கூந்தலுக்கு சாயம் பூசி கொள்ளபோறீங்களா.. ஒரு நிமிஷம்

இன்றைய கால கட்டத்தில் டை அடிப்பது அதாவது கூந்தலுக்கு சாயம் பூசி கொள்வது என்பது ஃபேஷன் ஆகி விட்டது. நரை தோன்றியவர்கள் மட்டும் டை அடித்தது அந்த காலம்.. இன்று இளைஞர்கள், இளைஞிகள் என்று ஒருவர் விடாது சகலரும் தங்கள் கூந்தலின் நிறத்தை , தங்களுக்கு பிடித்த வண்ணம் மாற்றி கொள்ள முனைகிறார்கள் . இவ்வாறு தங்கள் கூந்தலின் நிறத்தை மாற்றி கொள்ளும் போது , தங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிப்பதை அவர்கள் உணர்கிறார்கள்! கூந்தல் சாயம் அடிப்பது ஒரு புறம் இருக்க , கூந்தல் சாயம் அடிப்பது நல்லதா ?? இதனால் உடல் நல பாதிப்பு எதுவும் உண்டாகுமா?? சாயம் அடிக்க சரியான முறைகள் யாது  ??போன்றவற்றை ஒரு நிமிடமாவது யோசித்து பார்த்ததுண்டா! இல்லையெனில் , மேலே  படிங்க .. உங்களுக்கு தான் இந்த பதிவு!

download

கூந்தலுக்கு சாயம் நல்லதா கெட்டதா என்று ஆராய்ந்து அறிவதற்கு முன்னே ,  கூந்தலை பற்றி சில விடயங்கள் அறிந்து கொள்வோம். கூந்தல் ஆனது , கெராட்டின் என்னும் புரதத்தால் ஆனது. இதே புரதம் தான் நம் நகத்திலேயும் , நம் சருமத்திலேயும் இருக்கிறது என்பது குறிப்பிட தக்கது.  இயற்கையாய் அமைந்த நம் கூந்தலின் நிறம் , யூ மெலனின் , பியோ மெலனின் என இரு மெலனின் நிறமிகளின் இருப்பு விகிதத்தை பொறுத்து மாறுபடும். யூ மெலனின் கூந்தலுக்கு அடர்ந்த நிறங்களான கருப்பு , பிரவுன் நிறங்களை கொடுக்க , பியோ மெலனின் கூந்தலுக்கு வெளிர்  நிறங்களை  கொடுக்கிறது. இந்த இரு மெலனின் நிறமிகளின் இருப்பு விகிதம் , ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.. அதாவது அது அவரவர் மரபணு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம்! ! மனிதனுக்கு வயது ஆக  ஆக , இந்த மெலனின் நிறமிகளை கூந்தல் படிப்படியாக இழந்து விடுகிறது. ஆகையால் தான் , வயதானவர்களுக்கு நரை தோன்றி விடுகிறது!

images (1)
images (2)

இனி தலை முடிக்கு நிரந்தரமாக  சாயம் எவ்வாறு ஏற்றப்படுகிறது என்று  பார்க்கலாம். நம் தலை முடிக்கு நிரந்தரமாக சாயம் ஏற்றுவது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. நமது தலை முடியை மூன்று பாகங்களாக பிரித்து கொள்ளலாம். அவை , புறத்தோல்(Cuticle ), புறணி பகுதி (Cortex ),மைய பகுதி (Medulla ). இதில் புறத்தோல் பகுதி(Cuticle) , தலை முடியின் , பாதுகாப்பு கவசம் போன்றது! இந்த பகுதியை துளைக்காமல் , தலை முடியில் நிரந்தரமாக சாயம் ஏற்றுவது என்பது நடக்கவே நடக்காத காரியம் ! அடுத்தது புறணி பகுதி.. இந்த பகுதியில் தான் , முடிக்கு இயற்கையான நிறத்தை அருளும் , மெலனின் நிறமிகள் அமைந்து இருக்கின்றன.மேலும் , தலை முடி உலர்ந்து விடாமல் , ஈரத் தன்மையோடு விளங்க வழி செய்வதும்  இந்த புறணி பகுதி(Cortex) தான்!

images

தலை முடிக்கு நிரந்தரமாக சாயம் ஏற்றுவதற்கு , முடியின் பாதுகாவலன் ஆன புறத்தோல் பகுதியை சற்றே தளர்த்தி விட வேண்டும். இதை செயல்படுத்துவதற்கு , கூந்தல் சாயங்களில் அம்மோனியா(Ammonia) சேர்க்கப்படுகிறது! இப்பொழுது புறத்தோல் பகுதியை தளர்த்தியாயிற்று, இனி கூந்தலின் இயற்கையான நிறத்தை மாற்றுவதற்கான வேலைகளை பார்க்கலாம்! அந்த வேலையை திறம்பட செய்வதற்கு முன்னே ,உங்கள் கூந்தலின் இயற்கையான நிறத்தை கூண்டோடு ஒழித்து விட வேண்டும் ! அந்த வேலையை திறம்பட செய்ய திருவாளர் பெராக்ஷைட்(Peroxide) களம் இறக்கப் படுகிறார். அவர் , நம் கூந்தலுக்கு , இயற்கையான நிறத்தை அளிக்கும் , மெலனின் நிறமிகளை போட்டு தள்ளுகிறார்! அதன் பின்னே , நீங்கள் ஆசைப்பட்ட செயற்கை நிறத்தில்  கூந்தலுக்கு சாயம் இடப்படுகிறது! நன்கு சாயம் காய்ந்த பின்னே , தண்ணீரை கொண்டு கூந்தல்  கழுவ படுகிறது! அவ்வாறு கழுவி முடிந்த பின்னே , புறத்தோல் தன்  இயல்பு நிலைக்கு கொண்டு வரப் விடுகிறது! என்னதான் புறத்தோல்(Cuticle) இயல்பு நிலைக்கு கொண்டு  வரப்பட்டிருந்தாலும் , கூந்தலுக்கு  சேதம் ஆனது ஆனது தான்! அதன் இழப்பை எதை கொண்டும் ஈடு செய்ய முடியாது!எப்படி வாழை பழத்தை தோல் உரித்த பின்னே , உரித்த தோல் கொண்டு மூடி , அதை பாதுகாக்க முடியாதோ , அதே போல் , புறத்தோலை தளர்த்தி , தலை முடிக்கு சாயம் ஏற்றிய பின்னே , அதை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாலும், அதனுள் இருக்கும் புறணி பகுதி(Cortex) , பரிபூரண பாதுகாப்போடு விளங்குகிறதா என்பது சந்தேகம் தான்!

hair-dye-presentation-16-638
Normal and Damaged hair

தலைக்கு சாயம் அடிப்பதனால் நச்சு பொருட்கள் நம் உடம்பினுள்ளே புகுந்து கொள்ளும் வாய்ப்பு சற்று அதிகம் தான்! நச்சு பொருட்கள் நம் உடம்பினுள்ளே , மூன்று வழிகளில் உள்நுழைகிறது. அவை, உண்ணுவது மூலம் , நுகர்வது மூலம்  மற்றும் தோல் உறிஞ்சுதல் மூலமாக! தலைமுடிக்கு  சாயம் அடிக்கும் போது ,தலையின் மேற்பகுதி வழியாக ,நச்சு பொருட்கள் , உடம்பினுள் நுழைந்து , இரத்தத்தில் கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்! உடம்பினுள் நுழையும் நச்சு பொருட்களை , நச்சு நீக்கம் செய்வது , கல்லீரலின் முக்கியமான வேலைகளில் ஒன்று!இரத்தத்தில் அதிகப்படியான நச்சு பொருட்கள் சேர்ந்து விடும் போது , கல்லீரல் சரியாக தன்  வேலையை செய்து முடிக்க முடியாமல் , சற்றே திணறி தான் போய் விடுகிறது!  கூந்தலை பாதுகாக்க , சந்தையில் விற்கப்படும் , செயற்கை பொருட்களில் எல்லாம் , நச்சு பொருட்கள் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது! அவற்றுள் , தலைமுடிக்கு அடிக்கப்படும்  சாயம்,அதிகளவு நச்சு பொருட்களை , தன்னுள்ளே கொண்டு முதலிடத்தை பிடிக்கிறது! நாள்பட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் , தலைக்கு சாயம் அடிப்பவர்களாக இருந்தால் , அவர்களுடைய கல்லீரல் , மேலும் , மேலும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதே கசப்பான உண்மை !

4exposureroutes
video-undefined-1C92971B00000578-349_636x358

கூந்தல் சாயத்தில் , அதிக அளவில் நச்சு பொருட்கள் இருக்கிறது என்று அறிந்தோம்! அவற்றுள் முக்கியமான மூன்று நச்சு பொருட்களை இப்பொழுது பார்க்கலாம்..
1)PPD ( p-Phenylenediamine) – இந்த வேதியல் பொருள் , தலை முடிக்கு , செயற்கை நிறத்தை கொடுக்க வல்லது. சுருங்க கூறின் , இது ஒரு சாயம். இந்த சாயம் உபயோகம் செய்த குறுகிய காலத்துக்குள்ளேயே , ஒவ்வாமை , கண் எரிச்சல் , ஆஸ்துமா ,இரைப்பை அழற்சி ,சிறுநீரகச் செயலிழப்பு , தலை சுற்றல் , வலிப்பு , கோமா போன்றவை ஏற்படும்! அதிக காலம் உபயோகம் செய்யும் போது , கல்லீரல் பாதிப்பு , சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது உறுதி !

swellings

2)அனிலின் சாயம்- இந்த வேதியல் பொருள் , கண் , தோல் , மூக்கில் எரிச்சல் உண்டாக்குபவை.. அதிகப்படியான உபயோகம் செய்யப்படும் போது, கண் குருடாகும் வாய்ப்புகள் அதிகம்.

09_oa_a_prospective_clinical_study_01

3)4-ABP – இந்த வேதியல் பொருள் , புற்று நோய் உண்டாக்க கூடிய ஒரு காரணி.
இந்த மூன்று தவிர , கணக்கில் அடங்காத பல நச்சு பொருட்கள் , தலை முடிக்கு அடிக்கப்படும் சாயங்களில் நிறைந்து இருக்கின்றன!

கூந்தல் சாயத்தில் சேர்க்கப்படும் முக்கியமான  மூன்று சாயங்களை கண்டு அறிந்தோம்.இனி உடலுக்கு அதிகளவு சேதம் இல்லாது , தலை முடிக்கு சாயம் இடுவது எவ்வாறு என்று கண்டு அறியலாம்!

1)எப்போதாவது ஒரு முறை , மிக முக்கியமான விசேஷங்களின் போது மட்டும் தலைமுடிக்கு சாயம் ஏற்றி கொள்ளலாம்..இதனால் , அதனுள் இருக்கும் , நச்சு பொருட்களின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பித்து கொள்ளலாம்.

2)தலை முடிக்கு சாயம் ஏற்றும் முயற்சியில் , தலையின் மேற்பகுதியை தவிர்த்து சாயம் போடுவது நலம்! இல்லையேல் , சாயம் , தோலால் உறிஞ்சப்பட்டு , நம் உடம்பில் ஓடும் குருதியொடு , நச்சு பொருட்கள்  கலந்து விடும்.

3)தலை முடிக்கு சாயம் ஏற்றும் போது , கைகளை பாதுகாப்பதற்கு ,  நல்ல ஒரு கையுறை(Glouse) மாட்டி கொள்வது , மிகவும் அவசியம்!

Hair-Dye-Risky-360x240

4)தலை முடிக்கு நிரந்தரமில்லாத சாயம் போடுவது  ஓரளவு நன்மை பயக்கும்! நிரந்தரமில்லா சாயம் போடும் போது , புறத்தோல் தளர்த்தப்படுவதில்லை! சாயம் ஆனது புறத்தோலின் மேலேயே அடிக்கப்படும்.. மூன்று , நான்கு தடவை , ஷாம்பூ போட்டு நன்கு தலையை அலசி விடும் போது , சாயம் கரைந்து ஓடி விடும்.. திரும்ப புதிதாக , கூந்தலுக்கு சாயம் இட்டு கொள்ள வேண்டியது தான்!

how permanent hair colors work
How semi permanent hair colors dye work

செயற்கை கூந்தல் சாயங்களில் நச்சு பொருட்கள் அதிகம் என்று பார்த்தோம்.. இனி இயற்கையில் கிடைக்க பெரும் கூந்தல் சாயங்களை ஒரு நோட்டம் விட்டு விடுவோம்…

1)மருதாணி
இதை அறியாதவர்கள் யாரும் இல்லை! இதை தண்ணீர் விட்டு மையாய் அரைத்து , கூந்தலில் சாயம் இட்டு கொள்ளலாம் .. இல்லையேல் , தேநீர் போன்று , தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்க விட்டு , பின் சக்கையை வடிகட்டி , சாய நீரை , கூந்தலுக்கு நிறம் கொடுக்க பயன் படுத்தி கொள்ளலாம்! அவ்வாறு சாயம் இட்ட கூந்தலை , வெயிலில் ஒரு அரை மணி போல உலர்த்தும் போது ,அழகான நிறம் பெறுவது மட்டுமல்லாமல் , கூந்தலுக்கு ஒரு இயற்கை பளபளப்பும் கிடைக்கும்! பக்க விளைவுகள் எதுவும் கிடையாது!


2) காய்ந்த செம்பருத்தி பூக்களை , பவுடர் ஆக்கி , தண்ணீர் விட்டு மையாய் குழைத்தும் , கூந்தலுக்கு சாயம் இடலாம் !பறித்து காய வைத்த செம்பருத்தி பூக்களை போட்டு தேநீர் தயாரித்தும் , இயற்கையான கூந்தல் சாயம் பெறலாம்.. அவ்வாறு தயாரிக்க படும் , சாய தேநீரை , கூந்தலுக்கு இடுவதற்கு முன்னே , நன்கு ஆறி , குளுமையாக இருக்க வேண்டியது , மிகவும் அவசியம் !


3) தண்ணீர் சேர்த்து அரைக்கப்பட்ட பீட்ரூட் , கூந்தலுக்கு அழகான நிறத்தை கொடுக்கவல்லது!

Beet Juice Temporary Hair Dye DIY

இது போன்ற இயற்கையில் கிடைக்கும் பொருளை கொண்டு, கூந்தலுக்கு சாயம் ஏற்றும் போது , நிரந்தரமில்லா சாயம் மட்டுமே கிடைக்க பெரும் .. மாதத்திற்கு ஒரு முறையோ , இரு முறையோ , கூந்தலுக்கு திரும்பவும் சாயம் இட்டு கொள்ள வேண்டியது தான் ! ஆனால் , கூந்தல் பாதுகாப்பாக இருக்க போவது உறுதி ! மேலும் , கூந்தல் , எண்ணெய் பசை இல்லாது , உலர்ந்து , உடைந்து , ஒன்றும் இல்லாது போய் விடுமோ என்ற அச்சம் இல்லாது நிம்மதியாய் இருக்கலாம் !

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *