நாம் சாப்பிடும் உணவு இரைப்பைக்குள் செல்கிறது. இரைப்பைக்கு வந்த உணவு ஜீரணம் ஆக மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை பிடிக்கும். எனவே நான்கு மணி நேரம் கழித்து சாப்பிடுவது நல்லது. கல்லீரல் மற்றும் கணையத்தில் இருந்து சுரக்கும் பித்தநீர் உணவை செரிக்கச் செய்கிறது. உணவில் பித்தநீர் கலந்ததும் அதிலிருந்து நுரை பொங்கும். அந்த நுரையே உணவில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய்ச் சத்தை ஜீரணிக்கிறது. இவற்றில் ஏற்படும் மாற்றத்தில் ஜீரண வேலைகள் சீராக நடக்காத போது தான் அஜீரண பிரச்னை துவங்குகிறது. உணவு செரிமானத்தில் முக்கிய பணியாற்றுவது பெப்சின், ரெனின் மற்றும் ஹைட்ரோ குளோரிக் அமிலங்களே. இதில் ஏற்படும் மாற்றங்களால் வயிற்றில் அல்சர் உண்டாகிறது. ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் சுரப்பு அதிகரித்து ரசாயன முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது. இதனால் வயிற்றில் காற்று உருவாகி ஏப்பம் அல்லது புளித்த ஏப்பமாக வெளிப்படுகிறது. அதிகமாக அசைவ உணவுகள் சாப்பிடுவதால் அதை ஜீரணிக்க ஹைட்ரோ குளோரிக் அதிகமாக சுரக்கும். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடாமல் விடுவதால் ஜீரண அமிலங்கள் இரைப்பையில் அல்சரை உண்டாக்குகிறது. உணவுக்குழாய், குடல் மற்றும் குடல் உறிஞ்சிகளை அல்சர் அடுத்தடுத்து பாதிக்கிறது. இதனால் உணவில் இருந்து சத்துகள் உறிஞ்சும் தன்மை குறைகிறது. இதன் அடுத்த கட்டமாக மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, வயிறு உப்புசம், வயிறு மந்த நிலை ஆகியவை ஏற்படுகிறது.
இது போன்ற நோய் அறிகுறி உள்ளவர்கள் கண்டு கொள்ளாமல் விடுவது தவறு. உடனடியாக மருத்துவரை அணுகி, ஆரம்பத்திலேயே தடுப்பதன் மூலம் அல்சர் மற்றும் அது தொடர்பான பிரச்னைகளையும் தடுக்க முடியும். பாதுகாப்பு முறை: நேரத்துக்கு சாப்பிட வேண்டும். உணவை மென்று சாப்பிட வேண்டும். வேகவேகமாக உணவு உட்கொள்வதை தவிர்ப்பது முக்கியம். அடிக்கடி டென்ஷன் ஆகும் மனநிலை உள்ளவர்களுக்கு அடிக்கடி அஜீரண கோளாறு உண்டாகும். இதனால் காலை நேரங்களில் டென்ஷனை குறைக்கும் மூச்சு பயிற்சி மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்ளலாம். உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். உணவு சாப்பிடுவதற்கு முன் பழச்சாறு அல்லது காய்கறி சூப் அருந்துவதன் மூலம் ஜீரண சக்தியை அதிகரிக்கலாம்.
வயிறு முட்ட சாப்பிடுவது, நேரம் தவறி சாப்பிடுவது இரண்டையும் தவிர்க்கவும். சாப்பிட்டவுடன் படுக்ககூடாது. சாப்பிட்டதும் உடற்பயிற்சியோ, குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதோ தவறு. நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்துக்காக சோடா போன்ற குளிர்பானங்கள் சாப்பிடுவதால் பிரச்னை அதிகரிக்குமே தவிர குறையாது. மது, சிகரெட் பழக்கம் மற்றும் சூடான உணவுகளை சாப்பிடுவதால் உணவுக்குழாயில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. நெஞ்சு எரிச்சல் மற்றும் புளித்த ஏப்பம் போன்ற ஆரம்பகட்ட பிரச்னைகளுக்கு உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் பெரிய ஆபத்துகள் ஏற்படாமல் தடுக்க முடியும். சித்த மருத்துவம் மூலமாக அஜீரண கோளாறை போக்க சில அறிய குறிப்புகளை இங்கு பார்ப்போம்.
ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.
தாவர குடும்பத்தைச் சேர்ந்த ஓமம் மிகுந்த மணமுடையது. ஓமத்தில் விட்டமின் பி 1, 2, 3 மற்றும் பாஸ்பரஸ், இரும்பு, சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன.
ஓமம் அஜீரண கோளாறை போக்கும் சிறந்த மருந்து. ஓம எண்ணெயுடன் லவங்க எண்ணெயைச் சேர்த்து, தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் போகும். ஓம எண்ணெயை தடவினால் மூட்டுவலி அறவே குறையும்.
ஓம நீரைக் காய்ச்சி குடித்து வந்தால், கை, கால் நடுக்கம் குணமாகும். நல்லெண்ணெயுடன் பூண்டும் ஓமமும் சேர்த்துக் காய்ச்சி காதில் விட்டால் காதுவலி குறையும்.
சூயிங் கம் (mint chewing gum), புதினா கேப்ஸ்யூல் என அமெரிக்கர்கள் புதினாவை செரிமானக் கோளாறை சரிசெய்யும் உணவாகப் பயன்படுத்திவருகிறனர். நம்மூரில் அசைவ உணவுகள், ரசம் ஆகியவற்றில் செரிமானத்தை எளிதாக்க புதினா அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
புதினா, வயிற்றுக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் உள்ள ஸ்பிங்டர் சதையை (Sphincter muscle) ரிலாக்ஸ் செய்கிறது. இதனால் சாப்பிட்டவுடன் மலம்கழிக்கத் தூண்டும் ‘இரிட்டபுள் பௌல் சிண்ட்ரோம்’ தடுக்கப்படுகிறது.
மலக்குடலில் அமைந்திருப்பது ‘TRPM8’ என்னும் புரோட்டீன். இது, காரசாரமான மசாலா உணவுகளை உண்டு, அவை செரிமானமாகி, மலக்குடலில் பயணிக்கும்போது ஏற்படும். வலி மற்றும் எரிச்சலைப் போக்க உதவும். மசாலா உணவுக் கழிவுகள் மலக்குடலில் பயணிக்கும்போது இயல்பாகவே TRPM8, தனது வேலையைத் தொடங்கிவிடும்.
சோம்பு மசாலா அதிகம் சேர்த்த உணவுகளை உட்கொண்ட பின், சிறிது சோம்பை வாயில் போட்டு மென்றால், அஜீரண கோளாறு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
புதினாவை உணவில் சேர்ப்பதால், இது தூண்டப்படும். இதனால் வாயுபிடிப்பு, வலி, எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட சிரமங்கள் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிமானமாகிவிடும்.
இந்தோனேஷியாவின் மலுக்கா தீவுகளில் பிரபலமான லவங்கம், பின்னர், சீனா, கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பிரபலம் அடையத் தொடங்கியது.
முதலில் சமையலில் சுவை, வாசனைக்காக உலகநாடுகளால் பயன்படுத்திவந்த லவங்கம், அதன் மருத்துவப் பலன்களால் புகழ்பெறத் தொடங்கியது. குறிப்பாக, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் செரிமானத்துக்கு உதவுகின்றன.
லவங்கம், செரிமான அமிலத்தால் வெளியாகும் வாயுவின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் வாயுப்பிடிப்பு, வயிற்று உப்புசம், குமட்டல் உணர்வு (Nausea) நீங்கும். செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கும்.
கொய்யாப்பழம் (250) கிராம்கள் உணவுக்குப்பின் எடுத்துக்கொள்ள வேண்டும்
எலுமிச்சை சாறு மிகவும் பயன் தரும், இதனுடன் ஒரு சிட்டிகை உப்பும், ஒரு தேக்கரண்டி இஞ்சி சாரும் கலந்து அருந்தலாம்.
சுடு தண்ணீர் ஒத்தடம் வயிற்றின் மீது கொடுத்தாலும் அஜீரண கோளாறு நீங்கும்.
சாப்பிட்ட உடன் அரை குவளைக்கு மிகாமல் சுடு தண்ணீர் அருந்துவது நல்லது.
பப்பாளி பழத்தை காலை உணவாக தொடர்ந்து (20) நாட்களுக்கு உண்டுவந்தால் இந்த அஜீரணம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
சீரகத்தை வறுத்து பொடி செய்து, ஒரு டீஸ்பூன் சீரகப் பொடியை ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக நல்ல பலன் கிடைக்கும்.
தேநீர் உணவு உட்கொண்ட பின் ஒரு டம்ளர் மூலிகை தேநீர் அல்லது க்ரீன் டீ குடித்தால், செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
கொத்தமல்லி ஜூஸ் ஒரு டம்ளர் மோரில் 2 டீஸ்பூன் கொத்தமல்லி ஜூஸ் சேர்த்து பருகினால், அஜீரண கோளாறில் இருந்து உடனடியாக விடுபட முடியும்.
இஞ்சி வயிறு சரியில்லாத போது, ஒரு துண்டு இஞ்சியை உப்பில் தொட்டு, வாயில் போட்டு மெதுவாக மென்று அதன் சாற்றினை விழுங்க, செரிமான நீரின் உற்பத்தி தூண்டப்பட்டு, செரிமான பிரச்சனை உடனே நீங்கும்.