பூமிப் பந்தில் ஒரு நாட்டில் பகல் இருக்கும் வேளையில், இன்னொரு நாட்டில் இரவு இருப்பது இயற்கை. இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது. ஆனால் பசிபிக் நாடுகள் சிலவற்றில் இந்திய நேரப்படி இன்று (டிசம்பர் 31) பிற்பகலே புத்தாண்டு பிறக்கிறது. அந்த வகையில் உலகில் முதன்முதலில் புத்தாண்டு பிறக்கும் நாடு எது? கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது? என்கிற விவரங்களை பார்க்கலாம். இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா, கிரிபாட்டி நாடுகளில் முதன் முதலாக புத்தாண்டு பிறக்கிறது. அதாவது, அந்த நாடுகளில் அந்த நேரத்தில் 2020 ஜனவரி 1 அதிகாலை 12 மணி ஆகிவிடுகிறது. அதே போல இந்திய நேரப்படி நாளை காலை, 5.30 மணிக்கு இங்கிலாந்தில் புத்தாண்டு கொண்டாடப்படும். ஜனவரி 1ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கனடா, அமெரிக்காவில் புத்தாண்டு பிறக்கும். நாளை மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடாக பேக்கர் தீவு இருக்கும்.
புத்தாண்டை முதலில் கொண்டாடும் கிரிபாடி தீவு
2020ம் ஆண்டு புத்தாண்டு முதன்முதலில் கிரிபாடி என்ற தீவில் கொண்டாடப்பட்டது. இந்திய நேரப்படி மாலை 4. 15க்கு புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
2020 புத்தாண்டு ஏற்கனவே பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் புத்தாண்டைக் கொண்டாட தயாராகி வருகின்றன. அந்த வகையில் புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடாக மத்திய பசிபிக் கடலில் உள்ள கிரிபாடி தீவு உள்ளது. வாண வேடிக்கையுடன் உற்சாகமாக பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணி 15 நிமிடங்களுக்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதேபோல புத்தாண்டு கடைசியாக பிறக்கும் நாடாக அமெரிக்காவின் அருகில் பசிபிக் கடலில் உள்ள பகேர் தீவு உள்ளது. இந்திய நேரப்படி நாளை மாலை 5 மணி 15 நிமிடங்களுக்கு பிறக்கிறது.