இரும்புச்சத்து என்பது பல உடல் செயல்பாடுகளுக்கு இன்றியமையாத ஒரு கனிமம் ஆகும். இது இரத்தத்தில் ஆக்ஸிஜனை கொண்டு செல்வதற்கு அவசியமானது. உயிரணுக்களின் சரியான வளர்ச்சி மற்றும் செயல்பாட்டுக்கு சில ஹார்மோன்கள் மற்றும் திசுக்களின் உற்பத்திக்கும் இரும்புச்சத்து அவசியமானது. இந்த இரும்பு அளவு குறையும் போது உடலின் வழக்கமான செயல்பாடுகள் குறைந்து தீவிர இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இந்த இரும்புச்சத்து குறைபாடு குறித்து அறிந்துகொள்வோம்.
இரும்புச்சத்து குறைபாடு ஏன் இரத்த சோகையை உண்டு செய்கிறது?
இரும்புச்சத்து குறைபாடு என்பது தீவிரம் பொறுத்து நபருக்கு நபர் மாறுபடும். ஒட்டுமொத்த ஆரோக்கியம் பொறுத்து இவை மாறுபடும். இலேசான அல்லது மிதமான இரும்புச்சத்து குறைபாடு இருக்கும் போது ஒருவர் எந்த அறிகுறிகளையும் அனுபவிக்க மாட்டார்கள்.
சில நேரங்களில் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை உண்டு செய்யலாம். உடலில் போதுமான இரத்த சிவப்பணுக்கள் அல்லது இரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லாத போது இவை உண்டாகிறது.
இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை என்றால் என்ன?
இரும்புச்சத்து குறைபாட்டின் போது அது இரத்த சிவப்பணுக்களை பாதிக்கும் ஒரு கோளாறு. இது இரத்த சோகையின் பொதுவான வடிவம். உடலில் போதுமான அளவு ஹீமோகுளோபின் உருவாக்க முடியாத போது போதுமான இரும்பு இல்லாத போது இது உண்டாகிறது. இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் கொண்டு செல்ல அனுமதிக்கிறது. இதனால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் போது பல அறிகுறிகள் வெளிப்படுத்துகிறது.
இரும்புச்சத்து குறைபாடு அறிகுறிகள்
- சோர்வு
- பலவீனம்
- தலைச்சுற்றல்
- வெப்பநிலை உணர்திறன்
- குளிர்ந்த கைகள் மற்றும் கால்கள்
- மூச்சுத்திணறல்
- நெஞ்சு வலி
- கவனம் செலுத்துவதில் சிரமம்
- இதய படபடப்பு
- அமைதியற்ற கால் நோய்க்குறி
- உணவு அல்லாத பொருள்களின் மீது ஆசை போன்றவை இருக்கலாம்.
- நகங்கள் உடைவது
- வாயின் பக்கங்களில் விரிசல்
- முடி கொட்டுதல்
- நாக்கு வீக்கம்
- அசாதாரணமாக வெளிர் அல்லது மஞ்சள் தோல்
- ஒழுங்கற்ற இதயத்துடிப்பு அல்லது சுவாசம் விடுதலில் பிரச்சனை.
இரும்புச்சத்து குறைபாட்டுக்கு பொதுவான காரணங்கள்?
ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதம் ஆகும். இதில் உடலின் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனால் இரத்த இழப்பு உண்டாகும் போது இரும்பு குறைபாடு மற்றும் இரத்த சோகை உண்டாகலாம். கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது.
- இரைப்பைக்குழாயில் இரத்தப்போக்கு
- பிரகாசமான சிவப்பு இரத்தம் உண்டு செய்யலாம். அல்லது கருமையான தார் அல்லது ஒட்டும் மலத்தை உண்டு செய்யலாம்.
- அல்சர், பாலிப்ஸ் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் இரும்புச்சத்து குறைபாடு உண்டு செய்யலாம்.
- ஆஸ்ப்ரி அல்லது இப்யூபுரூஃபன் மற்றும் நாப்ராக்ஸன் போன்ற ஸ்டெராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் நீண்ட காலம் எடுக்கும் போது அது ஜிஐ பாதையில் இரத்தப்போக்கு உண்டு செய்யலாம்.
- சிறுநீர் பாதையில் இரத்தப்போக்கு
- காயம் அல்லது அறுவை சிகிச்சை காரணமாக இரத்த இழப்பு
- கடுமையான மாதவிடாய் காலம்
- அடிக்கடி இரத்த தானம் கொடுப்பது
- அடிக்கடி இரத்த பரிசோதனைகள் எடுப்பது
மோசமான உணவு முறை இரும்புச்சத்து குறைபாடு உண்டு செய்யுமா?
மோசமான உணவுப்பழக்கங்கள் உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டு செய்துவிடுகின்றன. நேஷனல் இன்ஸ்டிட்டியூர் ஆஃப் ஹெல்த் சோர்ஸ் படி ஆண்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 மில்லிகிராம் இரும்புச்சத்தும் பெண்களுக்கு 50 வயதுக்கு முன் 18 மில்லிகிராம் மற்றும் அதற்கு பிறகு 8 மில்லிகிராம் வரையும் தேவை என்கிறது.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளில் தானியங்கள், பீன்ஸ், இறைச்சி, இலை பச்சை காய்கறிகள், அசைவ உணவுகளில் மீன் போன்றவற்றை எடுக்கும் போது இரும்பு போதுமான அளவு பெறலாம்.
இரும்பு உறிஞ்சுதல் குறையும் போது இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுமா?
ஒரு நபர் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துகொண்டாலும் சில மருத்துவ நிலைமைகள் மற்றும் மருந்துகள் உடல் இரும்புச்சத்து உறிஞ்சுவதை தடுக்கலாம். இரும்பு உறிஞ்சுதலுடன் சிக்கல்களை உண்டு செய்யகூடிய உடல் ஆரோக்கிய குறைபாடுகளும் உண்டு.
- அழற்சி குடல் நோய் போன்ற செரிமான பிரச்சனை உள்ளவர்கள்
- இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற இரைப்பை குடல் அறுவை சிகிச்சை
- அரிதான மரபணு மாற்றங்கள்.
இரும்புச்சத்து குறைபாடு எப்படி கண்டறிவது? சிகிச்சை முறைகள் என்ன?
அறிகுறிகள் வரலாறு,. கடுமையான மாதவிடாய் இரத்தப்போக்கு அல்லது அடிப்படை மருத்துவ நிலை போன்ற ஏதேனும் ஆபத்து காரணிகள் குறித்து மருத்துவர் விவாதிக்கலாம். மருத்துவர் இரும்புச்சத்து குறைபாடு குறித்து சந்தேகித்தால் இரும்புச்சத்து குறைபாட்டை அறியும் வகையில் உடல் பரிசோதனை செய்யலாம்.
- உட்புற பரிசோதனைகள் தேவையெனில்
- மலம் பரிசோதனை,
- இரத்த பரிசோதனை, எண்டோஸ்கோபி,
- கொலோனோஸ்கோபி அறிவுறுத்தப்படலாம்.
சிகிச்சையில் மருத்துவர் இரும்புச்சத்து மாத்திரைகள் பரிந்துரைக்கலாம். பெரும்பாலான நிலைகளில் மல்டிவைட்டமின் சப்ளிமெண்ட்கள் விட அதிக இரும்புச்சத்து கொண்ட மருத்துவ சப்ளிமெண்ட் தேவை. சிலருக்கு அரிதாக இரும்பு சிதைவு பிரச்சனை இருந்தால் இரும்பை நரம்பு வழியாக வழங்கவும் செய்வார். கடுமையான நிலையில் இரத்த மாற்றம் தேவைப்படலாம். உட்புற இரத்தப்போக்கு இருந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.