக் அமிலம் நம்முடைய உடலில் நீர்ச்சத்தை இழக்கச் செய்து விடும்.
ஜீரண சக்தியை மேம்படுத்தும் உணவுகள்
வெயில் காலங்களில் மிக எளிதாக செரிமானம் ஆகும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக்கூடிய ஜிங்க், வைட்டமின் சி மற்றும் போலேட் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதோடு எண்ணெய் உணவுகள், துரித உணவுகளைத் தவிர்த்து, மோர் போன்றவற்றை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உயர் ரத்த அழுத்தம் குறைவதோடு இதய நோய்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
வெளியில் செல்வது
அதிக வெப்பம் உள்ள நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இதய பிரச்சனை உள்ளவர்கள் அதிக வெப்பத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
அதிக வெப்பத்தில் இருப்பதன் காரணமாக ஸ்டோர்க் (stroke) ஏற்படும் அபாயம் அதிகம். அதிக வெப்பம் காரணமாக இதய நோயாளிகளின் இறப்பு விகிதம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
மது அருந்துதல்
கோடை காலங்களில் வெப்பத்தின் காரணமாக இயல்பாகனவே உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுக் கொண்டு இருக்கும். இதில் மேலும் நீர்ச்சத்து குறைவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று மதுப்பழக்கம்.
ஆம். மற்ற காலகட்டங்களை விட கோடை காலத்தில் மது அருந்துவதால் உடல் அதிக அளவு நீர்ச்சத்து குறைபாட்டைச் சந்திக்கும்.
அது அருந்தும் போது உடலின் வெப்பம் அதிகரிக்கிறது. அதனால் வெயில் காலத்தில் மது அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது.
எலக்ரோலைட்
உடலின் எலேக்ரோலைட்டுகளைச் சரியான விகிதத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வெயில் காலத்தில் உண்டாகும் அதிகப்படியான வெப்பத்தால் நம்முடைய உடலின் ஆறறல் குறைந்து கொண்டே போகும்.
அதிலிருந்து விடுபட காற்றோட்டமான இடத்தில் இருக்கப் பழக வேண்டும்.
தண்ணீர் நிறைய குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
உடலின் எலக்ட்ரோலைட்டுகளைச் சீராக வைத்திருக்க வேண்டியது இதயப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் இருந்து உங்களை மீட்க உதவும்.
பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்
சோடியம் குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
பருவ கால காய்கறிகள் மற்றும் பழங்களான தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய், தக்காளி, பீன்ஸ் ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புகைப்பிடித்தலை நிறுத்துங்கள்
வறுத்த உணவுகளை தொடவே கூடாது.
உடலைக் குளிர்ச்சியாகவும் நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும். இருக்கும் இடத்தைக் காற்றோட்டமாக வைத்துக் கொள்ளுங்கள்.