கம்பர்மலை பாடசாலை மாணவர்கள் சிரமதானம்


வடமராட்சி  கொம்மந்தறையில்   அமைந்துள்ள   கம்பர்மலை  பாடசாலை    மாணவர்கள்  புதன்கிழமை  (14/05/19)  அன்று  சிரமதானப்பணியில்  ஈடுபட்டனர்.   பாடசாலையை  சுற்றியுள்ள  பகுதிகளில்  கோவில்,  முன்பள்ளி ,  இதற்கு  இடையேயான  வீதி  என்பனவற்றில்,  துப்பரவு  பணிகளில்  ஈடுபட்டனர்.   அதிபர்  அவர்கள்  வழிநடத்த  ஆண்   பெண்   ஆகிய  இருபாலரும்  இதில்  ஈடுபட்டனர்.


 அன்மைக்காலங்களில்  இப்பகுதியில்  துப்பரவு  பணிகளில்  பொதுமக்கள்  அக்கறை  காட்டி  வருகின்றனர்.  கோவில்  திருவிழாவை  முன்னிட்டு  காலை  5 மணிக்கு  துப்பரவுப்  பணிகள்  ஆரம்பிக்கப்படுகிறது.  மாணவர்களும்  ஆர்வத்துடன்  கலந்துகொண்டது  எல்லோராலும்  வரவேற்கப்பட்டது.   இதை தொடர்ச்சியாக  சுத்தமான  சூழலாக  வைத்திருக்க  வேண்டும்  என்பது  எல்லோரது  விருப்பமும்  ஆகும்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *